Search
  • Follow NativePlanet
Share
» »லிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்!

லிஸ்ட்டிலேயே இல்லாத இந்தியாவின் அசத்தலான மலைப் பிரதேசங்கள்!

ஊட்டி, கொடைக்கானல், சிம்லா தவிர வேறு சில பகுதிகளிலும் உள்ள சுற்றுலாவிற்கு உகந்த புதுவிதமான மலைப் பிரதேசங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கோடை விடுமுறை அல்லது குறுகிய விடுமுறைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக விரும்புவோர் சுற்றுலாச் செல்ல திட்டமிட்டர்ல அவர்களின் முதல் தேர்வாக இருப்பது மலைப் பிரதேசங்களே. ஆனால், பெரும்பாலான மலைச் சுற்றுலாத் தலங்கள் தற்போது வழக்கமான சுற்றுலாத் தலங்களைப் போலவே மாறிவருகிறது. பலவித அனுபவங்களை தருவதில் முன்னிருந்த முனைப்பு இல்லை. ஊட்டி, கொடைக்கானல், சிம்லா தவிர வேறு சில பகுதிகளிலும் உள்ள சுற்றுலாவிற்கு உகந்த புதுவிதமான மலைப் பிரதேசங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை இப்பகுதிகளுக்கு பயணத்து பாருங்கள். மாறுபட்ட அனுபவத்தை தரும் அழகிய மலைப் பகுதிகள் குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.

ஷிமோகா

ஷிமோகா

ஷிமோகா எனும் பெயருக்கு சிவனின் முகம் என்பது பொருளாகும் (ஷிவ்முகா). இந்நகரம் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து 275 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மலநாடு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த எழில் நகரம் மேற்குத்தொடர்ச்சியின் ஒரு அங்கமாகும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் மாநிலத்தின் மற்ற நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளிடையே வெகு பிரசித்தமாக உள்ளது.

Ajay Tallam

கனாட்டல்

கனாட்டல்

உத்தரகாண்ட்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டம், சம்பா- முஸ்ஸூரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தான் கனாட்டல். இது சிறிய கிராமமாக இருந்தாம், சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு இனிய பொழுதுபோக்குத் தலமாக உள்ளது. பச்சைப் பசேல் என்ற சுற்றுப்புறங்கள், பனி மூடிய மலைகள், ஆறுகள் மற்றும் காடுகள், இந்த இடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

wikipedia

பில்லிங்

பில்லிங்


இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் சிக்கிமில் அமைந்துள்ளது பில்லிங். புதிய ஜல்பய்குரி ரயில் நிலையத்திலிருந்து இந்த இடத்திற்கு நீங்கள் செல்லலாம். மலைப்பகுதியில் பல மடாலயங்கள் உள்ளன. திரும்பிவர விடாமல் கவர்ந்திலுக்கும் தன்மைகொண்ட பில்லிங்கை விட்டு வெளியேற கொஞ்சம் கடிணம் தான்.

Carsten.nebel

ஹாப்லாங்

ஹாப்லாங்

என்றாவது இந்தப் பெயரைக் கேட்டதுண்டா ?. அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைப் பகுதி தான் இந்த ஹாப்லாங். காட்டுயிர் வாழ்க்கைக்கு சிறந்த இடமாக உள்ளது. இங்கு செல்வதற்கு சற்று சிரமமாக இருந்தாலும், காடுகளின் நடுவே இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றால் சிறப்பானதாக இருக்கும். ஹாப்லாங் ஏரி, பழங்குடி மக்களின் கலாச்சாரம் இப்பகுதியை மேலும் மேன்மையடையச் செய்கிறது.

சௌகோரி

சௌகோரி

கண்ணைக்கவரும் இயற்கைக்காட்சிகள் மற்றும் பசுமையான பைன் மரங்கள் மற்றும் ஓக் மரங்கள் அடர்ந்த ஊசியிலைக்காடுகள் ஆகியவற்றை இந்த சிறு கிராமம் கொண்டுள்ளது. இவை தவிர கவர்ச்சியான சோள வயல்கள் மற்றும் பழத்தோப்புகள் போன்றவற்றையும் இந்த எழில் கிராமத்தில் பார்த்து ரசிக்கலாம். கத்கோடம் எனும் ரயில் நிலையமும் சௌகோரிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் பேருந்துகள் மூலம் சௌகோரிக்கு வரலாம். கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் துவக்கம் ஆகியவை சௌகோரிக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவங்களாக விளங்குகின்றன.

Shubhachemu

தீர்த்தன் வேலி

தீர்த்தன் வேலி


தீர்த்தன் வேலி எனப்படும் இந்த பள்ளத்தாக்கு ஷோஜா நகரத்திற்கு அருகில் உள்ளது. கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் காட்டுயிர் சரணாலயத்திற்காக இப்பள்ளத்தாக்குப் பகுதி பிரசித்தி பெற்றுள்ளது. பல்லுயிர்ச்சூழல் நிலவும் இயற்கைப் பகுதியாக உள்ள இங்கே சுற்றுப்புற மாசிலிருந்து தப்பிக்க விரும்புவோர் தாராளமாக சென்று வரலாம். இப்பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழலாம்.

Bleezebub

சோப்தா

சோப்தா

சோப்தாவின் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், சுற்றுலாப் பயணிகளை, முக்கியமாக இயற்கைக் காதலர்களை, கவர்ந்திழுக்கக் கூடியனவாக உள்ளன. மேலும், இது பஞ்ச் கேதார்க்கு செல்லும் மலையேற்றப் பயணிகளின் அடிவார முகாமாகவும் உபயோகிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள், வான் வழி, இரயில் வழி அல்லது சாலை வழி போக்குவரத்து சேவைகளின் மூலம் சோப்தாவை அடையலாம். இம்மலை வாசஸ்தலத்திலிருந்து சுமார் 226 கிலோ மீட்டர் தொலைவில் டெஹ்ராடன்னில் அமைந்துள்ள ஜாலி க்ராண்ட் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.

Vvnataraj

கௌஸனி

கௌஸனி


உத்திரகாண்டில் கௌஸனிலிருந்து, 12 கிலோ மீட்டர் தொலைவில், கௌஸனி- அல்மோரா சாலையில், ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி, மற்றும் குகைகள் அமைந்துள்ளன. புராணங்களில் இவ்விடம், சிவன் மற்றும் விஷ்ணு உடன் தொடர்புடையதாக இருந்தது. ஸொமேஸ்வர் சிவன் கோவில், இந்த நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.

Sujayadhar

தவாங்

தவாங்

நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் அற்புத தோற்றங்களைக் கொண்ட மலைத் தொடர்களின் ஒன்று தவாங். தீவிர இயற்கை ரசிகர்கள் யோசிக்காமல் தங்களது அடுத்த பயணத்திற்கு இந்த தவாங் மலை வாசஸ்தலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரு சொர்க்கலோகம் போன்று இந்த தவாங் அருணாசலப் பிரதேசத்தில் மேற்கு எல்லையில் மலையுச்சியில் வீற்றிருக்கிறது.

Sushanthunt

ஏற்காடு

ஏற்காடு


பரந்த அமைதியான பள்ளதாக்குகளும் அழகிய இயற்கை காட்சிகளையும் உடைய மலைப் பகுதி ஏற்காடு. சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கான இடங்கள் பல உள்ளன. குகைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது பள்ளதாக்குகளின் ஒய்யாரமான அழகு என்று மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைப்பதாக ஏற்காடானது அமைந்துள்ளது.

Riju K

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+