» »குறைந்த செலவில் மனம் நிறைந்த சுற்றுலா - டாப் 10 இடங்கள் எவை தெரியுமா?

குறைந்த செலவில் மனம் நிறைந்த சுற்றுலா - டாப் 10 இடங்கள் எவை தெரியுமா?

Written By: Udhaya

LATEST:முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே வெளியேற்றிய கோயில் எங்கே? ஏன்? எப்படி?

சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், சில அறிவுப்பூர்வமான விசயங்களை தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது.

எப்போதுமே மனம் சோர்வுற்று, வேலை அழுத்தத்தால் மனம் வெம்பும்போது ஒரு பயணம் மேற்கொண்டால், கொஞ்சம் அருமையான தருணங்களை பகிர்ந்துகொண்டால் மனம் மெலிதாக மாறிவிடும்.

அந்த வகையில் சுற்றுலா என்பது பலரும் விரும்பக்கூடியதே. ஆனால் செலவு?

பணம் எவ்வளவு செலவாகும் என்பதை மனதில் கொண்டுதான் அப்பா, அம்மாக்கள் சுற்றுலாவை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கின்றனர். தினமும் ஓடிக்கொண்டே இருந்தால் எப்போதோ ஒரு நாள் அலுத்துப் போய்விடுவோம். பணம் தான் சிக்கல் என்றால், அதைத் தீர்க்கவும் ஒரு யோசனை.

குறைந்த விலையில் அதிக மன நிறைவு தரும் இன்ப சுற்றுலாக்கள்...இதோ உங்களுக்காக டாப்  10 ....

அமிர்தசரஸ் தங்கக் கோயில்

அமிர்தசரஸ் தங்கக் கோயில்

நம் அனைவருக்கும் தெரியும் அமிர்தசரஸ் தங்கக் கோயிலுக்கு பெயர்பெற்றது

என்று. ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு விசயமும் அங்குள்ளது.

அமிர்தசரஸ் மிக மலிவான சுற்றுலா செய்ய ஏற்ற இடமாகும். குறைந்த செலவில்

விடுமுறையை கழிக்கும் ஒரு தளம் இதுவாகும்.

பெண்களுக்கு இலவசமாகவும், ஆண்களுக்கு குறைந்த விலையிலும் குருத்வாராவே

தங்கும் இடம் வழங்குகிறது.

pc: Arian Zwegers

கோவா

கோவா

அதேதான்.. அந்த கேள்விதான் கேட்பீர்கள் என்று தெரியும்.. எப்படி கோவா மலிவான

சுற்றுலாத்தளம். அதேதானே?

திரைப்படங்களில் காட்டப்படும் கோவாவை மறந்துவிடுங்கள். செலவில்லாமல்

அதைவிட அதிக குதூகலிப்புடன் உங்களுக்கு கோவாவில் சில இடங்கள் உள்ளன.

மலிவான கோவா உங்களை அன்புடன் வரவேற்கிறது. கோவாவில் உங்கள்

பணப்பையை பதம் பார்க்காமல் குறைந்த செலவில் தங்க பல விடுதிகள் உள்ளன.

pc: soman

ஆவ்லி - மணிரத்னம் படப்பிடிப்புதளம் போல ஒரு இடம்...

ஆவ்லி - மணிரத்னம் படப்பிடிப்புதளம் போல ஒரு இடம்...


சின்னம்மா சத்தியமா.. இது பொய் இல்லிங்க... இந்த இடத்துக்கு போனா அப்படியே

சுவிஸ் போனது போன்ற உணர்வு கிடைக்கும் தெரியுமா/

இங்குள்ள தங்கும் விடுதிகள் உங்களுக்கு அதிக செலவில்லாமலும், நல்ல

தரத்துடனும் இருக்கும். அப்படியென்றால் குறைந்த விலையில் நிறைந்த தரமான

ஒரு சுற்றுலாவை கொண்டாட ஆவ்லி செல்லுங்கள்.


pic-03

pc: commons.wikimedia.org

டார்ஜிலிங் - மலைகளின் ராணி

டார்ஜிலிங் - மலைகளின் ராணி

நம்புங்கள்! இந்தியாவின் சிறந்த இடம் என்றால் அது இதுதான். பெரும்பாலும் யாரிடம் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா.

உண்மையாவே, குறைந்த செலவில் ஒரு முதல் வகுப்பு சுற்றுலா( பர்ஸ்ட் கிளாஸ் டிராவல்). அழகான சிறிய விடுதிகள், அங்கு கிடைக்கும் சுவையான மோமோக்கள், கம கம என மணக்கும் டார்ஜிலிங்க் டீ என அனைத்துமே சுகம். அருமையான தருணம்.

pic-04

pc: shankar s.

மெக்லியோட் கஞ்ச்

மெக்லியோட் கஞ்ச்

பனிப்பொழிவுடன் கூடிய அமைதியான ஒரு சுற்றுலாவை குறைந்த செலவில் அனுபவிக்கவேண்டுமா அப்போது நீங்கள் இங்குதான் வரவேண்டும்

உங்கள் குழந்தை, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க அருமையான இடம். புத்தர் கலாச்சாரம், ஆன்மீகம், அமைதி, தியானம் முதலியன இங்கு சிறப்பு.

pic-05


pc: Derek Blackadder

கோகர்னா

கோகர்னா

கோகர்னா கோவாவில் தங்கை என்று அழைக்கப்படுகிறது. கோவாவைக் காட்டிலும் மிக குறைந்த செலவில் ஆனால் அதற்கு சமமான மகிழும் தருணங்களுடன் உங்களுக்கு இயற்கை தந்த வரம்தான் இந்த கோகர்னா.

கர்நாடக மாநிலத்தின் அரபிக்கடலோரம் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு சென்று வாருங்கள்.

pic-06

pc: Pranet

ஹம்பி

ஹம்பி

கர்நாடக மாநிலத்தின் பழமையின் சிறப்பாக கருதப்படும் இந்த ஹம்பி, ஒரு தெய்வீக கோட்டை நகரமாகும்.

யுனெஸ்கோவால் இந்தியாவின் புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த இடம் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

pic-07


pc: Apadegal

கசோல்

கசோல்


இந்தியாவின் மிக அழகிய இடங்களுள் ஒன்று இந்த கசோல். நீங்கள் குறைந்த செலவில் பயணம் செய்ய திட்டமிட்டால், அதற்கேற்ற அருமையான இடம் இந்த கசோல் ஆகும்.

பனிகள் நிறைந்த மலைகள், பைன் மரங்கள், ரம்மியமான சூழலில் இயற்கை காட்சிகள் என அழகழகான இடங்களும்,கேட்டவுடன் உங்கள் மனதை குளிரச் செய்யும் குறைந்த விலை விடுதிகளும் இங்குள்ளன.


pic-08

pc: Alok Kumar

மும்பை

மும்பை

இந்தியர்களில் பலரின் கனவு நகரமான மும்பை தொழில் முன்னேற்றத்துக்காக மட்டுமல்ல.... உங்கள் ஓய்வுக்கும் சிறந்த இடமாகும்.

பொதுவாக நகர வாழ்க்கைச்சூழல், செலவு அதிகமாகும் என அழைக்கப்பட்டாலும், மும்பையில் சுற்றுலா குறைந்த செலவில் செய்யவும் பல இடங்கள் உள்ளன.

குறைந்த விலை உணவகங்கள், விடுதிகள் என அனைத்தும் இங்குள்ளன.


pic-09

pc: Vidur Malhotra

புதுச்சேரி

புதுச்சேரி


கொஞ்சநேரமாச்சும் பிரெஞ்சு பக்கம் போய்ட்டுவரலாம்... அட நம்ம புதுச்சேரியைத் தான் சொல்கிறோம். அருமையான கடற்கரைகள், குறைந்த விலை மதுபானங்கள், அழகழான சாலைகள் என அத்தனை அம்சமும் பிரெஞ்சு நாட்டை நினைவுபடுத்துவதைப் போன்றதொரு உணர்வு.

pic-10

pc: Kalyan Kanuri

இமய மலையில் விசித்திர பனி மனிதனை பற்றி தெரியுமா?

இடங்கள்

Read more about: travel, temple