Search
  • Follow NativePlanet
Share
» »இன்று இந்த சிவ பெருமானை வழிபட்டால் என்ன கிடைக்கும் தெரியுமா?

இன்று இந்த சிவ பெருமானை வழிபட்டால் என்ன கிடைக்கும் தெரியுமா?

ஒரே ஒரு சனி பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் என்ன கிடைக்கும் தெரியுமா?

By IamUD

ஒரே ஒரு சனி பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா. இந்த நாளில் சிவ பிரதோஷம் மட்டும் இல்லாமல், மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை. வாருங்கள் எந்தெந்த கோவில்களில் சிறப்பு என்பதைப் பற்றி பார்க்கலாம்.

திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில்

திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில்

திருமழபாடி வைத்தியநாதர் கோயில் அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த இத்தலத்தில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமணம் நடக்குமாம்.

பா.ஜம்புலிங்கம்

கீழப்பழுவூர் அருள்மிகு ஆலந்துறையார்

கீழப்பழுவூர் அருள்மிகு ஆலந்துறையார்

திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 55வது தலம் ஆகும். இந்த கோவிலில் விநாயகர், சோமஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

பா.ஜம்புலிங்கம்

பெரியமறை வேதபுரீஸ்வரர்

பெரியமறை வேதபுரீஸ்வரர்

பெரியமறை வேதபுரீஸ்வரர் கோயில் அரியலூர் மாவட்டம், பெரியமறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

காமரசவல்லி கார்கோடேஸ்வரர்

காமரசவல்லி கார்கோடேஸ்வரர்


தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள திருநல்லூரில் கார்கோடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு குழந்தை வரம் அளிக்கும் தளமாக உள்ளது. பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைக்கும் கோவில் இதுவாகும்.

திருமானூர் கைலாசநாதர்

திருமானூர் கைலாசநாதர்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் மிகச் சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலாகும். இங்கு பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படும். பிரதோஷ நாளில் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+