Search
  • Follow NativePlanet
Share
» »கல்லூரி நண்பர்களுடன் பயணம் செல்ல மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்கள்

கல்லூரி நண்பர்களுடன் பயணம் செல்ல மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்கள்

கால இயந்திரம் ஒன்று இருந்தால் திரும்பவும் கல்லூரி நாட்களான அந்த மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு திரும்பி செல்லவே நம் எல்லோரது மனமும் விரும்பும். கலர் கலராக கனவுகள், இதயத்தை துளைத்த அந்த காதல், துன்பத்திலும் தோள்கொடுத்து நின்ற நட்பின் திடம், சிறகடித்து பறந்த அந்த நாட்கள் என்றும் நினைவில் நீங்காதவை. கல்லூரி நாட்களில் கிடைத்த நட்புகள் சாகா வரம் பெற்றவை.

வாழ்கையில் என்றைக்கும் உடன் வரும் நம் கல்லூரி கால நண்பர்களுடன் பயணம் செய்வதற்கு இணையான இனிமையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது. வாருங்கள் கல்லூரி நண்பர்களுடன் நிச்சயம் செல்ல வேண்டிய அற்புதமான சுற்றுலாத்தலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தளத்தில் ஹோட்டல் முன்பதிவு செய்து 50% கட்டண தள்ளுபடி பெற்றிடுங்கள்

கோவா :

கோவா :

கல்லூரி நண்பர்களுடன் செல்ல இதைவிட பொருத்தமான இடம் இருக்கவே முடியாது. அட்டகாசமான பீச்சுகள், அங்கே உலா வரும் பிகினி உடை பெண்கள், நடு இரவு பார்டிகள் என கொண்டாட்டங்களின் உச்சம் கோவா தான். கல்லூரி நாட்களில் நம்மில் பலரும் ஒரு முறையாவது கோவா சென்றிருந்தாலும் திருமணமாகி வாழ்கையில் செட்டில் ஆனா பிறகு நண்பர்களுடன் கோவா வருவது கல்லூரி நாட்களில் வந்ததை விடவும் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். கோவாவில் இருக்கும் சில கடற்கரைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கோவா :

கோவா :

அஞ்சுனா பீச்:

அட்டகாசமாக பீச் பார்ட்டியில் கலந்துகொண்டு அசத்த நினைப்பவர்கள் வர வேண்டிய இடம் அஞ்சுனா பீச். அதிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட பார்டிகள் களைகட்டும். பவுர்ணமி அன்று நடைபெறும் முழு இரவு பார்டிகள் இந்த இடத்தின் தனித்துவம். இங்கிருக்கும் பப்களில் அதிரச்செய்யும் 'டிரான்ஸ்' இசை பார்டிகளின் போது நம்மை நடனமாட தூண்டும்.

கோவா :

கோவா :

பல்லோலம் பீச்:

கோவாவில் இன்னும் அதிகம் மாசு படாத அழகான கடற்கரைகளில் ஒன்று பல்லோலம் பீச். இது பிறை நிலா வடிவில் அமைந்திருக்கிறது. இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு என்றே தாய்லாந்தில் இருப்பது போல் மரத்தால் செய்யப்படும் தற்காலிக குடியிருப்புகள் இருக்கின்றன. அதிகமாக பார்ட்டி நடக்கும் இடமாக இல்லாவிட்டாலும் சீசன் காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிகிறது. இதற்க்கு வெறும் 1கி.மீ தூரத்திலேயே பட்நேம் பீச், கொலம் பீச் இருப்பதால் காலாற அங்கு வரை நடந்தது சென்று வரலாம்.

கோவா :

கோவா :

கொல்வா பீச்:

இந்திய சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையான இது குறைவான செலவில் கடற்கரையை அனுபவிக்க நினைப்பவர்களின் ஆசையை நிறைவேற்றும் இடமாகும். இங்கு கிடைக்கும் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. சிறிய அளவிலான உணவகங்கள், பார்கள் இங்கு நிறைய உள்ளன. மற்ற கடற்கரைகளை போல இங்கு பெரிய அளவில் இரவு பார்டிகள் நடக்காது என்பது ஒரு குறை. இவை தவிர வகடோர் பீச், கேண்டோலிம் பீச் போன்றவையும் கோவாவில் பார்டி கொண்டாட சிறந்த இடங்கள் ஆகும் .

லட்சத்தீவுகள் :

லட்சத்தீவுகள் :

இதுவரை நீங்கள் இங்கு செல்லாமல் இருந்திருந்தால் இப்போதே திட்டமிட ஆரம்பியுங்கள். இந்தியாவில் இந்த இடத்திற்கு நிகரான இயற்கை அழகு நிறைந்த இடங்கள் எதுவுமே இல்லை என்று சொல்லலாம். 30 குட்டிக்குட்டி தீவுகளால் ஆன இந்த லட்சத்தீவுகளில் வெள்ளை மணல் கடற்கரைகள், நீல நிறக் கடல், நகரத்தின் எந்த அமசங்களும் இல்லாத அழகான வாழ்விடங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு கல்லூரி நண்பர்களுடன் வருவது அற்புதமாக இருக்கும்.

லட்சத்தீவுகள் :

லட்சத்தீவுகள் :

கவரட்டி :

லட்ச்சதீவின் தலைநகரமான இந்த குட்டித்தீவு கேளிக்கை கொண்டாட்டங்களின் மையமாக திகழ்கிறது. வருடம் முழுவதும் இதமான தட்பவெட்பம் நிலவும் கவரட்டி சூரியக்குளியல் போடவும், நீர் விளையாட்டுகளில் ஈடுபடவும் சிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த தீவை சுற்றி வளமான கடல் பகுதியிருப்பதால் கடலுக்கடியில் நீந்தும் ஸ்க்குபா டைவிங் விளையாட்டும் இங்கே மிகப்பிரபலம்.

லட்சத்தீவுகள் :

லட்சத்தீவுகள் :

அகத்தி தீவு:

லட்ச்சதீவுகளின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது இந்த அகத்தி தீவு. கொச்சியில் இருந்து 459 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தீவை அடைந்து பின்னர் இங்கிருந்து தான் லட்சதீவின் மற்ற தீவுகளுக்கு செல்ல முடியும். இந்த தீவில் கிடைக்கும் டியுனா மீன்கள் நீங்கள் வாழ்கையில் சாப்பிட்ட மீன்களிலேயே மிகவும் சுவையான ஒன்றாக இருக்கும்.

லட்சத்தீவுகள் :

லட்சத்தீவுகள் :

இவை தவிர மினிகாய், அமினி, பங்காரம் போன்ற தீவுகளும் லட்ச்சதீவுகளில் இருக்கும் முக்கியமான தீவுகள் ஆகும். லட்சத்தீவுகளுக்கு செல்லும் முன்பு முறையான அனுமதி பெற்றிருப்பது அவசியம். மேலும் இங்கு சில தீவுகளில் மட்டுமே மது அனுமதிக்கப்படுகிறது.

லட்ச்சதீவுகளை எப்படி அடைவது?, எங்கு தங்குவது போன்ற விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

மணாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

நம்முடைய 'நேடிவ் பிளானட்' தளத்தின் பல கட்டுரைகளில் முன்னரே நிறைய முறை குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும் அதை பற்றி மீண்டும் ஒரு முறை பார்க்கலாம். ஹிமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் லெஹ் வரையிலான 475 கி.மீ தூர சாலைப்பயணம் இந்தியாவின் மிகச்சிறந்த சாலைப் பயணமாகும். கல்லூரி நண்பர்களுடன் நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த பயணத்தை மேற்கொள்ளலாம்.

மணாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

வழியெங்கும் இமய மலையின் அற்புதமான இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான பனி இல்லாத நான்கு மாதங்கள் மட்டுமே இந்த சாலை திறந்திருக்கிறது. மணாலியில் இருந்து லஹால், ஸ்பிதி, சன்ச்கர் பள்ளத்தாக்குகள் வழியாக லெஹ்வை அடைகிறது இந்த தேசிய நெடுஞ்சாலை 3.

மணாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் ஒரு கனவுப்பயணம்:

மொத்தம் இரண்டு நாட்கள் எடுக்கும் இந்த பயணத்தின் போது வழியில் ரோஹ்டன் கணவாய், இரவு கேம்ப் அடித்து தங்க சிறந்த இடமான டார்ச்சா, உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சாலை இருக்கும் சிங்சிங், பேரமைதியும் அற்புத அழகும் கொண்ட லெஹ் போன்ற இடங்களை காணலாம்.

லெஹ்வை எப்படி அடைவது பற்றிய விவரங்களும், அங்குள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தனுஷ்கோடி:

தனுஷ்கோடி:

இயற்கையின் சீற்றத்தால் மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட, தடயங்கள் மட்டுமே எஞ்சி இருக்கும் மணல் பூமி தான் ராமேஸ்வரம் தீவில் இருக்கும் தனுஷ்கோடி நகரமாகும். இந்திய பேரு நிலப்பரப்பின் முனையாக இருக்கும் இந்த நகரத்தில் இன்று மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. கைவிடப்பட்ட இந்த நகரத்திற்கு செல்வது நண்பர்களுடன் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

தனுஷ்கோடி:

தனுஷ்கோடி:

வரலாற்று முக்கியத்துவம் ராமேஸ்வரம் நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் தனுஸ்கோடி அமைந்திருக்கிறது. இந்திய நிலப்பரப்பின் ஒரு முனையாக இருக்கும் இந்த இடத்தில் அற்புதமான இயற்கை காட்சிகளையும் ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசையையும் நாம் கேட்கலாம்.

காசிரங்கா தேசிய பூங்கா :

காசிரங்கா தேசிய பூங்கா :

அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா தேசிய பூங்காவில் இந்தியாவில் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒற்றைகொம்பு காண்டாமிருகங்கள் வாழ்கின்றன. உலகத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்கே வாழ்கின்றனவாம். அது தவிர நீர் யானைகள், இந்திய காட்டு யானைகள் மற்றும் வங்கப்புலிகள் இங்கே வாழ்கின்றன. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவராக இருந்தால் நண்பர்களுடன் செல்ல அற்புதமான இடம் இந்த காசிரங்கா தேசிய பூங்கா உங்களின் சொர்க்கமாகும்.

Photo: Sankara Subramanian

சாதர்- உரைந்த நதியில் ஒரு நடை:

சாதர்- உரைந்த நதியில் ஒரு நடை:

சன்ச்கர் என்னும் கிராமத்தையும் வெளி உலகத்தையும் குளிர்காலத்தில் மட்டும் இணைக்கிறது சாதர் ஆறில் உருவாகும் உரைந்த வழித்தடம். இதில் ட்ரெக்கிங் செல்வது சாகசங்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது. உங்கள் நண்பர்கள் உடனிருக்கியில் இந்த ரிஸ்க் எடுத்துதான் பாருங்களேன்.

ரிஷிகேஷ்:

ரிஷிகேஷ்:

அதிகமாக யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடமாகவே அறியப்படும் ரிஷிகேஷ் சாகச பிரியர்களுக்கும் தகுந்த இடமே. இங்கு சீறிப்பாயும் கங்கையாற்றில் சாகசப்படகு சவாரி செய்யலாம் அல்லது இந்தியாவில் வேறெங்கும் இல்லாத கயிற்றில் தொங்கியபடி ஆற்றைக்கடக்கும் அதிபயங்கரமான சாகசத்தை நிகழ்த்தலாம்.

Read more about: goa leh lakshadweep danushkodi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X