Search
  • Follow NativePlanet
Share
» »கலைஞர் இல்லாத திருவாரூர் எப்படி இருக்குனு தெரியுமா?

கலைஞர் இல்லாத திருவாரூர் எப்படி இருக்குனு தெரியுமா?

கலைஞர் இல்லாத திருவாரூர் எப்படி இருக்குனு தெரியுமா?

கலைஞர் கருணாநிதியின் சட்டமன்ற தொகுதி திருவாரூர் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் திருவாரூர் கலைஞர் மறைவுக்கு பிறகு எப்படி இருக்கிறது தெரியுமா? இடைத்தேர்தல் வேற அறிவிச்சிட்டாங்க... இந்த மாவட்டத்தின் சுற்றுலா அம்சங்கள் எப்படி இருக்கு இன்னும் என்னவெல்லாம் மேம்படுத்தனும்னு ஒரு சின்ன பார்வை பார்த்துட்டு வந்துடலாம். ஆமா.. திருவாரூர்ல சுத்தி பாக்க அப்படி என்னலாம் இருக்கு...

 சுத்தி பாக்க என்ன இருக்கு...?

சுத்தி பாக்க என்ன இருக்கு...?

என்னய்யா இல்ல... தியாகராஜா சுவாமி கோவில், கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருகண்ணபுரம் நீலமேக பெருமாள் கோவில், முடிகொண்டான் கோதண்டராமர் கோவில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்னு ஆன்மீக தலங்கள் நிறஞ்ச ஆன்மீக பூமியப்பா திருவாரூர்.

SriniG

கோவில் மட்டும்தானா

கோவில் மட்டும்தானா


அட என்ன இப்டி சொல்லிப்புட்டீங்க... கோவிலுக்கு பேமஸ்னாலும் திருவாரூர்ல இன்னும் நிறய விசயங்கள் இருக்குதுல... அதுல ஒன்னுதான் மாநகரப்பூங்கா.. அழகான அம்சமான அட்டகாசமான பொழுது போக்கக்கூடிய அளவுக்கு சிறப்பான பூங்கா திருவாரூர்ல இருக்குப்பு...

Kasiarunachalam

பூங்காவுல என்னதான் இருக்கு?

பூங்காவுல என்னதான் இருக்கு?

திருவாரூரின் நடு பகுதியில அமைஞ்சிருக்கு இந்த பூங்கா, பொதுமக்களுக்கான சிறந்த பொழுது போக்கு மையமா உருவாக்கப்பட்டிருக்கு. இது, தோட்டக்கலைக்கு சிறப்பான ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்பூங்கா, நகரின் வர்த்தகப் பரிவர்த்தனைப் பகுதியில் அமைந்திருந்தாலும், நகரின் பரபரப்புகளில் இருந்து விலகி, அமைதியான சுற்றுச்சூழலைக் கொண்டுள்ளது.

Srinivasan G

அழகான காட்சியமைப்புகள்

அழகான காட்சியமைப்புகள்

பாதுகாப்பான நடைபாதைகள், நீரூற்றுகள், மற்றும் குழந்தைகளுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பகுதி என அனைத்து வயதினரையும் கவரக் கூடிய வகையில், இப்பூங்கா அமைந்துள்ளது. இது நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், இங்கு செல்வது எளிது. இவ்விடத்தில், பல்வேறு விதமான அரிய வகை மரங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாசுபட்ட நகரத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில், இங்கு தூய்மையான பிராணவாயு, அபரிமிதமாகக் கிடைக்கும்.

Srinivasan G

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை


"முத்துப்பெட்" என்றும் அழைக்கப்படும் முத்துப்பேட்டை, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்த ஒரு பஞ்சாயத்துக்குட்பட்ட சிறு நகரமாகும். இச்சிறுநகரம், உப்புக் காயல்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் நிறைந்து, மீன்பிடித் தொழிலுக்கு ஏதுவான இடமாக அமைந்துள்ளது. இது காவேரி படுகையின் கிழக்குக் கோடியில், கடலுக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு சாதகமான வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது.

L. Shyamal

எங்குள்ளது

எங்குள்ளது

முத்துப்பேட்டை, மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 360 கி.மீ. தொலைவில், திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் நடுவில் அமைந்துள்ளது.

Marinebalaji

அலையத்தி காடு

அலையத்தி காடு

முத்துப்பேட்டையில் உள்ள "அலையத்தி காடு" என்றழைக்கப்படும் சதுப்பு நிலக் காடு, இந்தியாவிலுள்ள் பெரிய சதுப்பு நிலக் காடுகளுள் ஒன்றாகும். முத்தெடுப்பதற்கு உகந்த இடமாகவும் இது விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து, இவ்வூருக்கு எளிதாக சென்று வரலாம்.

Marinebalaji

 கூத்தனூர் சரஸ்வதி கோயில்

கூத்தனூர் சரஸ்வதி கோயில்

கூத்தனூர் சரஸ்வதி கோயில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோயில்களுள் ஒன்றாகும். அவருக்கென தனிக் கோயில் இருப்பது மிகவும் அரிது. தமிழ்நாட்டிலேயே, சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோயிலாக, இது திகழ்கிறது. இக்கோயில், திருவாரூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள கூத்தனூரில், மயிலாடுதுறை-திருவாரூர் சாலையோரத்தில் அமைந்துள்ளது.

NatRaja

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X