Search
  • Follow NativePlanet
Share
» »ஹரப்பாவில் கால்பதித்த தமிழர்கள்! ஆரியர்களை அச்சம் கொள்ளச் செய்த ஆய்வு

ஹரப்பாவில் கால்பதித்த தமிழர்கள்! ஆரியர்களை அச்சம் கொள்ளச் செய்த ஆய்வு

இந்தியா என்று தோன்றியதோ அதற்கு முன்பு இருந்தே இந்த ஆரிய திராவிட பிரச்னைகளும் இருக்கின்றன. திராவிடத்தின் பெருமைகளை களவாடி, தன் முதலெழுத்தை இட்டு பல காரியங்களைச் செய்துள்ளது ஆரியம் என்ற குற்றச் சாட்டு பல ஆண்டுகளாகவே பலர் கூறி வரும் ஒன்று. இது திராவிடத்தை ஆதரிக்கும் அனைவருக்கும் தெரியும். திராவிடத்தின் செயல்பாடுகளை குறை சொல்லும் ஆரிய கட்சிகள் வேண்டுமென்றே சில பொய்க் குற்றச்சாட்டுகளை பரப்பி, தமிழர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சியிலும் இருக்கின்றன. ஆனால் தமிழர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் உண்மையான ஆய்வு முடிவுகளும் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதன்படி இந்த முடிவுகள் சில சூழ்ச்சி ஆரியர்களை அச்சம் கொள்ளச் செய்கின்றன. வாருங்கள் உலகின் வரலாற்றை திரும்ப எழுதும் தமிழர்களின் பழமையை பற்றித் தெரிந்துகொள்வோம்.

 ஹரப்பா நாகரிகம்

ஹரப்பா நாகரிகம்

உலகின் மிகப் பழமையான ஒரு நாகரிகம் ஹரப்பா நாகரிகம். இது உலகுக்கே முன் மாதிரியான ஒரு இடம் என்று பலரால் நம்பப்படுகிறது. இங்கு வாழ்ந்தவர்கள் அந்த காலத்திலேயே நீர் மேலாண்மை, வடிகால் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருந்தார்கள் என்பதிலிருந்தே எந்த அளவுக்கு சிறப்பான நாகரிகம் கொண்டவர்கள் என்பதை புரிந்துகொள்ளலாம்.

 சிந்துசமவெளியில் ஆரியர்கள்

சிந்துசமவெளியில் ஆரியர்கள்

சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் ஆரியர்கள் என்பது சிலரின் கூற்று. ஆனால் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்து இங்கு தங்கினர் என்று பலர் தங்களை ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் அந்த ஆராய்ச்சிகளை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

திராவிடர்கள்

திராவிடர்கள்

ஏற்கனவே, திராவிடர்கள் எனும் தென்னிந்திய இனம் அடக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உயர்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு ஆய்வு ஆரியர்கள் என்று தங்களை கருதும் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

என்ன ஆய்வு

என்ன ஆய்வு

உலகின் பழம்பெருமை வாய்ந்த இனங்கள் பற்றிய ஆய்வு, அவர்களின் நாகரிகம் பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுபோல் இந்தியாவிலும் அகழ்வாய்வுகள் நடந்துவருகின்றன. சில சமயங்களில் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டாலும், சில நல்ல அதிகாரிகளின் தீவிரமான முயற்சிகளினால் மெல்ல மெல்ல சில ஆய்வு முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

குஜராத்தே தமிழர்கள் கையில்

குஜராத்தே தமிழர்கள் கையில்

இந்த ஆய்வுகளின் படி, வடநாடுகளின் பெரும்பகுதியில் தமிழர்கள் எனும் ஆதி குடி மக்கள் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க சில தரப்பிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டு, மூடப்பட்டு கிடப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தேசமான குஜராத் பூமியே தமிழர்களின் தேசம்தான் எனும் முடிவுகள் வெளிவந்தன.

 எந்த பகுதியில் ஆய்வு நடந்தது

எந்த பகுதியில் ஆய்வு நடந்தது

தற்போது ஹரியானாவின் ராகிகார்க்கி எனும் பகுதியில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முந்தைய எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் தற்போது சில தரப்பினரை வியக்க வைத்துள்ளது. காரணம் அந்த எலும்புக் கூட்டின் ஜீன் அமைப்பு குறிப்பிட்ட இனத்தை சார்ந்து இருக்கிறதாம். அது யார் தெரியுமா?

 தமிழர்கள் போற்றும் சமத்துவம்

தமிழர்கள் போற்றும் சமத்துவம்

தமிழர்கள் எப்போதுமே அண்டை மாநிலங்களுடன் சமரசமாக போய்விடுவார்கள். அவர்களின் சமத்துவம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும். அதனால்தான் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்யும் சில சக்திகள் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க படாத பாடு படுகின்றன.

 தமிழர்கள்தான் உலகின் முதல் குடி

தமிழர்கள்தான் உலகின் முதல் குடி

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி மக்கள் என்ற வாக்குக்கேற்ப வெளியான இந்த முடிவுகள், அந்த எலும்புக் கூடு கண்டிப்பாக ஒரு திராவிட இனத்தவருடையது என்பது தெரியவந்துள்ளது.

Amrutha Sachin

 யார் அந்த ஆராய்ச்சியாளர்கள்

யார் அந்த ஆராய்ச்சியாளர்கள்

பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு, அழுத்தங்களுக்கு மத்தியில், இந்த முடிவுகளை ஆராய்ச்சி செய்து வெளியிட்டது டாக்டர் வசந்த் எனும் ஆராய்ச்சி அதிகாரி தலைமையிலான குழு ஆகும். இவர்கள் சில ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு, இங்குள்ள எலும்பு கூடு ஒன்றை திராவிட இனத்தவரின் எலும்பு என்று குறிப்பிட்டுள்ளனர். இது மத்திய அரசு மட்டும் இல்லாமல், பல தரப்பினர்களிடையே வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் வரவழைத்துள்ளது.

asichennai.gov.in

 எத்தனை வருட பழமை தெரியுமா

எத்தனை வருட பழமை தெரியுமா

இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள் எத்தனை வருட பழமையானது தெரியுமா?

சுமார் 4500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு இது. அதன்படி, இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்துள்ளனர்.

asichennai.gov.in

 எப்படி செய்தனர் தெரியுமா

எப்படி செய்தனர் தெரியுமா

இந்த எலும்புகளின் உட்புறம் இருக்கும் சிறு சிறு திசுக்களை நவீன தொழில்நுட்பம் மூலம் பிரித்து எடுத்து அதைச் சோதித்துள்ளனர். அதில் இருக்கும் திசுக்களின் டிஎன்ஏவை எடுத்து அதை ஆராய்ச்சி செய்யும் முடிவை எடுத்துள்ளனர். பின் ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

asichennai.gov.in

 ஆரியர் இல்லை

ஆரியர் இல்லை

இந்த முடிவுக்குப் பிறகு ஹரப்பாவில் வாழ்ந்த இனத்தவர்கள் ஆரியர்கள் இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளனர். இதை அவர்கள் பல்வேறு சோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளனர்.

asichennai.gov.in

 பதப்படுத்தும் முறை

பதப்படுத்தும் முறை

இந்த எலும்புக் கூடுகள் இத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்ததில் ஒரு விசயம் தெளிவாகியுள்ளது. இது திராவிட முறைப்படி புதைக்கப்பட்ட ஒருவரின் எலும்புக்கூடு. விபத்திலோ இயற்கைச் சீற்றத்திலோ பலியானவர்கள் இல்லை. மேலும் ஆரியர்களைப் போல உடலுக்கு எரியூட்டவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

asichennai.gov.in

 அறிவியல் முறை

அறிவியல் முறை

இதன் அறிவியல் முறைச் சோதனையில் ஆரியரின் டிஎன்ஏவுடன் பொருந்திப் போகவில்லை என்பது தெளிவாகியதும் அடுத்தக்கட்ட முறையை ஆராயத் தொடங்கினார்கள். அதிலும் ஆரியரின் சம்பந்தம் துளி கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.

asichennai.gov.in

 மத முறைகள் ஏதும் இல்லை

மத முறைகள் ஏதும் இல்லை

ஆரிய வழிப்படி, எரியூட்டப்படவில்லை என்பதுடன், இந்த எலும்பு கிடைக்கப்பட்ட இடத்தில் மத முறைகள் எதுவும் இல்லை. கண்டுபிடிக்கப்பட்ட எந்த பொருளும் வேத முறைப்படி, அதனுடன் தொடர்பில் இல்லை. இது வேத கால பொருள்களுடன் பொருந்தவும் இல்லை.

asichennai.gov.in

 சமக்கிருதம் இல்லை

சமக்கிருதம் இல்லை

அதே நேரத்தில் இந்தபொருள்களில் எதிலும் சமக்கிருத எழுத்துக்கள் இல்லை. ஆனால் இதில் எழுத்துக்கள் இருந்துள்ளன. அவை பார்ப்பதற்கு தமிழின் ஆதி வடிவ எழுத்துக்களை ஒத்து இருந்துள்ளன. ஆனால் அதற்கான பொருளை அறிய முடியாத வண்ணம் இருக்கின்றன.

wikimedia.org

 கீழடியும், ஹரியானாவும்

கீழடியும், ஹரியானாவும்

மதுரை அருகிலுள்ள கீழடியில் சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட பொருள்களில் ஆதி தமிழ் எழுத்துக்கள் இருந்துள்ளன. அவற்றுடன் ஒப்பிட்டால், எந்த காலத்தில் மக்கள் சிந்து சமவெளியில் வாழ்ந்தார்கள் என்பதை துல்லியமாக கண்டறிந்துவிடலாம்.

VijayaVSR

 தமிழர்களின் பழக்கவழக்கங்கள்

தமிழர்களின் பழக்கவழக்கங்கள்

சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பலருக்கும் தமிழ் தெரிந்திருக்கவேண்டும். அவர்கள் நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சு வழக்கில் இருந்த தூய தமிழில் உரையாடியிருக்கவேண்டும் என்றே நம்பப்படுகிறது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

Paramatamil

 கீழடி தமிழ்

கீழடி தமிழ்

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியுடன், பல பொருள்களிலும் தமிழ் அடையாள எழுத்துக்கள் இருந்துள்ளன. அதாவது அவைகள் எழுத்துக்கள் உருப் பெருவதற்கு முன்னர் அடையாளமாக குறிக்கப் படும் குறியீடுகள்.

அதே குறியீடுகளை ஒத்த எழுத்துக்கள்தான் தற்போது ஹரியானாவில் கண்டறியப்பட்டுள்ளன.

Paramatamil

 உலமே வியக்கும் பிரம்மாண்ட ஆய்வு

உலமே வியக்கும் பிரம்மாண்ட ஆய்வு

ஹரியானாவில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக கீழடி போன்ற பகுதிகளில் கிடைக்கப்பட்ட ஆதார எழுத்துகளை ஒப்பிட்டு பார்த்தால், ஓரளவுக்கு தமிழின் முதுமையை நாம் அறிய முடியும்.

ஆனால்....

ஆளும் அரசுகள் இதுபோன்ற ஆய்வுகளில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருப்பது, வேண்டுமென்றே தமிழர்களின் வரலாற்றை மறுக்கின்ற, திட்டமிட்டு மறைக்கின்ற செயலாக இருக்குமோ என்ற எண்ணம் தமிழ் ஆர்வலர்களிடம் இல்லாமல் இல்லை. எனினும், நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே...

Paramatamil

 ஹரியானா அருங்காட்சியங்கள்

ஹரியானா அருங்காட்சியங்கள்

ஹரியானாவில் ஹெரிடேஜ் டிரான்ஸ்போர்ட் அருங்காட்சியகம், கிருஷ்ணா அருங்காட்சியகம், வின்டேஜ் கேமரா அருங்காட்சியகம், குருசேத்திரா அருங்காட்சியகம், ரயில் அருங்காட்சியகம், கல்பனா சாவ்லா அருங்காட்சியகம், பானிபட் அருங்காட்சியகம், தாரோகர் அருங்காட்சியகம், போல்க் அன்ட் ட்ரைபல் அருங்காட்சியகம் போன்ற பல அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அவை மிகவும் சிறப்பானவையாகும்.

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more