Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் சுதந்திரப் பறவையாக வாழத்தகுந்த டாப் 10 தலங்கள்..!

இந்தியாவில் சுதந்திரப் பறவையாக வாழத்தகுந்த டாப் 10 தலங்கள்..!

எவ்வித சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் இன்றி, எது செய்தாலும் ஏன் என்று கேட்க யாருமின்றி, நினைத்ததைச் செய்யும் சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிய யாருக்குத்தான் பிடிக்காது. அத்தடி தங்களுக்கு என தனி திட்டங்களை வகுத்துக் கொண்ட கூட்டம் தான் கிப்பி என்னும் ஹிப்பி குழுவினர். விடுதலை மனப்பாங்குடன், அதிகார போக்குகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், இளைய தலைமுறையினரால் அமெரிக்காவில் உருவானதுதான் இது.

தலைமுடியை நீளமாக வளர்த்தல், போதைப் பொருட்களை நுகர்தல், வீடுகளை விட்டுவிட்டு ஒருவித நாடோடி வாழ்க்கை வாழ்தல், சமூக குடிமங்களை அமைத்தல் போன்றவை கிப்பி குழுவினரின் குறிப்பிடத்தக்க போக்குகள் ஆகும்.

மாறுபட்ட வாழ்வியல் முறைகள், தத்துவங்கள், இசை, உடை மற்றும் பிற கூற்றுக்களை உள்ளடக்கி, தனித்துவமானதாகவோ பொதுப் பண்பாட்டு மரபுகளை மீறியதாகவோ இருக்கும் பண்பாட்டு மரபுகளை மறைநிலை அல்லது துணை பண்பாடுகள் என்று கூறலாம். தமிழ்ப் பண்பாட்டுடன் ஒப்பிட்டால் சித்தர் மரபு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அப்படி, இந்தியாவில் கிப்பிகளுடன் இணைந்து, அவர்களைப் போலவே எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக வாழத் தகுந்த டாப் 10 இடங்கள் எது என பார்க்கலாம் வாங்க.

கோவா

கோவா

இந்தியாவின் சொர்க்கம் என்றே கோவாவைக் கூறலாம். நம் கலாச்சாரத்தில் இருந்து மாறுபட்டு, அயல் நாட்டுக் கலாச்சாரங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் அதிக அயல்நாட்டவர்கள் வாழும் பகுதியாகவும் கோவா திகழ்கிறது. வருடம் முழுவதும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் லட்சக் கணக்கில் இங்கு வந்து செல்வது வழக்கம். இதில், கிப்பி என்னும் கலாச்சாரத்திற்கும் கோவா மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்கரை ஓரத்தில் கையில் பீர் பாட்டிலுடன், புகைத்துக் கொண்டு சுற்றியுள்ளோர் குறித்து கவலையின்றி தனது துணையை ரசித்தபடி மகிழ கோவா ஏற்றதாக உள்ளது.

robinn

கோகர்ணம்

கோகர்ணம்

கோகர்ணம் தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் அரேபிய கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். கோகர்ணாவின் அமைதியும் அன்பும் கிப்பியினருக்கு ஏற்றதாக உள்ளது. பெரும்பாலும், வெளிநாட்டவர்கள் மற்றும் உள்ளூர் சுதத்திர வாசிகளை இங்கே காணலாம். அமைதியான மற்றும் கனிவான நாகரீகமானவர்கள் கோகர்ணாவை அழகிய கடற்கரைகளில், குளிர்ந்த மற்றும் அசையாத கூட்டத்தில் நேசிக்கிறார்கள்.

Aleksriis

கசோல்

கசோல்

இமய மலையின் இயற்கை வரம் பெற்ற மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில் எழில் கொஞ்சும் அழகுடன் பர்வத நதியின் கரையில் அமைந்துள்ளது கசோல் என்னும் ஊர். மனிதனின் சுவடுகள் அதிகம் தடம் பதிக்காத இந்த ஊர் சமீப காலமாக மலையேற்றத்திற்கும், கேம்பிங் போன்ற விஷயங்களுக்காக மிகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக இந்தியர்களைக் காட்டிலும் வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்த ஊர் மிகவும் விரும்பப்படுகிறது. கிப்பி போன்ற நாடோடி குழுவினர்க்கு விருப்பமான தலமாகவும் இது உள்ளது. இவர்களுக்காகவே இங்குள்ள கடைகளில் உள்ள பெயர் பலகைகள் ஹீப்ரு மொழியிலும் எழுதப்படுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Devendra Makka

டோஷ்

டோஷ்

டோஷ் கிராமம் ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது மலைகளில் சூழப்பட்டுள்ள பார்வதி பள்ளத்தாக்கில் கசோல் அருகே ஒரு மலை மீது சுமார் 2,400 மீட்டர் உயரத்தில் இமயமலையில் இருந்து கண்டும் காணாத பார்வதி பள்ளத்தாக்குக்கு அருகே உள்ள அழகிய கிராமமாகும். இந்த சிறிய கிராமம் மிகவும் அமைதியாகவும், ஆத்மாத்வமாகவும் இருக்கிறது. பார்வதி ஆற்றின் கரையில் உங்கள் கிட்டாரை அல்லது காதலியோடு உட்கார்ந்து உண்மையான வாழ்வின் அர்த்தத்தைக் கண் எதிரே காணலாம்.

Atulshishodia

புஷ்கர்

புஷ்கர்

வடகிழக்கு மாநிலமான தார் பாலைவனத்தின் எல்லையை ஒட்டிய ஒரு நகரம் புஷ்கர். ஆரவல்லி மலைத்தொடர்களால் சூழப்பட்ட புஷ்கர் பாரம்பரியமிக்க கிப்பிகளுக்கு சரியான தேர்வாகும். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ஒட்டக திருவிழாவைக் காண்பதற்காகவே பல வெளிநாட்டவர்கள் இங்கு குவிவது வழக்கம்.

wikipedia

ஹம்பி

ஹம்பி

கர்நாடகாவில் ஒரு பழமையான கிராமம் இந்த ஹம்பி. வரலாற்றுப் புகழ் பெற்ற ஹம்பி பல நினைவுச்சின்ன கட்டிடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஹம்பியின் இடிபாடுகளில் கூட, நீங்கள் அழகைக் காணலாம். இந்த இடம் மிகவும் விசித்திரமானது. நீங்கள் ஒரு சைக்கிள் அல்லது பைக் வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்த அழகையும் குறிப்பிட்ட தினத்தில் ரசித்துத் திரும்பலாம்.

Harshap3001

வர்கலா

வர்கலா

கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் சிறுமலைக் குன்றுகளுக்கு மிக அருகாமையில் ஒட்டிய கடற்கரை பரப்பு வர்கலா கடற்கரை. இக்கடற்கரை நீந்துவதற்கும், சூரிய குளியலுக்கும் ஏற்றதாகும். அந்திசாயும் பொழுதை இங்கிருந்து காண்பது மற்ற இடங்களைக் காட்டிலும் அருமையாக இருப்பதாலோ என்னவோ அந்நேரத்தில் பல சுதந்திரக் காதலர்களைக் காணலாம்.

Shishirdasika

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கா நதி அருகே உள்ள இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷ் உள்ளது. சன்னியாசி போன்ற மதஅடிப்படையிலான கிப்பிகளுககு ரிஷிகேஷ் சிறந்த தலமாகும். இது இந்து பக்தர்களிடையே புகழ் பெற்ற இடமாகவும்

உள்ளது. இங்குள்ள ஆசிரமங்களிலேயே ஒன்றில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம். ஆன்மீகத்தை ஆராயலாம்.

Sumita Roy Dutta

கொடைக்கானல்

கொடைக்கானல்

தமிழகத்தில் அமைந்துள்ள பிரபலமான மலை சுற்றுலாத் தலங்களில் கொடைக்கானல் முக்கிய பங்கு வகிக்கிறது. பசுமையான பனிக்கட்டி மற்றும் குளிர்ந்த வெப்பநிலையுடன், இது சிறந்த கோடை கால சுற்றுலாத் தலமாகும். அது மட்டுமல்ல, கொடைக்கானல் காடுகளில் தற்போதும் கிடைக்கும் மாயக் காளான்கள் தடைசெய்யப்பட்ட பிரபலமான போதைப் பொருளாக உள்ளது. இது உண்மையிலேயே மாய அனுபவத்தைத் தருகிறது. அதாவது நான்கு காளான்களை சாப்பிடுவதன் மூலம் சிவனின் தாண்டவத்தைக் காணலாம் என உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.

Wikitom2

கேங்டாக்

கேங்டாக்

சிக்கிம் மாநிலத்தில் மிகப்பெரிய நகரம் கேங்டாக் ஆகும். இமயமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இது துயரங்களைத் துறந்து, வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு வசதியான இடமாக திகழ்கிறது. நேபாளம் மற்றும் திபெத் எல்லைக்கு அருகே, பல கலாச்சார செல்வாக்கையும் அனுபவிக்கும் ஒரு பெரிய இடமாக உள்ளது. கிப்பி போன்று வாழ்வின் அர்த்தம் தேடுவோர் இங்கே வருவது வழக்கம்.

Siegmund Stiehler

மணாலி

மணாலி

இந்தியாவின் வடக்கு ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உயரமான இமாலயன் ரிசார்ட் நகரம் மணாலி ஆகும். ரம்மியமான பசுமைக் காடுகள் சூழ அமைந்துள்ள மணாலி உலகை மறந்து காதலை ரசிக்க ஏற்ற இடம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

Ashish Gupta

நீங்க ரெடியா ?

நீங்க ரெடியா ?

அனைத்து வகையான கிப்பி குழுவினருக்கும் ஏற்ற கடற்கரைகளும், மலைவாசத் தலங்களும், வரலாற்று இடங்களும் என பல தலங்கள் இந்தியாவில் உள்ளது. உங்களது வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிய விரும்புபவராக நீங்கள் இருந்தால், கட்டுப்பாடுகளற்ற மகிழ்ச்சியை அனுபவிக்க ஏங்கினால் இந்தப் பகுதிகளுக்கு கிப்பியாக சென்று வாருங்கள்.

Frank Vincentz

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more