Search
  • Follow NativePlanet
Share
» »எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணக் கட்டணம் வெறும் 10ரூபாய்தான் - இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணக் கட்டணம் வெறும் 10ரூபாய்தான் - இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு

இரண்டு மணி நேர பயணத்துக்கான ரயில் கட்டணம் வெறும் பத்து ரூபாயாக அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வே. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது ஹரியானாவில். வாருங்கள் நாமும் இந்த ரயில் குறித்தும் ஹரியானாவின் அழகு குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்கே இயக்கப்படுகிறது

எங்கே இயக்கப்படுகிறது

இந்தியாவின் இதயமான தலைநகர் டெல்லிக்கு மிக அருகில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணிகளுக்கு மிக அதிக ஈர்ப்பையும், ஆவலையும் தந்துள்ளது என்றால் ஆச்சர்யபடுவதற்கில்லை. வாருங்கள் நாமும் ரயிலில் ஒரு பயணம் சென்று வருவோமே.

Chianti

எக்ஸ்பிரஸ் ரயில்

எக்ஸ்பிரஸ் ரயில்

பத்து ரூபாய் கட்டணம் என்றவுடன் இது லோக்கல் டிரெய்ன் புறநகர் ரயில்களில் ஏதோ ஒன்று என்று கருதிவிடவேண்டாம். இது நிச்சயமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்றுதான். இந்த ரயிலில் பயணிக்க மிக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா?

wiki

முந்தியடிக்கும் சுற்றுலாப் பயணிகள்

முந்தியடிக்கும் சுற்றுலாப் பயணிகள்

இந்த ரயிலில் பயணிப்பதற்கு சுற்றுலா பிரியர்களிடையே போட்டி நிலவுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 10 ரூபாய் கட்டணம் என்பது என்றாலும் இன்னொரு காரணமும் இருக்கிறது. இது அழகிய சுற்றுலாத் தளங்களை இணைப்பதுதான் அது.

Sandeep Suresh

 குர்கானில் ஓர் சுற்றுலா

குர்கானில் ஓர் சுற்றுலா

டெல்லி அருகிலுள்ள குர்கான் வளர்ந்து வரும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும். இது ஹரியானாவின் மிகப் பெரிய நகரம், டெல்லியிலிருந்து இது 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Superfast1111

 என்னவெல்லாம் இருக்கு

என்னவெல்லாம் இருக்கு

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் மற்றும் கனவுகளின் ராச்சியம் ஆகிய இடங்கள் இங்கு காணவேண்டிய முக்கிய தளங்களாகும். 2007-ஆம் திறக்கப்பட்டு இன்று குர்கானின் முக்கியமான மால்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் ஏம்பியன்ஸ் மால் டெல்லி-குர்கான் எல்லையில் அமைந்திருக்கிறது. இங்கு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ், பேண்டலூன்ஸ், நெக்ஸ்ட், பி.எம்.டபுள்யூ போன்ற முன்னணி நிறுவனங்களின் ஷோ ரூம்களை பார்க்க முடியும். மேலும், இங்குள்ள ராஜீவ் காந்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பார்க் அல்லது RGREP என்பது ஒரு ஆற்றல் மையம் ஆகும். இது தனியார் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை பற்றிய ஆலோசனைகளை வழங்குகிறது.

கனவுகளின் இராச்சியம்

கனவுகளின் இராச்சியம்

கனவுகளின் இராச்சியம் என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது தங்க முக்கோணத்தின் மிக அருகில் எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது. இதை எளிதாக ஆக்ரா, தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து அடையலாம். நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு, பாரம்பரியம் மற்றும் பிற கலைகளின் புகலிடமாக விளங்குவதால் இது ஒரு சிறந்த காட்சி இடமாக விளங்குகிறது. இது நவீன தொழில்நுட்பத்தின் அற்புதமான படைப்பாகும்.

Ekabhishek

நௌடன்கி மஹால் மற்றும் ஷ்ஹொவ்ஸ்ஹ திரையரங்கு

நௌடன்கி மஹால் மற்றும் ஷ்ஹொவ்ஸ்ஹ திரையரங்கு

கைவினை, இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், திருவிழாக்கள், தெரு நடனங்கள், மற்றும் புராண நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு வழங்கப்படுகின்றன. நௌடன்கி மஹால் மற்றும் ஷ்ஹொவ்ஸ்ஹ திரையரங்கு போன்றவற்றில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் காட்சிகளாக நடத்தப்படுகின்றன. மேலும் இங்குள்ள கலாச்சார அரங்கில் இந்திய உணவு மற்றும் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தபடுகின்றன.

Ekabhishek

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம்

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம்

சுல்தான்பூர் பறவைகள் சரணாலயத்தில் காணக்கூடிய உள்நாட்டு பறவைகளாக கொண்டலாத்தி, நெட்டைக்காலி, ஊதாப் பிட்டு தேன்சிட்டு, இந்தியன் ரோலர், வெள்ளை ஐபிஸ், சப்பைச்சொண்டன், சிரிக்கும் வாத்து போன்றவை அறியப்படுகின்றன. அதேவேளையில் சைபீரிய கொக்கு, செந்நாரை, மர உள்ளான், பொன்மாங்குயில், மஞ்சள் வாலாட்டி குருவி உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளையும் இங்கே கண்டு ரசிக்கலாம்.

Jatin Sindhu

Read more about: travel haryana travel news
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more