» »பால் ஊற்றி வளர்க்கப்பட்டதா புத்தர் ஞானம் பெற்ற போதி மரம்

பால் ஊற்றி வளர்க்கப்பட்டதா புத்தர் ஞானம் பெற்ற போதி மரம்

Written By: Udhaya

புத்தமதத்தை நிறுவிய பகவான் புத்தர் பீஹாரில் உள்ள கயா நகரில் ஞானத்தை அடைந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆகவே பிகாரில் உள்ள இந்த கயா நகரம் புத்த மதத்தினரிடையே மிகப் பிரபலமாக விளங்குகிறது. முந்தைய காலத்தில் இந்த நகரம் மகத சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது மேலும் இந்த நகரமானது பாட்னாவிற்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரமானது அனைத்து மதங்களிலும் மிகப் புனிதமாக கருதப்படுகின்றது.

இந்த நகரம் மூன்று பக்கங்களிலும் சிறிய பாறைகளால் ஆன மலைகளான மங்கள-கவுரி, ஷ்ஹ்ரிஙா-ஷ்ட்ஹன், ராம்ஸிலா, மற்றும் பிரம்மயோனி போன்றவற்றாலும், இதன் மேற்கு பக்கத்தில் ப்ஹல்கு என்கிற நதி ஓடுகின்றது. கயா நகரத்திற்கு வடக்கில் ஜெஹ்னாபாத் மாவட்டமும் தெற்கில் ஜார்கண்ட் மாநிலத்தின் ச்ஹட்ரா மாவட்டமும் அமைந்துள்ளது. இதன் கிழக்கில் நவாடா மாவட்டமும் மேற்கில் அவுரங்காபாத் மாவட்டமும் அமையப்பெற்றுள்ளன.

 மகாபோதி கோயில்

மகாபோதி கோயில்

உயரமான அம்சமான பெருமைகொள்ளத்தக்க ஒரு கட்டிடம் இந்த கோயில் ஆகும்.

48 சதுரஅடி உயர வளாகத்தில் கிட்டத்தட்ட பிரமிடு வடிவத்தில் உள்ள இந்தியாவின் ஒரே கோயிலாகும்.

7ம் நூற்றாண்டைச் சேர்ந்த இது புத்தருக்காக கட்டப்பட்டது என்றாலும் எம்மதத்தினரும் வருகை தரும் கோயிலாக அமைந்துள்ளது.

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் ஒன்று இந்த கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Andrew Moore

விஷ்ணுபாத கோயில்

விஷ்ணுபாத கோயில்


நகரின் மற்றொரு அழகான மற்றும் குறிப்பிடத்தக்க அம்சம் ப்ஹல்கு நதியை ஒட்டி அமைந்துள்ள விஷ்ணு பாத கோவில் ஆகும். இங்கு கருங்கல்லில் செதுக்கப்பட்ட தர்மஸிலா என குறிப்பிடபடும் விஷ்ணூ பாதம் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள பிரஹ்மஜுனி பார்வையாளர்களுக்கு ஒரு உன்னத அனுபவத்தை வழங்குகின்றது. இந்த மலையை கல் படிகளை பயன்படுத்தி ஏறி இந்தக் கோவிலின் அழகிய காட்சிகளை கண்டு மகிழலாம்.

விஷ்ணு பாதம் சுமார் 40 செ.மீ நீளமுடையது மற்றும் அது வெள்ளிக் கவசத்தால் சூழப்பட்டுள்ளது. இந்த கோவில் மேற்கூரையானது எட்டு அழகிய மற்றும் கவர்ச்சிகரமாக செதுக்கப்பட்ட தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலானது கிழக்கு நோக்கி எண் கோண வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் இறவாத ஆலமரமான அக்ஷயபாத் ஒன்று உள்ளது. அந்த ஆலமரத்தில் அடியில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு நடத்தப்படுகின்றது.

Bpilgrim

 துங்கேஸ்வரி குகைக் கோயில்கள்

துங்கேஸ்வரி குகைக் கோயில்கள்

மகாகால குகைகள் அல்லது துங்கேஸ்வரி குகைக்கோயில்கள் சிறந்த ஆன்மீகத் தலமாகும்.

புத்தர் ஞானம் பெறுவதற்கு முன் பல வருடங்கள் இங்கு இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு வேளை நீங்கள் எதையாவது எதிர்பார்த்து இந்த குகைக்குள் சென்றால் வருத்தப்படாதீர்கள் உங்களுக்கு அப்படி எதும் கிடைத்துவிடாது. ஆனால், ஆன்மீகவாதிகள், நாட்டமுள்ளவர்கள் செல்லும் போது மன அமைதியும், புத்துணர்வும் கிடைக்கிறது

juggadery

பராபர் குகைகள்

பராபர் குகைகள்

பழமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த இடம் பராபர் குகைகள் என்று அழைக்கப்படுகிறது.

இதன் உருவாக்கம் கிமு 322லிருந்து கிமு 185க்குள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உலகின் மிகப் பழமையான பாறை வெட்டு கோயில்கள் அதாவது குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்து மத உருவங்களும், சமண மத உருவங்களும் இங்கு பல காணப்படுகின்றன.

Hideyuki KAMON

போதி மரம்

போதி மரம்


புத்தருக்கு ஞானம் தந்த போதிமரம் மகாபோதி கோயிலின் தெற்கு பக்கத்தில் அமைந்துள்ளது

இந்த மரத்தின் அடியில் தவமிருந்தபோதுதான் ஞானம் பெற்றதாக புத்தரை பின்பற்றுபவர்களால் நம்பப்பட்டு வருகிறது.

இந்த மரம் ஒரு சமயத்தில் விழுந்துவிட்டதாம். அதன்பிறகு புத்தரின் மனைவி சொல்லி பால் ஊற்றி வளர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Ken Wieland

 சீன கோயில் மடம்

சீன கோயில் மடம்

இங்கு சீன கோயில் என்ற ஒன்று உள்ளது. இது மகாபோதி கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது.

1945ம் ஆண்டு சீன அரசால் இந்த கோயில் கட்டப்பட்டது.

இங்கு இருக்கும் 200 வருட பழமையான புத்தர் சிலை சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கருத்து நிலவுகிறது.

Photo Dharma

புத்தகயா அருங்காட்சியகம்

புத்தகயா அருங்காட்சியகம்

1956 ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் புத்தர், புத்தமதம் தொடர்பான நிறைய தகவல்கள் கிடைக்கும்.

கிமு முதலாம் நூற்றாண்டில் உள்ள பழமையான பொக்கிஷங்கள் பல இந்த அருங்காட்சிகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல உலோக புத்தர் சிலைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Photo Dharma

 முச்சலின்டா ஏரி

முச்சலின்டா ஏரி

புத்தமதத்தின் மிகப் புனிதமான இடமாக கருதப்படும் இந்த ஏரி, புத்தர் குளித்த இடமாக கூறப்படுகிறது.

புத்தர் தனது ஆறாவது வார தியானத்தின்போது ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாம்புகளின் ராசாவான முச்சலின்டா புத்தரை காப்பாற்றியதாக கூறுகின்றனர்.

Photo Dharma

 தாய் கோயில் மடம்

தாய் கோயில் மடம்

சீன கோயிலைப் போல, தாய்லாந்திலிருந்து வந்த கலை வடிவில் கட்டப்பட்டது இந்த தாய் கோயில்.

தாய்லாந்து கட்டிட அமைப்பில் உருவான இந்த கோயில் சூரிய ஒளியில் பிரதிபலிப்பது போன்று அற்புதமாக கட்டப்பட்டுள்ளது.

Photo Dharma

 ராயல் பூடான் மடம்

ராயல் பூடான் மடம்

இங்கு சீன, தாய்லாந்து மடங்களைப் போலவே பூடான் மடமும் உள்ளது. இங்கு புத்தருக்கு ஏழு அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அழகானது.

தியானம் ஆன்மீகம் தவிர்த்து பார்த்தாலும்கூட இந்த புத்த கயா மிகச்சிறந்த சுற்றுலா பிரதேசமாகும்.

Hideyuki KAMON

கயாவை சுற்றிப் பார்க்க உகந்த காலம்

கயாவை சுற்றிப் பார்க்க உகந்த காலம்

கயா சுற்றுலாவிற்கு மார்ச் முதல் அக்டோபர் வரையிலான பருவமே மிகவும் சிறந்தது. இங்கு மார்ச் மதல் அக்டோபர் வரையில் இனிமையான வானிலை நிலவுவதால் இந்தப் பருவத்தில் இந்தப் புனித நகரத்திற்கு சுற்றுலா வருவதே சிறந்தது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவம் குறுகிய பயணத்திற்கும் கோவில்களை தரிசிப்பதற்கும் மிகவும் நல்லது.

கயாவை எவ்வாறு அடைவது?

கயாவை எவ்வாறு அடைவது?

கயா விமானம், ரயில், மற்றும் சாலையை பயன்படுத்தி எளிதாக அடையலாம்.

சாலை மூலம்

கிராண்ட் ட்ரங்க் ரோடு (NH-2, தங்க நாற்ககர சாலைகள் திட்டத்தின் கீழ் சிறப்பாக சீரமைக்கப்பட்டது) கயா நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. ஆகவே கயா நகரானது கொல்கத்தா, வாரணாசி, அலகாபாத், கான்பூர், தில்லி மற்றும் அமிர்தசரஸுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் மூலம்

கயா சந்திப்பானது நாட்டின் மிக முக்கியமான நகரங்களான தில்லி, மும்பை, மற்றும் கொல்கத்தா உடன் அகல ரயில்பாதை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கயாவில் இருந்து தில்லிக்கு தினசரி இடை நிலை நில்லா ரயிலான மஹாபோதி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகின்றது. கயாவில் இருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விமானம் மூலம்

விமானம் மூலம் கயா செல்ல விரும்பிவர்களுக்காக கயாவில் ஒரு விமான நிலையம் உள்ளது. பீஹார் மற்றும் ஜார்கண்ட் பிரேதசத்தை உள்ளடக்கி கயாவில் மட்டுமே சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இந்த சிறிய விமான நிலையம், கொழும்பு மற்றும் பாங்காக் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.