இந்தியாவில் சுற்றுலாத் தலங்களுக்கும், இயற்கை அதிசயங்களுக்கும், நினைவுச் சின்னங்களுக்கும், பாரம்பரிய வரலாற்றுத் தலங்களுக்கும், அரண்மனைகளுக்கும் பஞ்சமே இல்லை! இந்தியாவின் அழகான சுற்றுலாத் தலங்களைக் காண ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் வெளிநாட்டினர் இந்தியாவிற்கு வருகை தருவது வழக்கமான விஷயமே!
கடந்த இரண்டு ஆண்டுகளாக பல கட்டுப்பாடுகளையும் தாண்டி, வெளிநாட்டவர்கள் இந்தியாவில் சுற்றுலாவிற்க்காக வந்து சென்றுள்ளனர்! அவர்களின் மனதைக் கவர்ந்த டாப் 10 சுற்றுலாத் தலங்கள் இவை தான்!

மகாபலிபுரம், தமிழ்நாடு
7 ஆம் நூற்றாண்டு பல்லவ காலத்து சிற்பக்கலைக்கு நன்கு அறியப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரியத் தளமான மகாபலிபுரம் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டிற்கே மிகவும் பெருமையான தருணமாகும். 144984 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் இந்த 40 பழமையான நினைவுச்சின்னங்களின் தொகுப்பு முதல் இடம் பிடித்துள்ளது.

தாஜ்மஹால், உத்தரப் பிரதேசம்
முகலாய பேரரசர் ஷாஜஹானால் தனது விருப்பமான மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்ட இந்த அன்பின் சின்னம் உலக அதிசயங்களில் ஒன்றாகும். எப்பொழுதும் முதல் இடத்தை அசாத்தியமாக பிடிக்கும் தாஜ்மஹால் 38922 பார்வையாளர்களுடன் இந்த முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

சலுவன்குப்பம், தமிழ்நாடு
மகாபலிபுரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சலுவன்குப்பம் ஒரு கடலோர குக்கிரமமாகும். முதல் பார்வையில் இந்த இடம் சிறப்பு வாய்ந்ததாகத் தோன்றாவிட்டாலும், இதனுள் ஒளிந்துக் கிடக்கும் பழமையும் வரலாறும் அதிகம். 25579 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் இந்த இடம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆக்ரா கோட்டை, உத்தரப் பிரதேசம்
லால் கிலா, ஃபோர்ட் ரூஜ் அல்லது ஆக்ராவின் செங்கோட்டை என்றும் அழைக்கப்படும் ஆக்ரா கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இது புகழ்பெற்ற தாஜ்மஹாலுக்கு வடமேற்கே சுமார் 2.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. யமுனை ஆற்றின் கரையோரத்தில் செங்கற்களால் ஆன மிகப்பெரிய கோட்டையின் கட்டுமானம் கடந்த ஆண்டு 13598 வெளிநாட்டவரை ஈர்த்து நான்காம் இடத்தில் உள்ளது.

செஞ்சி கோட்டை, தமிழ்நாடு
16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை முகலாயர்கள், பிரெஞ்சு, ஆங்கிலேயர்களின் ஆட்சியைக் கண்டுள்ளது. கம்பீரமான கோட்டை, மூன்று வெவ்வேறு மலை உச்சி கோட்டைகள், தடித்த சுவர்கள் மற்றும் பாறைகள் காரணமாக மராட்டிய மன்னரான சிவாஜி, "இந்தியாவின் மிகவும் அசைக்க முடியாத கோட்டை" என்று இக்கோட்டைக்கு பெயரிட்டது குறிப்பிடத்தக்கது. 10483 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் செஞ்சி கோட்டை ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

வட்டக்கோட்டை, கன்னியாகுமரி, தமிழ்நாடு
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியின் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை பெரும்பாலும் கிரானைட் கற்களால் ஆனது. கோட்டையின் அழகான கட்டிடக்கலையைக் காண ஆண்டுதோறும் இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 9174 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் வட்டக்கோட்டை ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

குதுப்மினார், டெல்லி
800 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த வரலாற்று நினைவுச்சின்னம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் என்ற பெருமையை தாங்கி நிற்கும் குதுப்மினாரை காண கடந்த ஆண்டு 8456 வருகை தந்துள்ளனர்.

தி ஃபோர்ட் மியூசியம், திருமயம், தமிழ்நாடு
ராம்நாட்டின் ராஜாவால் கட்டப்பட்ட, திருமயம் கோட்டை 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அதன் தொன்மையான கட்டிடக்கலையால் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. ASI ஆல் விரிவாக புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் திருமயம் கோட்டை 8422 வெளிநாட்டு பார்வையாளர்களை கவர்ந்து 8 ஆம் இடத்தில் உள்ளது.

செங்கோட்டை, டெல்லி
ஷாஜஹானால் கட்டப்பட்டு நகரத்தில் முகலாய பேரரசர்களின் முதன்மை இல்லமாக செயல்பட்ட லால் கிலா என்றழைக்கப்படும் செங்கோட்டை 5579 வெளிநாட்டு பார்வையாளர்களைக் கவர்ந்து 9 ஆம் இடத்தில் உள்ளது.

ராக் கட் ஜெயின் கோவில், சித்தனவாசல், தமிழ்நாடு
அரிவர் கோயில், ராக் கட் ஜெயின் கோவில் என்று பிரபலமாக அறியப்படும் சித்தனவாசல் ஒரு ஜெயின் மடாலயமாகும். ஜெயின் சமூகத்தினரிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலின் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. இதைக் காண 5,432 வெளிநாட்டு பார்வையாளர்களுடன் 1௦ ஆம் இடத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications





