» »உங்களை வேறு உலகத்துக்குள் கொண்டு செல்லும் அதிசயமான இடங்கள் இவை!

உங்களை வேறு உலகத்துக்குள் கொண்டு செல்லும் அதிசயமான இடங்கள் இவை!

Written By: Udhaya

இந்த இடங்கள் உங்களை வேற்று உலகத்துக்குள் இழுத்துச் சென்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தன்மை கொண்டதாகும். இளைஞர்களுக்கு ஏற்ற சாகசங்களும், பெரியவர்களுக்கு ஏற்றவாறு அமைதியும் இரண்டற கலந்து காணப்படும் இந்த இடத்துக்கு, நீங்கள் உங்கள் துணையுடனோ, குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ சென்று வரலாம். தம்பதிகளுக்கு இந்த பகுதிக்கு செல்வது புதுவித ஹனிமூன் கொண்டாடிய உணர்வை ஏற்படுத்தும்.

அந்தமான் நிகோபார்

அந்தமான் நிகோபார்


அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நிலப்பகுதியை விட்டு விலகி தென்கோடியில் வங்காளவிரிகுடாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய இந்திய யூனியன் (தீவு) பிரதேசமாகும். சுமார் 8000 ச.கி.மீ க்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த தீவுகளில் மனித சுரண்டலுக்கு உட்படாத இயற்கை வளம் நிரம்பி வழிகிறது.

PC: Venkatesh K

ராஜஸ்தான் பாலைவனம்

ராஜஸ்தான் பாலைவனம்

இந்தியாவின் வடமேற்கில் வியக்கத்தக்க பேரழகுடன் இயற்கையின் இணையில்லா படைப்பாய் காட்சியளித்துக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை தாகம் கொண்ட பயணிகள் கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது.

PC: Flicka

லடாக் பனி

லடாக் பனி

இண்டஸ் நதிக்கரையில் அமைந்துள்ள லடாக், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம். இது "தி லாஸ்ட் ஷங்ரி லா/கடைசி ஷங்ரி லா", "குட்டி திபெத்", "நிலவு பூமி", "உடைந்த நிலவு" என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

PC: Deeptrivia

ஆலப்புழா

ஆலப்புழா


ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற உணர்வு நம் மனதின் நிச்சயம் தோன்றாமல் இருக்காது.

PC: Manojk

ரான் ஆப் குட்ச், குஜராத்

ரான் ஆப் குட்ச், குஜராத்

அஹமதாபாத் நகரத்தின் பழைய கோட்டைச்சுவர் சிதிலங்கள் மற்றும் கோட்டை வாசல்கள் பார்வையாளர்களை வேறொரு காலகட்டத்திற்கு இழுத்துச்செல்லும் மாய சக்தியுடன் காட்சியளிக்கின்றன.

PC: Superfast1111

மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள்

மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள்

1600 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர் குஜராத்திலிருந்து துவங்கி மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக நீண்டுள்ள இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. பல ஆறுகளுக்கு இந்த மலைத்தொடர் நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.

PC: Karunakar Rayker

பாராகிளைடிங், இமாச்சலப் பிரதேசம்

பாராகிளைடிங், இமாச்சலப் பிரதேசம்

மணாலி சுற்றுலாத்தலத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றான பாராகிளைடிங் பயணிகளை இங்கு ஈர்க்கும் அம்சமாகவும் திகழ்கிறது. மணாலியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சோலங் பள்ளத்தாக்கு பகுதி பாராகிளைடிங் பறப்புக்கு ஏற்றதாக உள்ளது.

PC: Extremehimalayan

மேகாலயா குகைகள்

மேகாலயா குகைகள்

உங்களை அப்படியே வேறு உலகத்துக்குள் கூட்டிச்செல்லும் இந்த குகைகள். இவை உங்களை வெளியுலகத்திலிருந்து தனித்து இயங்கச்செய்யும் இடங்களில் மிகச் சிறப்பானது.

PC: iospeleologis

சிக்கிம்மில் ஒரு மலையேற்றம்

சிக்கிம்மில் ஒரு மலையேற்றம்

சிக்கிம்மில் ஒரு மலையேற்றம்

PC: $udeep Bajpai

அந்தமானில் ஒரு ஸ்கூபா டைவிங்

அந்தமானில் ஒரு ஸ்கூபா டைவிங்

PC: Artinge

Read more about: travel, places
Please Wait while comments are loading...