» »கல்வியில் ஏற்றம் பெற நீங்கள் செல்லவேண்டிய கோயில்!!

கல்வியில் ஏற்றம் பெற நீங்கள் செல்லவேண்டிய கோயில்!!

Posted By: Udhaya

காசிக்கு சமமாக ஆறு தலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் ஒன்றுதான் திருவெண்காடு. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.

51 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த தலம், ஆதி சிதம்பரம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த தலத்தைப் பற்றி முழுமையாக காண்போம்.

 திருவெண்காடு

திருவெண்காடு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த திருவெண்காடு. சமய இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்ட இடமாக கருதப்படும் இவ்விடத்தில், சுவேதாரண்யேசுவரர், பிரமவித்யாம்பிகை தேவியுடன் காட்சி தருகிறார்.

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

நகப்பட்டினத்திலிருந்து 58 கிமீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து 38 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த இடம், மயிலாடுதுறையிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

 சுற்றுலா வழிகாட்டி

சுற்றுலா வழிகாட்டி

சென்னையிலிருந்து வருபவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவும், செங்கல்பட்டு வழியாகவும் வரலாம்.

பாதை 1

பாதை 1

பெருங்களத்தூர், செங்கல்பட்டு வழியைத் தேர்ந்தெடுத்தால் மேல்மருவத்தூர், திண்டிவனம் வழியாக புதுச்சேரியை அடைந்து அங்கிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி வழி திருவெண்காட்டை அடையலாம்

பாதை 2

பாதை 2

கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்தால் அது சென்னை - திருச்சி சாலையை பாண்டிச்சேரியில் சந்திக்கும். பின் அங்கிருந்து மேற்குறிப்பிட்ட வழிகளில் திருவெண்காட்டை அடையலாம்.

 பாதை 3

பாதை 3


இவை இல்லாமல் திண்டிவனத்திலிருந்து, விக்கிரவாண்டி, பண்ருட்டி, வடலூர், சிதம்பரம் வழியாக திருவெண்காட்டை அடையலாம்.

அருகிலுள்ள சுற்றுலா பிரதேசங்கள்

அருகிலுள்ள சுற்றுலா பிரதேசங்கள்

இதன் அருகிலேயே திட்டை, வைத்தீஸ்வரன் கோயில், திருமுல்லை வாசல் முதலிய சுற்றுலாத் தளங்கள் உள்ளன.

wikipedia

சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

சுவேதாரண்யேஸ்வரர் கோயில்


இந்த கோயில் சுமார் 1000 - 2000 ஆண்டுகள் வரை பழமையான கோயிலாகும்.

புராணகாலத்தில் இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

நவக்கிரகத் தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.

 நடை திறந்திருக்கும் நேரம்

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணிக்கு திறக்கும் நடை மதியம் 12 வரையிலும், பின்னர் மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட்டு இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 பலன்கள்

பலன்கள்

இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கல்வி சம்பந்தப்பட்ட சிக்கல்களை நீங்கி விரைவில் வாழ்வில் நல்ல முன்னேற்றமும், உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அதிக பலன்களும் கிடைக்கும்.

Read more about: travel, temple