Search
  • Follow NativePlanet
Share
» »எத்தனை வயது வரை குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மீறினால் அபராதம் செலுத்த நேரிடும்!

எத்தனை வயது வரை குழந்தைகள் ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் – மீறினால் அபராதம் செலுத்த நேரிடும்!

குறைந்த டிக்கெட் விலையில் நீண்ட தூரம் வசதியான பயணம் செய்வது காரணமாக இந்திய ரயில்வே பொதுமக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக இருக்கிறது. ஆனால் ரயிலில் பயணிக்க நிறைய விதிமுறைகள் உள்ளன, எடுத்துக்காட்டாக எத்தனை வயதுவரை குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்? எத்தனை வயது முதல் டிக்கெட் அவசியம், மீறினால் என்ன நேரிடும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்!

5 வயது வரை டிக்கெட் தேவையில்லை

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ரயில்வேயின் ரயில்களில் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுடன் பயணிக்க பயணிகள் இப்போது பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று சில ஊடக அறிக்கைகள் கூறியதை தேசிய போக்குவரத்து நிறுவனம் மறுத்துள்ளது. இந்த செய்திகள் தவறானவை என இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில் இந்திய ரயில்வே எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

childcantravelwithoutticket1

விரும்பினால் பெர்த் புக் செய்து கொள்ளலாம்

பயணிகளின் கோரிக்கையின் பேரில், அவர்கள் விரும்பினால், டிக்கெட் வாங்குவதற்கும், அவர்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு படுக்கையை முன்பதிவு செய்வதற்கும் ஒரு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தனி பெர்த் தேவையில்லை என்றால், முன்பு இருந்ததைப் போலவே இது இலவசம்.

பெர்த் வேண்டாமென்றால் இலவசமாக பயணிக்கலாம்

இந்திய ரயில்வேயின் சுற்றறிக்கையின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்/பாதுகாவலர்களுடன் இலவசமாகப் பயணம் செய்யலாம், ஆனால் அவர்களுக்கு தனி இருக்கை/பெர்த் ஒதுக்கப்படாது. "எனவே, ஒரு தனி பெர்த் கோரப்படாவிட்டால், எந்த டிக்கெட்டையும் வாங்கத் தேவையில்லை" என்று இந்திய ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட பேபி பெர்த்கள்

சமீபத்தில் ரயிலில் கீழ் பெர்த்துகளுடன் இணைக்கப்பட்ட "பேபி பெர்த்"களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. இந்த பெர்த்கள் பயன்பாட்டில் இல்லாதபோது ஒரு ஸ்டாப்பர் மூலம் மடித்து பாதுகாக்கப்படும். சிறிய பேபி பெர்த் பிரதான கீழ் இருக்கையுடன் சீரமைக்கப்பட்டது. இந்த பேபி பெர்த்கள் 770 மிமீ நீளம், 255 மிமீ அகலம் மற்றும் 76.2 மிமீ உயரம் கொண்டவை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தன்னார்வ அடிப்படையில் பெர்த் / இருக்கை கோரப்பட்டால், வயது வந்தோருக்கான முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

5 வயதிற்கு மேல் டிக்கெட் அவசியம்

அதே நேரத்தில், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட இருக்கை எடுக்கவில்லை என்றால், அந்தக் குழந்தைக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதியை நீங்கள் செலுத்த வேண்டும். குழந்தை தனது பெற்றோர் அல்லது உடன் வருபவர் இருக்கையில் பயணம் செய்யலாம். ஆனால், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தனி இருக்கை அல்லது படுக்கையை முன்பதிவு செய்தால், முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது முந்தைய விதி அல்ல என்றாலும். 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பதிவு பெட்டியில் தனி பெர்த் அல்லது இருக்கை தேவைப்பட்டால் அவர்களுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும்.

நீங்கள் 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தையை டிக்கெட் எதுவும் எடுக்காமல் பயணிக்க வைத்தால், அபராதம் செலுத்த நேரிடும்!

More News

    Read more about: irctc indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+