• Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய 10 அணைகள் இவை தான் – முதலிடத்தில் எந்த அணை?

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய 10 அணைகள் இவை தான் – முதலிடத்தில் எந்த அணை?

தமிழ்நாட்டில் சிறிய மற்றும் பெரிய அணைகள் என மொத்தமாக 86 அணைகள் உள்ளன. இதில் 3 அணைகள் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் கல்லணை மற்றும் வீராணம் சோழர் ஆட்சி காலத்திலும், செம்பரம்பாக்கம் ஏரி பல்லவர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாபநாசம், பேச்சிப்பாறை, முல்லை பெரியாறு, மேட்டூர் அணை உட்பட மொத்தம் 6 அணைகள் கட்டப்பட்டுள்ளன. காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் அமராவதி, ஆழியார், மணிமுத்தாறு, வைகை, பவானிசாகர் அணை, திருமூர்த்தி அணை, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை என தமிழ்நாட்டின் பெரிய அணைகளை எல்லாம் அவர் கட்டியுள்ளார். கேரளாவில் உள்ள மலம்புழா, பரம்பிக்குளம், மொய்யார் அணை ஆகியவற்றையும் அவரே கட்டியுள்ளார். இப்போது தமிழ்நாட்டில் உள்ள டாப் 10 மிகப்பெரிய அணைகள் என்னென்ன என்று பார்ப்போம்!

பாபநாசம் அணை

வேளாண்மை, நீர்பாசனம், நீர்மின் சக்தி, வெள்ளத்தை தடுப்பது போன்ற பல காரணங்களுக்காக உலகில் அணைகள் கட்டப்படுகின்றன. பொதுவாக ஒரு நீரோட்டத்தை தடுத்து நீர் தேக்கி வைக்க அணைகள் எழுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் 10 ஆவது இடத்தில் இருப்பது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை ஆகும். இது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாபநாசம் மலை மீது 1942 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 200 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 147 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையின் முழு கொள்ளவு 5530 மில்லியன் கண அடி ஆகும். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தாமிரபரணி ஆறு வழியாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், இந்த அணையில் செயல்பட்டு வரும் நீர் மின் உற்பத்தி நிலையம் மூலமாக 29 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது .

aliyardam1

ஆழியார் அணை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 24 கிமீ தூரத்தில் வால்பாறையின் அடிவாரத்தில் இந்த ஆழியார் அணை இந்த பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. வால்பாறை மற்றும் அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து வீணாகும் நீரை தேக்கி வைக்க முன்னாள் முதல்வர் காமராஜரால் 1962 இல் ஆழியார் அணை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு அருகில் தீம் பார்க், குரங்கு நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளதாலும், ஆழியார் அணை இயற்கை சூழலுக்கு மத்தியில் அமைந்திருப்பதாலும் இந்த அணை ஒரு பிரபல சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. வால்பாறை செல்லும் எந்த சுற்றுலாப் பயணியும் ஆழியார் அணைக்கு செல்வது வழக்கம்.

முல்லை பெரியார் அணை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியார் அணை தமிழ்நாட்டின் 8 ஆவது பெரிய அணையாகும். முல்லையாறு மற்றும் பெரியாறு ஆகிய இரு நதிகளும் சேரும் இடத்தில் இந்த அணை கட்டப்பட்டுள்ளதால் இதற்கு முல்லை பெரியாறு அணை என்று பெயர் வந்தது. இந்த பெரிய அணையை கட்டியதும் ஐயா காமராஜர் தான். இந்த அணை சுண்ணக்கல் மற்றும் சர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடைஈர்ப்பு அணையாகும். 1200 அடி நீளம் கொண்ட இந்த அணை 176 அடி உயரம் கொண்டது, இதில் 152 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும். இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன் பெறுகின்றனர்.

solayar dam

சோலையார் அணை

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் இருந்து 20 கிமீ தொலைவில் ஆனைமலை பகுதியில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தமிழ்நாட்டின் மிக ஆழமான அணையாகவும், ஆசியாவின் 2 ஆவது ஆழமான அணையாகவும் உள்ளது. இந்த இடம் 6-7 கிமீ தூர அளவுக்கு நீண்டு உள்ளது. இந்த அணை பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்து விடக்கூடிய நீரானது பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது.

மணிமுத்தாறு அணை

தமிழ்நாட்டில் 6 ஆவது பெரிய அனையான மணிமுத்தாறு அணை திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆற்றின் மீது 1958 ஆம் ஆண்டில் அந்நாள் முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது. இந்த அணையில் 118 அடி வரை நீர் தேக்கி வைக்க முடியும். 3 கிமீ தூரத்திற்கு நீண்டு இருக்கும் இந்த அணை 5500 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணை மூலம் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 65,000 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இந்த இடம் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

Sathanur dam

சாத்தனூர் அணை

தமிழ்நாட்டின் 5 ஆவது பெரிய அணையாக இருக்கும் சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம் சின்னகேசவ மலைகளுக்கு நடுவே 1958 இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7300 மில்லயன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணை திருவண்ணாமலை மாவட்டம் உட்பட பல ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதிக்கும் உபயோகமாக உள்ளது. இந்த அணையில் தான் ஆசியாவின் மிகப்பெரிய முதலை பண்ணை ஒன்று அமைந்து இருக்கிறது.

கல்லணை

உலகிலேயே பழமையான அணைகளில் ஒன்றாக 1 ஆம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை 2000 ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக நின்று சோழர் புகழைச் சாற்றுகிறது. காவரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 1090 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த அணை முழுக்க கல்லும் களி மண்ணும் மட்டுமே கொண்டு கட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வசதியே இல்லாத அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த அணை எத்தனை ஆண்டுகளாக வெள்ளப்பெருக்கை தடுத்து வருவதை பார்ப்பதற்கு மிகவும் அதிசயமாக இருக்கிறது. இந்த அணை காவிரி ஆற்றை கொள்ளிடம் மற்றும் காவரி என இரண்டு நதிகளாக பிரிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை திருச்சி, தஞ்சாவூர், நாகை உட்பட பல மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான பாசன நிலங்களுக்கு உயிர் நாடியாக விளங்குகிறது.

vaigai dam

வைகை அணை

வைகை அணை, வைகை ஆற்றின் குறுக்கே தேனி மாவட்டத்தில் 1959 ஆம் ஆண்டு காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம். தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த அணையின் மூலமாக 6 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த அணை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் உள்ளது/

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கட்டப்பட்டுள்ள இந்த அணை ஒரு மணல் அணையாகும். பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய அணையாகவும், ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையாகவும் உள்ளது. காமராஜர் அவர்களால் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை சுமார் 8 கிமீ நீளமுள்ள அணையாகும். 130 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 120 அடி உயரம் வரை நீர் தேக்கி வைக்கலாம். இந்த அணையில் 2 நீர் மின்சார உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்த அணையில் இருந்து திறந்து வைக்கப்படும் நீரானது, கொடிவேரி மற்றும் காலிங்கராயன் அணைக்கட்டு மூலமாக பாசன வசதிக்கு உதவுகிறது.

mettur dam

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் மேட்டூர் அணை தான் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அணையாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது. இந்த அணையை ஸ்டான்லி என்பவர் கட்டியதால், இதற்கு ஸ்டான்லி அணை என்ற பெயர் இருந்தது. இந்த அணை 1934 இல் கட்டிமுடிக்கப்பட்ட போது, இது உலகிலேயே மிக உயரமான அணையாகவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையாகவும் இருந்தது. இந்த அணையின் அதிகபட்ச உயரம் 216 அடி ஆகும். இதில் 120 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது! இந்த அணை மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குவதில் ஆச்சர்யம் இல்லை!!!

More News

    Read more about: interesting facts dams tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+