Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதியை பின்னுக்குத் தள்ளிய பணக்கார கோயில் ; இந்த கோயில்களுக்குலாம் இவ்வளவு வருமானம் வருதா அப்பப

திருப்பதியை பின்னுக்குத் தள்ளிய பணக்கார கோயில் ; இந்த கோயில்களுக்குலாம் இவ்வளவு வருமானம் வருதா அப்பப

திருப்பதியை பின்னுக்குத் தள்ளிய பணக்கார கோயில் ; இந்த கோயில்களுக்குலாம் இவ்வளவு வருமானம் வருதா அப்பப்பா?

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கும். அந்த வகையில் இந்தியாவின் பணக்கார கோயில் என்றால் அனைவருக்கும் தெரிவது திருப்பதி வெங்கடாசலபதி கோயில். ஆனால் தற்போதைய தகவலின்படி இந்த கோயில் அதன் இடத்திலிருந்து கீழே இறங்கிவிட்டது.

இந்தியாவின் டாப் 10 கோயில்கள் பற்றி தெரிந்துகொள்ள நம்மில் ஒவ்வொருவரும் ஆர்வமாக இருப்போம். கோயிலின் வருவாய், சிறப்புகள் கொண்டு இந்த தரவரிசை கணக்கிடப்படுகிறது.

வாருங்கள் இந்தியாவின் டாப் 10 சிறந்த கோயில்களைக் காணலாம்.

குஜராத் சோமநாதர் கோயில்

குஜராத் சோமநாதர் கோயில்

சோமநாதபுரம் கோயில் குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில், கிர்சோம்நாத் மாவட்டத்தில், பிரபாச பட்டினக் கடற்கரையில் சோமநாதபுரம் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

BeautifulEyes

குஜராத் சோமநாதர் கோயில்

குஜராத் சோமநாதர் கோயில்

இங்கு சோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும்.

Narendra Modi

காசி விஸ்வநாதர் கோயில்

காசி விஸ்வநாதர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம் வாராணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது.

பா.ஜம்புலிங்கம்

காசி விஸ்வநாதர் கோயில்

காசி விஸ்வநாதர் கோயில்

வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது.

விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

Unknown

பூரி ஜெகன்னாதன் கோயில்

பூரி ஜெகன்னாதன் கோயில்

ஒடிஷாவின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான ஜகன்னாதர் கோயில், பூரியின் கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது.

Shouvik Seal

பூரி ஜெகன்னாதன் கோயில்

பூரி ஜெகன்னாதன் கோயில்


பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகிய முக்கடவுளர்களும் அருள் பாலிக்கும் ஜகன்னாதர் கோயிலுக்கு நிம்மதியை நாடி எண்ணிலடங்கா பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

வருடா வருடம் ஏற்பாடு செய்யப்படும், ரத யாத்திரை என்றழைக்கப்படும் தேர்த்திருவிழாவின் போது இங்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்

RJ Rituraj

 மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் பல சிறப்புகள் வாய்ந்தது. ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேர் வரை மீனாட்சியம்மனை தரிசிக்க வருகைதருகின்றனர்.

இந்த கோயிலின் வருவாய் 6 லட்சம் ஆகும். உலக அதிசயங்களில் இடம் பெறவேண்டிய பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இக்கோயிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jorge Royan

 மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மதுரை மீனாட்சியம்மன் கோயில்

மற்ற எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் சிவபெருமான் இங்கு இடது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார்.

KennyOMG

பொற்கோவில்

பொற்கோவில்

தங்கத்தால் கட்டப்பட்ட கோயில் என்பதால் இது பொற்கோயில் ஆகும். இரவு நேரத்தில் இந்த கோயிலின் கோபுரம் அழகாக இருக்கும்.

இது இந்தோ - இஸ்லாமிய, இந்தோ - ஐரோப்பிய கட்டுமான முறைகளில் கட்டப்பட்டது.

Oleg Yunakov

பொற்கோவில்

பொற்கோவில்


அவர்களின் புனித நூலான குருநானக் சாகிப் புத்தகம் வைக்கும் இடத்தில் விலைமதிப்பற்ற வைரகற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

இங்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.

Ian Sewell

 சித்தி விநாயகர் கோயில்

சித்தி விநாயகர் கோயில்

கோயில் என்றாலே அழகான கோபுரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுசூழலும்தான் நினைவுக்கு வரும். ஆனால் சித்தி விநாயகர்கோயில் கட்டிடமாக 6 மாடிகளாக கட்டப்பட்டது.

இது 1990ம் ஆண்டு கட்டப்பட்ட கோயில் ஆகும். இங்கு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை அமைந்துள்ளது.

Darwininan

 சித்தி விநாயகர் கோயில்

சித்தி விநாயகர் கோயில்


விநாயகர் 4 கிலோ தங்கத் தகடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு விழாக் காலங்களில் நாளொன்றுக்கு 2லட்சம் பக்தர்கள் வரை வருவார்களாம்.

வருடத்திற்கு 120 கோடி ரூபாய் வரை நன்கொடை வருகிறது என்று கூறுகிறார்கள்.

స్వంత కృతి

வைஷ்ணவதேவி கோயில்

வைஷ்ணவதேவி கோயில்

இந்தியாவில் இருக்கும் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த கோயிலின் மூலவர் மாதா வைஷ்ணவதேவி ஆவார்.

வைஷ்ணவதேவி கோயில்

வைஷ்ணவதேவி கோயில்

இங்கு குவியும் பக்தர்கள் கூட்டம் ஏராளம். ஜம்முவில் இருக்கும் இந்த கோயிலும் இந்தியாவின் செழிப்பான கோயில்களின் பட்டியலில் உள்ளது.

திருப்பதிக்கு அடுத்து இந்த கோயிலுக்குத்தான் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். வருடத்துக்கு 500 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடைகள் வந்து சேர்கின்றன.

 ஷீரடி சாய்பாபா கோயில்

ஷீரடி சாய்பாபா கோயில்


இந்த பட்டியலில் அடுத்து இருக்கும் கோயில் மும்பையிலுள்ள ஷீரடி சாய்பாபா கோயில் ஆகும். இந்திய மக்கள் எந்த கடவுளை வழிபட்டு வந்தாலும், சாய்பாபாவையும் வழிபட்டு வருகின்றனர் என்பது சிறப்பு.

இந்த கோயிலுக்கு வருடத்திற்கு 360 கோடி ரூபாய் நன்கொடை வருகிறது. 32 கோடிக்கு நிகரான தங்கங்களும், 6 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நாணயங்களும் இங்குள்ளது.

Amolthefriend

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு சென்றது ஆந்திராவில் இருக்கும் திருப்பதி கோயில்.

இங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து வெங்கடாசலபதியை வழிபட்டு செல்கின்றனர்.

Srikarkashyap

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்

திருப்பதி வெங்கடாசலபதி கோயில்


இங்கு வெங்கடாசலபதிக்கு அணிந்திருக்கும் ஆபரணங்களும், பட்டுத் துணிகளும் ஆயிரம் கிலோ தங்கத்தைக் கொண்டது.

கிடைக்கும் லட்டுகளின் விற்பனை மட்டுமே 11 லட்சம் என்கிறார்கள். வருடத்திற்கு இந்த கோயிலுக்கு வரும் நன்கொடை மட்டுமே 650 கோடி என்றும் கூறப்படுகிறது.

Vimalkalyan

பத்மநாப சுவாமி கோயில்

பத்மநாப சுவாமி கோயில்

இந்த கோயில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. கோயிலின் கட்டுமானம் கேரளமுறையிலும் திராவிட கட்டுமான முறையிலும் கட்டப்பட்டுள்ளது.

Thejas Panarkandy

பத்மநாப சுவாமி கோயில்

பத்மநாப சுவாமி கோயில்

இந்த கோயில் 16ம் நூற்றாண்டு கோபுரத்தையும், பெரிய சுற்றுசுவரையும் கொண்டுள்ளது.

இந்த கோயிலில் விஷ்ணு மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக காட்சி தருகிறார். இந்த கோயில்தான் இந்தியாவின் செழிப்பான கோயில். இங்கு இருக்கும் மகாவிஷ்ணுவின் சிலை 500 கோடி ரூபாய் அளவுக்கு விலையுயர்ந்தது என்று கூறப்படுகிறது.

Roberto Faccenda

பத்மநாப சுவாமி கோயில்

பத்மநாப சுவாமி கோயில்


இந்த கோயிலின் ரகசிய அறைகளில் தங்க, வைர. வைடூரிய ஆபரணங்கள் பல கோடி மதிப்பில் கண்டெடுக்கப்பட்டன.

Step

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X