Search
  • Follow NativePlanet
Share
» »சீன-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் 'குட்டி திபெத்'!!!

சீன-பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் 'குட்டி திபெத்'!!!

By Staff

இமயமலையின் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் லடாக், மேற்கே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தையும்,வடக்கே சீனாவையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

இந்தப் பிரதேசம் திபெத்திய மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளதால் 'குட்டி திபெத்' என்று அழைக்கப்படுகிறது.

மேலும் உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான காரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக்!

புதிய கற்காலம்!

புதிய கற்காலம்!

லடாக்கில் பெரும்பாலான இடங்களில் காணப்படும் பாறைக் குடைவுகள் இந்தப் பகுதி நியோலித்திக் (புதிய கற்காலம்) காலத்திலிருந்து குடியேற்றப் பகுதியாக இருந்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

படம் : Raghavendra

முற்கால வாசிகள்

முற்கால வாசிகள்

லடாக்கின் முற்காலத்திய குடியேறிகள் மோன்கள் மற்றும் தார்த் மக்களின் கலப்பு, இந்தோ-ஆரியரை கொண்டதாக இருக்கிறது. இவர்கள் ஹெராடோடஸ், நியார்க்கஸ், மெகஸ்தனிஸ், பாலினி,தாலமி ஆகியோரின் எழுத்துக்களிலும், புராணங்களின் புவியமைப்பு பட்டியல்களிலும் குறிப்பிடப்படுகின்றனர்.

படம் : Alikasundara

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

லடாக்கில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஒவ்வொன்றும் ஒரு முறை பார்த்துவிட்டால் உங்கள் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத அளவுக்கு அழகானவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ட்சோமோரிரி ஏரி, பாங்காங் ஏரி, கார்டுங் லா கணவாய், சுரு பள்ளத்தாக்கு போன்ற பகுதிகள் தங்கள் அழகில் வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றன.

படம் : Tim Dellmann

ட்சோமோரிரி ஏரி

ட்சோமோரிரி ஏரி

லடாக்கின் வடக்கே ஜம்மு காஷ்மீரின் சங்தாங் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4,595 மீட்டர் உயரத்தில் ட்சோமோரிரி ஏரி எழிலுடன் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஏரியைச் கோடை காலத்தில் சுற்றிப் பார்ப்பதே சிறந்தது.

படம் : Jochen Westermann

சங் லா கணவாய்

சங் லா கணவாய்

லடாக்கின் தலைநகர் லேவிலிருந்து பாங்காங் செல்லும் பாதையில் சங் லா கணவாய் அமைந்துள்ளது. இது உலகிலேயே 3-வது உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறியப்படுகிறது.

படம் : SlartibErtfass der bertige

மேக்னடிக் ஹில்

மேக்னடிக் ஹில்

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி

பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கி காட்டப்பட்டுள்ளன. இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது. லடாக் தலைநகர் லேவிலிருந்து 5 மணி நேர பயணத்தில் பாங்காங் ஏரியை அடைந்து விட முடியும்.

படம் : Sidharthkochar

சங்கமம்

சங்கமம்

ஜான்ஸ்கார் நதியும், சிந்து நதியும் சங்கமிக்கும் அற்புதமான காட்சி. நீங்கள் லடாக் வரும்போது இந்தக் காட்சியை காண தவறவிட்டுவிடாதீர்கள்.

படம் : Sundeep bhardwaj

பரா லச்சா கணவாய்

பரா லச்சா கணவாய்

ஜான்ஸ்கார் பகுதியில் உள்ள பரா லச்சா கணவாய், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள லாஹௌல் பகுதியை லடாக்குடன் இணைக்கிறது. இது மணாலி-லே சாலையில் உள்ளது.

படம் : Shubhamoy

மணாலி-லே பாதையில் பைக் பயணம்

மணாலி-லே பாதையில் பைக் பயணம்

மணாலி-லே பாதையை 'ஆஃப் ரோடு' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது இந்தச் சாலை குண்டும் குழியுமாக ஒழுங்கற்றதாக ஒரே ஒரு லாரி மட்டுமே போகக்கூடியதான அளவில் இருக்கிறது. இதில் ஒரு பக்கம் வானுயர மலைகள், மறுபக்கம் அதல பாதாளம். எனவே கீழே விழுந்தால் ஒரு எலும்பு கூட மிஞ்சாது என்தால் இந்தப் பாதை மரணப் பாதை என்றே வர்ணிக்கப்படுகிறது.

படம் : Woudloper

த்ரங்-த்ருங் பனியாறு

த்ரங்-த்ருங் பனியாறு

கார்கில்-ஜான்ஸ்கார் சாலையில் உள்ள பென்சி லா கணவாயில் த்ரங்-த்ருங் பனியாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் : Baumgartnerphotography

காரகோரம்

காரகோரம்

லடாக் பகுதியின் கம்பீரக் கவர்ச்சிக்கு காரகோரம் மலைத்தொடர் முக்கிய காரணமாகும். பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மலைத்தொடர் காரகோரம். உலகிலேயே எவரெஸ்டுக்கு அடுத்தபடியாக அதிக உயரமுள்ள 'கே2' சிகரம் இம்மலைத் தொடரில் தான் அமையப்பெற்றுள்ளது.

படம் : Libor uher

ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு

ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கு

லடாக் பகுதியிலுள்ள கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜான்ஸ்கர், கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டு தோறும் சுமார் 8 மாதங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு உலகின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு விடும். 4.401 மீ மற்றும் 4.450 மீ வரையிலான உயரத்தில் அமைந்துள்ள இரண்டு சிறிய ஏரிகள் இப்பகுதியில் உள்ளன. சுற்றுலாப் பயணிகளை அதிக அளவிள் கவரும் டிராங் - டரங் பனியாறு ஷான்ஸ்கர் செல்லும் வழியில் காணப்படுகின்றது. சுரு பள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள இந்த இடம், கார்கில் மற்றும் கம்பீரமான இமயமலையின் அழகான காட்சியை நமக்கு அளிக்கின்றது.

படம் : Corto Maltese 1999

கார்டுங் லா கணவாய்

கார்டுங் லா கணவாய்

18380 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கணவாய் தான் உலகத்திலேயே மிகவும் உயரமான வாகனப் போக்குவரத்து சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணவாய், லடாக் மற்றும் காரகோரம் மலைத்தொடருக்கு மத்தியில் அமைந்துள்ளது.

படம் : Michael Day

நூப்ரா பள்ளத்தாக்கு

நூப்ரா பள்ளத்தாக்கு

கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயருயுடையதாகும். கோடைக்காலத்தில் இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண பூக்களின் அணிவகுப்பைக் காண முடியும். இந்தப் பள்ளத்தாக்கு பகுதி லடாக் தலைநகர் லேவிலிருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.

படம் : John Hill

தேசிய நெடுஞ்சாலை 1D (NH 1D)

தேசிய நெடுஞ்சாலை 1D (NH 1D)

ஸ்ரீநகர்-லே ஹைவே என்ற பெயரில் அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 1D முழுக்க முழுக்க ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்குள்ளாகவே அமைந்துள்ளது. 422 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலை லே-மணாலி ஹைவேவை அடுத்து லடாக்கை இந்தியாவின் மற்ற பகுதிகளோடு இணைக்கும் ஒரே பாதையாகும்.

படம் : Bodhisattwa

ஜோஜி லா கணவாய்

ஜோஜி லா கணவாய்

தேசிய நெடுஞ்சாலை 1D அல்லது ஸ்ரீநகர்-லே ஹைவேயில் ஜோஜி லா கணவாய் அமைந்துள்ளது.

படம் : Yogeshgupta26

சுரு பள்ளத்தாக்கு

சுரு பள்ளத்தாக்கு

சுரு மற்றும் ஜான்ஸ்கார் பள்ளத்தாக்குகள் இமயமலையினாலும், ஜான்ஸ்கார் மலைத்தொடராலும் சூழ்ந்திருக்கும் பெரும் கால்வாயை உருவாக்கியிருக்கின்றன. ஜான்ஸ்காரின் நுழைவாயிலான பென்சி லா கணவாயில் சுரு பள்ளத்தாக்கு 4,400 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கின் கீழ் பகுத்தில் இருந்து பார்த்தால், குன் மற்றும் நன் மலை உச்சிகளின் அகலப் பரப்புக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம்.

படம் : T. R. Shankar Raman

 சரப் நதி

சரப் நதி

லடாக்கில் உள்ள சார் என்னும் அழகிய கிராமத்தில் இந்த சரப் நதி பாய்ந்துகொண்டிருக்கிறது.

படம் : hamon jp

கூடாரங்கள்

கூடாரங்கள்

சுரு பள்ளத்தாக்கில் உள்ள ரங்டம் எனும் அழகிய கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படம் : Malikbek

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more