Search
  • Follow NativePlanet
Share
» »திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலை பற்றிய அரிய தகவல்கள் !!

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலை பற்றிய அரிய தகவல்கள் !!

By Naveen

தென்னாடு கொண்ட சிவபெருமானுக்கு தஞ்சை மண்ணில் ஏராளமான கோயில்கள் உண்டு. இங்கிருக்கும் கோயில்கள் பலவும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையுடைவை ஆகும். அப்படி தஞ்சையில் இருக்கும் மிக முக்கியமான சிவஸ்தலங்களில் ஒன்று தான் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் ஆகும். பெரும் புராண வரலாற்று சிறப்பு கொண்ட இக்கோயிலை பற்றிய அரிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கோயில் புராண வரலாறு:

கோயில் புராண வரலாறு:

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் ஏற்ப்படவிருப்பதை உணர்ந்த படைப்பின் கடவுளான பிரம்ம தேவன் தன்னுடைய ஆற்றலையெல்லாம் கும்பத்தில் போட்டு கையிலாய மலையின் உச்சியில் வைக்கிறார். பிரளயத்தினால் எழுந்த பேரலையில் அடித்துவரப்பட்ட அக்கும்பம் கும்பகோணத்தில் தரைதட்டி நின்றிருக்கிறது.

ஆழி வெள்ளத்தில் கும்பம் அடித்துவரப்பட்ட போது கும்பத்திலிருந்த பிரம்மனின் ஆற்றல் சிந்திய இடங்கள் தான் திருவிடைமருதூர், திருதராசுரம், திருநாகேஸ்வரம், திருப்பாடல்வனம் ஆகும்.

திருவிடைமருதூர் பெயர் காரணம்:

திருவிடைமருதூர் பெயர் காரணம்:

திருவிடைமருதூர் என்னும் பெயர் மருத மரத்தில் இருந்து வந்திருக்கிறது. பெருஞ்சிறப்புடைய மருத மரம் 'திருமருது' என்றே சங்ககாலம் தொட்டு அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் தலை மருதுஎனவும், அம்பாசமுத்திரம் திருப்புடைமருதூர் கோயில் கடை மருது என்றும், இந்த மகாலிங்கேஸ்வரர் கோயில் இடை மருது என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. திரு+இடை+மருதூர் திருவிடைமருதூர் ஆகியிருக்கிறது.

ஜோதிமயலிங்கம்:

ஜோதிமயலிங்கம்:

ஏழு முக்கிய சைவக்கோயில்களில் ஒன்றாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இங்கே சிவபெருமான் மகாலிங்கேஸ்வரராக லிங்க வடிவாக வழிபடப்படுகிறார். இங்கே சிவபெருமான் ஜோதிமயலிங்கமாக காட்சிதருவதாக நம்பப்படுகிறது.

இங்கே உமையாள் பார்வதி தேவி பிறகுசுந்தரகுசாம்பிகையாக அருள்பாலிக்கிறார்.

பாடல் பெற்ற தளம்:

பாடல் பெற்ற தளம்:

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலை பற்றி மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்கள் சைவத்திருமறையான தேவாரத்தில் காணக்கிடைக்கின்றன. ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் இவை பாடப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதன் மூலம் இக்கோயில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையானது என்பதை நாம் அறியலாம்.

யாரால் கட்டப்பட்டது?:

யாரால் கட்டப்பட்டது?:

சோழர்களால் 9ஆம் நூற்றாண்டில் இக்கோயில் முதன்முதலாக கட்டப்பட்டிருக்கிறது. சோழர்களுக்கு பின்வந்த பாண்டியர்கள், தஞ்சை நாயக்கர்கள், மராத்திய மன்னர்கள் ஆகியோர் மென்மேலும் இக்கோயிலை விஸ்தரிப்பு செய்திருக்கின்றனர்.

இந்த தகவல்களை கோயிலினுள் இருக்கும் கல்வெட்டுகளில் நாம் காணலாம்.

பிரம்மஹஸ்தி தோஷ நிவர்த்தி:

பிரம்மஹஸ்தி தோஷ நிவர்த்தி:

திருவிடைமருதூருக்கு வந்து மகாலிங்கேஸ்வரரை மனதுருகி வழிபட்டால் பிரம்மஹஸ்தி தோஷம் அகலும் என்பது காலம்காலமாக இங்கு நிலவும் நம்பிக்கையாகும்.

பல காலம் முன்பு ஒரு சோழ இளவரசன் அந்தணர் ஒருவரை கொன்றதன் மூலம் பிரம்மஹஸ்தி தோஷத்திற்கு ஆளானார். அதிலிருந்து விடுபட தனது விருப்பத்திற்குரிய மகாலிங்கேஸ்வரரிடம் தோஷத்தில் இருந்து விடுபட வேண்டியிருக்கிறார்.

பிரம்மஹஸ்தி தோஷ நிவர்த்தி:

பிரம்மஹஸ்தி தோஷ நிவர்த்தி:

அந்த சோழ இளவரசன் முன்பு தோன்றிய சிவபெருமான் பிரம்மஹஸ்தி தோஷத்தை விலக்கியிருக்கிறார். கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் வந்த சோழ இளவசரனை மேற்குவாசல் வழியாக வெளியே செல்லுமாறு சிவன் கூறியதாகவும் இதனால் கிழக்கு வாசல் வரை பின்தொடர்ந்து வந்த அந்தணரின் ஆவி மீண்டும் இதே வாசல் வழியாக இளவரசன் திரும்ப வருவான் என்று நினைத்து அங்கியே எப்போதும் காத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனாலேயே இன்றும் பிரம்ம ஹஸ்தி தோஷம் கழிக்க வருபவர்கள் கிழக்கு வாசல் வழியாக வந்து மேற்கு வாசல் வழியாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

கோயில் அமைப்பு:

கோயில் அமைப்பு:

திருவிடைமருதூர் கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து அடுக்குகளை கொண்டதாகும். நான்கு திசைகளிலும் வாயில்கள் இருக்கின்றன. கோயிலினுள்ளே காருன்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், இறவாத தீர்த்தம் என ஐந்து தீர்த்த குளங்கள் இருக்கின்றன.

மகாலிங்கேஸ்வரர் லிங்க வடிவாக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் விஸ்தரிப்பு செய்யப்பட்ட போது முருகன் மற்றும் நடராஜரின் சந்நிதிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

பூஜை நேரங்கள்:

பூஜை நேரங்கள்:

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தினமும் ஐந்து கால பூசைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐந்து வேலைகளும் மேள தாளம் நாகஸ்வரம் முழங்க அபிஷேகம், அலங்காரம், தீபஆராதனை, நெய்வேதனம் ஆகியவை நடக்கின்றன.

பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூசைகள் நடக்கின்றன.

மகத்துவம்:

மகத்துவம்:

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலானது சப்தவிகார மூர்த்திகள் எனப்படும் ஏழு மிகமுக்கிய சிவன் கோயில்களில் முதன்மையானதும் ஏழு கோயில்களுக்கு நடுநாயகமாக அமைந்திருக்கும் சிறப்புக்குரியதாகும்.

இக்கோயில் 'பஞ்சலிங்க ஸ்தலம்' என்றும் போற்றப்படுகிறது. காரணம் இக்கோயிலில் சிவன் ஜோதி வடிவாகவும் இதனை சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் மற்ற நான்கு பூதங்களுக்குரிய கோயில்களும் அமைந்திருக்கின்றன.

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

கோயில் நந்தி !!

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

தேர் வடிவில் இருக்கும் கோயில் சந்நிதி

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

கோயில் தேர் !!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+