» »திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...!

திருச்சி டூ திரிசூர் ஈசியா போக இப்படி ஒரு வழியா...!

Written By:

தமிழகத்தின் திருச்சியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள திரிசூர் செல்ல கோயம்புத்தூர், பெள்ளாச்சி என இருவேறு பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எளிய முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக வாகன நெரிசல்களில் இருந்து விலகி, பசுமைக் காடுகளை ரசித்தபடி பயணிக்க யாருக்குதான் விருப்பம் இருக்காது. அதிலும், நண்பர்களுடன், காதலியுடன் இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர பயணம் செல்ல விரும்புபவராக இருப்பின் திருச்சியில் இருந்து திரிசூரை இணைக்கும் இந்த சாலையில் பயணித்து பாருங்க. உங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பயணத்தை நிச்சயம் நீங்கள் அனுபவித்திருக்க முடியாது. திருச்சி டூ திரிசூருக்கு எந்த வழிப்பாதை சிறந்ததாகவும், அதேச் சமயம் பாதுகாப்பானதாகவும், சுற்றுலாம்த தலங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என பார்க்கலாம்.

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

வளமான கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிகுந்த வரலாற்று, சமய இடங்கள் நிறைந்த தமிழக நகரங்களில் திருச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இது தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். விராலிமலை முருகன் கோவில், மலைகோட்டை, ஸ்ரீ ரங்க நாதர், குணசீலம் விஷ்ணு கோவில் இன்னும் பல ஆன்மீகத் தலங்கள் இங்கே நிறைந்து காணப்படுகின்றன. அதுமட்டுமா, நவாப் அரண்மனை மற்றும் கல்லணை அணைக்கட்டு மற்றும் முக்கொம்பு அணை முதலியன திருச்சியின் முக்கியவத்தும் வாய்ந்த பழமையான கட்டமைப்புகள் ஆகும். நாட்டின் எப்பகுதிக்கும் செல்லும் ரயில் சேவையும், சர்வதேச அளவில் விமான சேவையும் திருச்சியை நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இவை, திருச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகிறது.

Vensatry

திருச்சி - திண்டுக்கல்

திருச்சி - திண்டுக்கல்


திருச்சியில் இருந்து திரிசூர் செல்ல நாம் முதலில் திண்டுக்கல்லை அடைவோம். திருச்சியில் இருந்து எலங்ககுறிச்சி, வடமதுரை வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் பயணித்தால் திண்டுக்கல்லை அடைந்துவிடலாம். திண்டுக்கல்லிக் அடையாளம் என்றால் அது கம்பீரமான கோட்டை தான். இதைத் தவிர்த்து திண்டுக்கல் பகுதியில் சில கோவில்களும், புனித நதிகளும் சுற்றிப்பார்க்ககூடிய இடங்களாகும். சுமார், 300 ஆண்டுகள் பழமையான ரோமன் கத்தோலிக்க தேவாலயம், புனித ஜோஸப் தேவாலயம் போன்றவை இந்நகரின் மற்ற முக்கிய தேவாலயங்கள். கண்களுக்கு குளிர்ச்சி தரும் சிறுமலை மலை வாசத்தலம் திண்டுக்கல்- நத்தம் செல்லும் வழியில் உள்ளது. பெகாம்பூர் பெரிய பள்ளிவாசல், ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில், ஆத்தூர் காமராசர் ஏரி, காமராசர் சாகர் அணை உள்ளிட்டவை திண்டுகல்லை சுற்றி அமைந்துள்ள பிராதான சுற்றுலாத் தலங்களாகும்.

SriniGS

திண்டுக்கல் - தேனி

திண்டுக்கல் - தேனி


திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு, பெரியகுளம் வழியாக சுமார் 89 கிலோ மீட்டர் பயணித்தால் தேதி மாவட்டத்தை அடைந்து விடலாம். எங்கு காணிணும் பசுமை மலைக் காடுகளும், ஜில்லென்ற காலநிலையும் இந்த கோடை காலத்தில் பயணித்தால் தேதி சொர்க்கம் போல் காட்சியளிக்கும். அத்தனை பசுமையைக் கொண்டது. தேனியில் வைகை அணைக்கட்டு, சோத்துப்பாறை அணைக்கட்டு மற்றும் சண்முகா நதி அணைக்கட்டு ஆகிய புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லைங்க, சுருளி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சின்ன சுருளி நீர்வீழ்ச்சி ஆகிய அற்புதமான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளின் கூட்டத்தை ஈர்த்து வருகின்றன. நேரமிருப்பின் தேனியில் முக்கிய சுற்றுலாத் தலங்களான இப்பகுதிகளுக்கு எல்லாம் செல்லத் தவறிவிடாதீர்கள்.

அ.உமர் பாரூக்

தேனி - மூணார்

தேனி - மூணார்


தேனியில் இருந்து சுமார் 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மூணார் மலைப் பிரதேசம். தேனியில் இருந்து வீபாண்டி, முந்தல், தேவிக் குளம் வழியாக பயணித்தால் மூணாரை அடைந்து விடலாம். இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த மூணார் மலைப் பிரதேசம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப் பகுதியாகும். சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைப் பிரதேசமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது. பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன. ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக் காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த தலம் இருக்க முடியாது. மலைப்பாதையில் இருசக்கர வாகனப் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளமாக உள்ளன. புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப் பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பலதரப்பட்ட பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது.

Bimal K C

மூணார் - நெரியாமங்கலம்

மூணார் - நெரியாமங்கலம்


மூணாரில் இருந்த அடிமலி, சில்லிதொடு வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் காட்டு வழிச் சாலையில் பயணித்தால் மலையடிவாரக் கிராமமான நெரியாமங்கலத்தை அடைந்து விடலாம். இந்த இடைப்பட்ட தூர ரம்மியமான பசுமைக் காட்டின் ஊடான பயணம், வளைந்து நெழிந்த சாலைகள், மேகக் கூட்டங்கள் நம்மை வேற்று கிரகத்திற்கே அழைத்துச் செல்வதைப் போல இருக்கும். நெரியாமங்கலத்திற்கு முன்னதாக வரும் வலரா நீர்வீழ்ச்சி, சேரப்பாரா நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றையும் கண்டு ரசிக்கலாம்.

Jaseem Hamza

நெரியாமங்கலம் - திரிசூர்

நெரியாமங்கலம் - திரிசூர்


நெரியாமங்கலத்தில் இருந்து சாலக்குடி வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் பயணித்தால் திரிசூரை அடைந்து விடலாம். திரிசூர் சுற்றுலாப் பயணத்தின்போது நகருக்கு அருகிலுள்ள பல நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், அணைப்பகுதி போன்ற ஏராளமான இயற்கை எழில் தலங்களுக்கும் பயணம் மேற்கொள்வது சிறந்தது. குளுமையான மலைப் பிரதேசத்தை விட்டு திரிசூர் சற்று விலகியே இருந்தாலம், கேரளாவிற்கே உரித்தான சீதோஷன கால நிலையும், பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களும் இங்கே ஏராளம். ஸ்டேட் மியூசியம், ஷக்தன் தம்புரான் அரண்மனை, அப்பன் தம்புரான் ஸ்மாரகம், ஆராட்டுபுழா கோவில், குடக்கல்லு உள்ளிட்ட தலங்களில் திரிசூரில் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும். மேலும், திரிசூருக்கு செல்லும் வழியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று. நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள பல்வேறு தளங்களிலிருந்து வெவ்வேறு கோணத்தில் இதன் அழகை பயணிகள் ரசிக்கலாம். நீர்வீழ்ச்சியை நோக்கிச்செல்லும் பாதையிலிருந்து பார்க்கும்போதே நீர்வீழ்ச்சியின் முன்புற தோற்றமும் கீழே ஆழத்தில் ஓடும் ஆறும் காட்சியளிக்கின்றன.

Manojk

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்