» »பகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..!!

பகல்பூரில் பார்க்கவேண்டிய 10 இடங்கள்..!!

Written By: Sabarish

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்ற நகரமாக பாகல்பூர் உள்ளது. இம்மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றாகவும், சிறப்பாக வளர்ச்சி பெற்ற கட்டமைப்பு வசதிகள் கொண்ட நகரமாகவும் உள்ள பகல்பூர் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. இந்நகரைப் பற்றி 7-ம் நூற்றாண்டுகளிலிருந்தே வரலாற்று தகவல்கள் கிடைத்துள்ளன என்றால் வியப்பாகத்தான் உள்ளது. வளமான ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள பாகல்பூரில் அபரிமிதமான அளவு சுற்றுலாத் தலங்களும் செங்கற்கல் சூளைகளும் அதிகளவில் உள்ளன. இதில் குறிப்பிட்டு பகல்பூரில் பார்க்க வேண்டிய 10 சுற்றுலாத் தலங்கள் என்ன என்பதைப் பார்க்கலாமா ?

விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம்

விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம்


சூன்ஸ் என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின் மீன்களின் முக்கியமான சரணாலயமாக விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம் உள்ளது. இந்த சூன்கள் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சரணாயலம் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் நன்னீர் ஆமைகள் மற்றும் 135 வகையான நீர்வாழ் உயிரினங்களை பாதுகாத்து வரும் வளமான பல்லுயிர்பெருக்க சரணாலயமாக உள்ளது.

Irshadchemical

குப்பாகாட்

குப்பாகாட்


கங்கை நதியின் கரையில் இருக்கும் குப்பாகாட் மலையில் உள்ள குகையில் மகரிஷி மேஹி பல மாதங்கள் வசித்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணக் காட்சிகளை வெளிப்படுத்தும் பல்வேறு ஓவியங்களைக் கொண்டுள்ள அழகிய பண்ணைகளையும், தோட்டங்களையும் குப்பாகாட் கொண்டுள்ளது. புத்தர் தன்னுடைய முந்தைய பிறப்பில் இந்த மலைகளில் வாழ்ந்ததாக பலரும் நம்புகின்றனர்.

Praveshksingh

கங்கா - இ - சாப்ஸியா

கங்கா - இ - சாப்ஸியா


முகலாயர் காலத்திலிருந்தே முஸ்லீம்கள் கடைபிடித்து வந்த மிகவும் புனிதமான பயண தலமாக கங்கா - இ - சாப்ஸியா உள்ளது. இந்த இடம் பாகல்பூருக்கு அருகில் உள்ளது. கங்கா-இ-சாப்ஸியாவில் உள்ள பெரிய நூலகத்தில் பெர்சிய மற்றும் அரேபிய புத்தகங்கள் பலவும் உள்ளன.

மந்திரா மலை

மந்திரா மலை


இந்து மத புரணாங்களில் குறிப்பிடப்படும் சமுத்ரா மன்தான் என்ற மலைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மந்திரா மலைகள் கருதப்படுகின்றன. கிருஷ்ணர் அழிக்கும் கடவுளாக அவதாரம் எடுக்கும் போது, இருந்த இடங்களாக இந்த மலையில் உள்ள பல்வேறு இடங்கள் நம்பப்படுகின்றன. இந்த மலை பல்வேறு பாறைகளாக பிளவுபடாமல், ஒரே பாறையாக இருப்பது தான் இதன் சிறப்பம்சமாகும். இந்த மலையின் உச்சியில் தான் தங்களுடைய 12-வது தீர்த்தங்கரர் நிர்வாணம் அடைந்தார் என சமணர்கள் கருதுவதால், அவர்களுக்கும் முக்கியமான தலமாக இந்த மலை உள்ளது.

Amcaja

மன்டார் பர்வதம்

மன்டார் பர்வதம்


மன்டார் பர்வதம் என்பது 700 அடி உயரமுள்ள சிறிய மலையாகும். இந்த மலை மன்டார் மலை என்ற பெயரில் பரவலாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்து மற்றும் சமண மதங்களைச் சேர்ந்த 2 கோவில்கள் இந்த மலையில் உள்ளன. இந்து மதத்துடன் மிகவும் தொடர்புபடுத்தி பேசப்படும் இந்த மன்டார் மலையைப் பயன்பத்தி தான் தேவர்கள் அமிர்தத்தை, ஆழ்கடலில் இருந்து கடைந்தெடுத்தனர். இதனருகே குளம் ஒன்றும், அந்த குளத்திற்கு நடுவில் ஒரு சிறிய கோவிலும் உள்ளது.

விக்ரம்ஷீலா சேது

விக்ரம்ஷீலா சேது


கங்கை நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ள விக்ரம்ஷீலா சேது என்ற பாலத்தின் பெயர், பழங்காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக இருந்த விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தின் பெயரிலிருந்தே வைக்கப்பட்டது. கங்கை நதியின் இரு கரைகளிலும் செல்லும் இணையான தேசிய நெடுஞ்சாலைகளான 80 மற்றும் 31-வது நெடுஞ்சாலைகளை இணைக்கும் பாலமாகவும், இந்தியாவிலேயே 3-வது பெரிய பாலமாகவும் விக்ரம்ஷீலா பாலம் உள்ளது.

Www.amit213

ஆஜ்கைய்விநாத் தாம்

ஆஜ்கைய்விநாத் தாம்


பொதுவாகவே கைய்பிநாத் மகாதியோ என்று அழைக்கப்படும் ஆஜ்கைய்விநாத் என்ற சிவபெருமானின் கோவில் பாகல்பூரில் உள்ள மிகவும் முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் இருப்பு மர்மமான விஷயமாக உள்ளது. இது சுயம்பு என்றும் ஓர் தொன்நம்பிக்கை உள்ளது. ஆஜ்கைய்விநாத் ஒரு வரலாற்று சிறப்பு பெற்ற, புனித தலமாகும்.

குரான் ஷா பீர் பாபா தர்ஹா

குரான் ஷா பீர் பாபா தர்ஹா


கட்சேரி சௌக் பகுதியில் உள்ள குரான் ஷா பீர் பாபா தர்ஹாவானது முஸ்லீம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என பல்வேறு பிரிவினராலும் போற்றப்படும் தலமாக உள்ளது. புனிதமான சக்திகள் பலவற்றைக் கொண்டவராக கருதப்படும் பீர் பாபாவின் அருளைப் பெறுவதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் பெருந்திரளான பக்தர்கள் இந்த தர்ஹாவில் கூடுவது வழக்கம்.

Snivas1008

மகரிஷி மேஹி ஆசிரமம்

மகரிஷி மேஹி ஆசிரமம்


மகரிஷி மேஹி ஆசிரமம் கங்கை நதியின் கரையையொட்டி அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான துறவிகள் தியானம் செய்து, ஞானமும் மற்றும் ஒளியும் பெற்றிருந்த புனிதமான, தெய்வீக அமைவிடமாக பாகல்பூரில் குப்பாகாட் உள்ளது. மகரிஷி மேஹியை பின்பற்றுபவர்கள் இங்கே குரு பூர்ணிமா என்ற விழாவை மிகவும் பக்தியுடனும், கடுமையாகவும் செய்து வருகிறார்கள்.

விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம்

விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம்


பழங்கால இந்தியாவில் பாலர்கள் வம்சத்தில் இருந்த முக்கியமான இரு பௌத்த கல்வி மையங்களில் ஒன்றாக விக்ரம்ஷீலா பல்கலைகழகம் இருந்தது. பௌத்த கோட்பாடுகளை பரப்புவதில் நாளந்தா பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடப்பட்டு வரும் சிறந்த கல்வி நிலையமாக விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம் இருந்தது. ஒரு பெரிய சதுர வடிவிலான மடாலயத்தின் மையத்தில் ஒரு ஸ்தூபியும், நூலக கட்டிடமும் மற்றும் பல்வேறு ஸ்தூபிகளும் உள்ள இவ்விடத்தைக் காண்பது அற்புதமான காட்சியாக இருக்கும். இவ்விடத்தில் ஒரு திபெத்திய கோவிலும் மற்றும் இந்து கோவிலும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

Alokprasad

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்