Search
  • Follow NativePlanet
Share
» »ஆளை விழுங்கும் மலை.. தலையை துண்டாக்கும் கிராமம் - நம்ம ஊர்ல இப்படியும் இடங்கள் இருக்கு!

ஆளை விழுங்கும் மலை.. தலையை துண்டாக்கும் கிராமம் - நம்ம ஊர்ல இப்படியும் இடங்கள் இருக்கு!

By Udhaya

சீனாவின் ஊடுறுவல், ஆளை விழுங்கும் மலை, சென்றால் புதைக்கும் மலைப்பகுதி, மாவோயிஸ்ட், நக்சலைட் நடமாட்டம், சென்றால் தலையைத் துண்டாக்கும் கிராம மக்கள், அதிக பனிப்பொழிவு, வெய்யில் கொடுமை என நிறைய பிரச்னைகளால் ஒரு சில இடங்களில் சுற்றுலாவுக்கு அனுமதி இல்லை. அல்லது அங்கெல்லாம் சுற்றுலா செல்வது அதீத ரிஸ்க் ஆகும். அவற்றில் இந்தியாவில் உள்ளே சென்றால் தலையைத் துண்டாக்கும் கிராமம், ஆளை விழுங்கும் அதிசய மலை என நிறைய அதிசயங்கள் காணப்படுகின்றன. வாருங்கள் அந்த இடங்களைப் பற்றி காணலாம்

அக்சய் சின்

அக்சய் சின்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அக்சய் சின் எனும் பகுதி சுற்றுலாவுக்கான பல அம்சங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மிக அழகிய இயற்கை காட்சிகள் காணக்கிடைக்கின்றன. மலையின் கண்களில் நாம் பட்டுவிட்டால் நம்முடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளாமல் நம்மை விடவே விடாது. அந்த அளவுக்கு மிக அழகிய மலை. வானத்தின் வெண்மை கலந்த நீலமும், இங்குள்ள ஏரியில் கருமை கலந்த நீலமும் இணைந்து காட்சி தரும்போது பா.ரஞ்சித் படைத்தை பாப்பதற்கு ஒப்பான நிறக்கலவையை கண்முன்னே நிறுத்துகின்றன.

ஆனால்....

இங்கு சுற்றுலா செல்ல அனுமதி இல்லை. ஏன் தெரியுமா.. இது சீன இந்திய எல்லை. இங்கு செல்வது அவ்வளவு பாதுகாப்பில்லை என்பதால் இந்த இடத்தின் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இங்கு செல்வது மிகவும் ரிஸ்க்.

1

1

அக்சய் சின்னின் அழகிய வண்ணக் காட்சி

Jochen Westermann

2

2

வானம் நீருடன் இணைந்து நீலத்தை பிரசவிக்கும் தருணம்

Prabhu B

3

3

வெண்மை நிறத்தில் நீண்டு வளர்ந்து பச்சை பசுமை மரங்கள்

Codik

கேரளத்தின் அமைதி பள்ளத்தாக்கு

கேரளத்தின் அமைதி பள்ளத்தாக்கு

கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள அமைதி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, நீலகிரி மலைகளை ஒட்டியவாறு மிகவும் அழகாக காட்சி தருகிறது. இங்கு சுற்றுலாவுக்கான அம்சங்கள் நிறைந்தே காணப்படுகிறது. இங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றாலும் இந்த பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த இடத்துக்கு செல்வது ரிஸ்க் ஆன விசயமாகும்.

Jaseem Hamza

1

1

பால் போன்ற மேகங்களும் நீல நிற மலைகளும் பச்சை நிறத்தில் மரங்களும் கண்கொள்ளா காட்சி

MOHAMMED IRFAN P

 2

2

பச்சை பசேலென்ற பசுமை பள்ளத்தாக்கு

Jaseem Hamza

3

3

இயற்கையின் நடுவே வெண்ணிறத்தில் ஓடும் நதி

Jaseem Hamza

சம்பல் ஆறு

சம்பல் ஆறு

பாலிவுட் திரைப்படங்களில் இதன் அழகை ரசித்திருக்கலாம். அநேக படங்களில் இந்த இடம் காட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கு உள்ள நீர்நிலைகள் கண்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். மிகவும் சிறப்பான அம்சமாக சம்பல் ஆறு நேர்த்தியான அமைப்பை பெற்று இவ்விடங்களை வளமாக்குகிறது. இருந்தாலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தர யோசிக்கிறார்கள். இங்கு செல்வது பாதுகாப்பற்றது என்று நினைக்கிறார்கள்.

Jangidno2

 1

1

ஆற்றுக்கு வருகை தரும் பறவைகள்

J.M.Garg

2

2

குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை

LRBurdak

3

3

ஆற்றின் அழகிய தோற்றம்

Neer Rajora

மனாஸ் தேசிய பூங்கா

மனாஸ் தேசிய பூங்கா

இந்தியாவின் அழகான தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது தீவிரவாதிகள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக அறியப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம் மனாஸ் ஆற்றின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எண்ணற்ற விலங்குகள் காணப்படுகின்றன.

Lonav Bharali .

1

1

ஆற்றின் கண்கவர் புகைப்படம்

Dasdhritiman

துரா

துரா

மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் துரா.. இது இந்தியாவில் அமைந்திருந்தாலும் இங்கு அவ்வளவு எளிதில் இந்திய மக்கள் யாரும் சென்றுவிடமுடியாது. இதன் அருகாமையில் நிறைய கிராமங்கள் இருக்கின்றனவாம். அங்கு சென்றாலே அங்குள்ள கிராமமக்கள் நம் தலையை துண்டித்து கொன்று விடுவார்கள் என தகவல்கள் பரவியுள்ளன. ஆனால் அங்கு எத்தனை பேர் சென்றார்கள் என்ற கணக்கு எல்லாம் இல்லை.

Vishma thapa -

ஹாப்லாங்

ஹாப்லாங்

அஸ்ஸாம் மாநிலத்தின் மிக அழகிய பகுதி இந்த ஹப்லாங். அதே நேர்த்தில் இங்கு நிறைய தீவிர வாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், அதனால் இந்த பகுதியில் சுற்றுலா செல்ல வரவேண்டாம் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

Mad Max survive

 பாஸ்டர்

பாஸ்டர்

சித்ராகூட் இந்தியாவின் நயகரா என்று அழைக்கப்படும் அதே சித்ராகூட் நீர்வீழ்ச்சி பாயும் இடத்துக்கு அருகில் தான் அமைந்துள்ளது இந்த பாஸ்டர் பகுதி. இது மிகவும் அழகான பகுதியாகும். அதே நேரத்தில் இங்கு நக்ஸல்களின் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Arghyashonima

நிகோபார் தீவுகள்

நிகோபார் தீவுகள்

நிகோபாருக்கு சுற்றுலா செல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கு அழகுகளை காண கண் கோடி வேண்டும் என்றே சொல்லலாம். ஆனால் அங்குள்ள குறிப்பிட்ட மலை ஒன்று ஆளை விழுங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த மலையில் நடைபயணம் செல்கிறவர்கள் தானாகவே உள்ளிழுக்கப்படுகின்றனராம். இது கேட்பதற்கு விசித்திரமாக இருந்தாலும் இம்மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. உண்மையோ திரிபோ கவனத்துடன் இருப்பது நமக்கு நல்லதுதானே..

Ankur P

 1

1

நிகோபாரின் அழகிய புகைப்படங்கள்

mOTHrEPUBLIC

2

2

நிகோபாரின் அழகிய புகைப்படங்கள்

Aravindan Ganesan

Read more about: travel temple india tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more