Search
  • Follow NativePlanet
Share
» »ராஜஸ்தானில் உள்ள இந்த பிரமாண்டமான ஹோட்டல்களில் தங்கி ராஜ மரியாதையில் திளைத்திடுங்கள்!

ராஜஸ்தானில் உள்ள இந்த பிரமாண்டமான ஹோட்டல்களில் தங்கி ராஜ மரியாதையில் திளைத்திடுங்கள்!

ராஜஸ்தான் என்றாலே நம் நினைவுக்கு வருவது வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகளும் அரண்மனைகளும் தான்! ராஜஸ்தான் அதன் வரலாறு நிறைந்த கடந்த காலம், வளமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான பாரம்பரியத்திற்காக புகழ் பெற்ற ஒரு மாநிலம் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயமே!

ராஜஸ்தானில் உள்ள சிறந்த, அழகான மற்றும் பிரமாண்டமான அரண்மனைகள் இன்றளவும் வரலாற்று சான்றாக கமபீரமாக நிற்கின்றன. இந்தியாவில் வணிகமயமாக்கல் தொடங்கியபோது, நாடு முழுவதும் உள்ள பல அரச கோட்டைகள், ஹவேலிகள் மற்றும் விடுமுறை இல்லங்கள் ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளாக மாற்றப்பட்டன.

வளர்ச்சி மற்றும் ஆடம்பரத்தின் திசையில் காலம் நகர்ந்ததால், இந்த தங்குமிட விருப்பங்கள் பிரபலமடைந்து, படிப்படியாக ஆடம்பர மற்றும் வரலாற்றைத் தேடுபவர்களுக்கு சில சிறந்த விருப்பங்களாக மாறிவிட்டன.

ராஜஸ்தானில் உள்ள டாப் 5 சிறந்த அரண்மனை ஹோட்டல்களை தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவற்றில் தங்குவது மூலமாக சுற்றுலாப் பயணிகள் அரச குடும்பத்தின் வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும்.

உமைத் பவன் பேலஸ், ஜோத்பூர்

உமைத் பவன் பேலஸ், ஜோத்பூர்

1928 மற்றும் 1943 க்கு இடையில் மகாராஜா உமைத் சிங் ஆட்சியின் கீழ் ஜோத்பூரில் கட்டப்பட்ட இந்த மாபெரும் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த அரண்மனையை முதல் முறை பார்க்கும் போதே இதன் அழகில் நாம் நம்மை மறந்து விடுவோம்.

இந்த பிரமாண்டமான கட்டிடத்தின் ஒரு பகுதி பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்பட்டு 1972 ஆம் ஆண்டு முதல் தாஜ் ஹோட்டல் குழுமத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

ஆடம்பரத்தை நாடும் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அனைத்து சேவைகளையும் வழங்கும் இந்த ஹோட்டலின் அறைகள் ஹிஸ்டாரிகல் சூட்ஸ், ராயல் சூட்ஸ், கிராண்ட் ராயல் சூட்ஸ், மஹாராஜா சூட் மற்றும் மகாராணி சூட் என 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மரத்தாலான நூலகம், தனியார் அருங்காட்சியகம், உட்புற நீச்சல் குளம், பில்லியர்ட்ஸ் அறை, டென்னிஸ் மைதானங்கள் மற்றும் தனித்துவமான மார்பிள் ஸ்குவாஷ் மைதானங்கள் இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

உலகின் அனைத்து வகையான முன்னணி உணவு வகைகளும் நீங்கள் இங்கு ருசிக்கலாம். பாரம்பரிய நடைகள், நகர சுற்றுப்பயணம், உட்புற மற்றும் வெளிப்புற பொழுதுபோக்கு வசதிகள் அனைத்தும் ரூம் வாடகையுடனே சேர்க்கப்படுகிறது. 70,000 ரூபாயில் தொடங்கும் ரூம் வாடகை 10 லட்சம் வரை வசதிக்கேற்ப நீண்டுக்கொண்டே போகிறது.

ராம்பாக் பேலஸ், ஜெய்ப்பூர்

ராம்பாக் பேலஸ், ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர் மகாராஜாவின் வசிப்பிடமான ராம்பாக் அரண்மனை இப்போது தாஜ் குழுமத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது. இங்கு வரும் விருந்தினர்கள் மாபெரும் ராஜ மரியாதை மற்றும் நடனத்துடன் வரவேற்கப்படுகிறார்கள்.

விருந்தினர்களை அதன் உயர்தர அலங்காரம், கட்டிடக்கலை மற்றும் விருந்தோம்பலை பார்த்தே சற்று மயங்கிபோவது உறுதி. 79 அறைகள் கொண்ட இந்த அரண்மனையில் அரண்மனை அறைகள், வரலாற்று அறைகள், ராயல் சூட்ஸ், கிராண்ட் ராயல் சூட்ஸ் மற்றும் கிராண்ட் பிரசிடென்சியல் சூட்ஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அறையும் கம்பீரமான தோற்றத்துடனும் நவீன வசதிகளுடனும் அலங்கரிக்கபட்டுள்ளது. உயர்தர மற்றும் உலகத்தர உணவு வகைகளை சுவைப்பதோடு மினி கோல்ஃப் மைதானம், வெளிப்புற நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் ஸ்பா ஆகியவற்றில் நீங்கள் பொழுது போக்கலாம். 40,000 ஆயிரத்தில் தொடங்கும் ரூம் வாடகை 4,00,000 வரை செல்கிறது.

தாஜ் லேக் பேலஸ், உதய்பூர்

தாஜ் லேக் பேலஸ், உதய்பூர்

உதய்பூர் அரண்மனை ஹோட்டல் என்றும் அழைக்கப்படும் தாஜ் லேக் பேலஸ் பிச்சோலா ஏரிக்கு நடுவே ரம்மியமாக அமைந்துள்ளது. இதன் விசித்திர அழகிற்காகவே பல பிரபலங்களும் பெரும்புள்ளிகளும் இங்கு திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

விருந்தினர்களை ரோஜா இதழ் மழையுடன் வரவேற்பதில் இருந்து அரச ஊஞ்சலில் அவர்களுக்கு வசதியான தனிப்பட்ட நேரத்தை வழங்குவது வரை, விருந்தினர்களை மறக்க முடியாத படகு சவாரிக்கு அனுப்புவது முதல் சுவையான உணவு வகுப்புகள் மற்றும் ஓய்வெடுக்கும் ஸ்பாக்கள் முதல் ஆத்மார்த்தமான இசை நிகழ்வுகள் வரை அனைத்தும் தாஜ் லேக் பேலஸில் உள்ளது.

நுண்கலை அலங்காரம் மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ள 66 அறைகள் இங்கு உள்ளன. அவை யாவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 38,000 ரூபாயில் தொடங்கம் ரூம் வாடகை அதன் வசதிற்கு ஏற்றார்போல் 5,00,000 வரை செல்கிறது.

சுஜான் ராஜ்மஹால் பேலஸ், ஜெய்ப்பூர்

சுஜான் ராஜ்மஹால் பேலஸ், ஜெய்ப்பூர்

ராஜ்மஹால் அரண்மனை ராஜஸ்தானில் உள்ள சிறந்த பாரம்பரிய ஹோட்டல்களில் ஒன்றாகும். ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் பிசல்பூர் அணைக்கு அருகில் இந்த பாரம்பரிய ஹோட்டல் அமைந்துள்ளது.

350 வருட வரலாற்றைக் கொண்ட இந்த ஹோட்டல் பாரம்பரிம் மற்றும் நவீன காலத்தின் கலவையுடன் மலர்ந்து பார்வையாளர்களை வரவேற்கிறது. அற்புதமான பாரம்பரிய ராஜஸ்தானி பாணியில் அனைத்து நவீன வசதிகளும் இந்த ஹோட்டலில் அடங்கியுள்ளது.

ராஜபுத்திர விருந்தோம்பளோடு பார்வையாளர்கள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை இங்கு பெறுகின்றனர். 30,000 ரூபாயில் தொடங்கும் ரூம் வாடகை 2,00,000 ரூபாய் வரை நீள்கிறது.

ஓபராய் உதய்விலாஸ், உதய்பூர்

ஓபராய் உதய்விலாஸ், உதய்பூர்

87 அறைகள் கொண்ட இந்த பாரம்பரிய ஹோட்டல் பிச்சோலா ஏரியின் கரையில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் ஒவ்வொரு அங்குலமும் ரம்ப்ளிங் முற்றங்கள், பசுமையான தோட்டங்கள், செயற்கை அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகள், பாரம்பரிய மேவார் கட்டிடக்கலை, சுவர் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஏரியின் பிரமாண்டமான காட்சிகள், கட்டிடக்கலை, நவீன வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் ஆகியவை இந்த அரண்மனை ஹோட்டலுக்கு அழகு சேர்க்கின்றன. 30,000 ரூபாயில் தொடங்கும் ரூம் வாடகை அதன் வசதிகளுக்கு ஏற்றார்போல் 1,00,000 லட்சம் வரை செல்கிறது.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+