Search
  • Follow NativePlanet
Share
» »மகாபாரதப் போர் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையிலா? அதிர்ச்சி தகவல்கள்!

மகாபாரதப் போர் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையிலா? அதிர்ச்சி தகவல்கள்!

தாமிரபரணி... திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிக பகுதியில் ஓடோடி வரும் ஆறு. அழகியலின் ஒட்டுமொத்த உருவான தாமிரபரணி ஆறு பல இடங்களில் இயற்கையாகவே பல சுற்றுலாத் தளங்களை உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட சுற்

By Udhaya

vதாமிரபரணி... திருநெல்வேலி மாவட்டத்தின் எழில் மிக பகுதியில் ஓடோடி வரும் ஆறு. அழகியலின் ஒட்டுமொத்த உருவான தாமிரபரணி ஆறு பல இடங்களில் இயற்கையாகவே பல சுற்றுலாத் தளங்களை உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட சுற்றுலாத் தளங்கள் முன் காலத்தில் மகாபாரதப் போர் நடைபெற்ற இடங்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா. ஆம் அப்படியும் ஒரு தகவல் உலாவுகிறது. மகாபாரதப்போர் தமிழ்நாட்டில் தாமிரபரணி நதிக்கரையில் நடந்ததென்று.. வாருங்கள் மகாபாரதப் போர் நடந்த இடங்கள் இப்போது எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

காந்தாரியம்மன்

காந்தாரியம்மன்


நம்மில் சிலருக்கு மகாபாரதக் கதை பற்றி தெரிந்திருக்ககூடும். அதில் வரும் கௌரவர்களின் தாய்தான் இந்த காந்தாரி. அவருக்கு திருநெல்வேலி பகுதியில் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. அதிலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதியில் காந்தாரி அம்மன் கோயில்கள் என்று நிறைய காணமுடியும். பாண்டி மக்கள் உழவுத்தொழில் செய்ய கற்றுக்கொண்டு, காடுகளை குறைத்து விவசாயத்தை ஆரம்பிக்க அதனால் குறிஞ்சி மக்களுக்கும், விவசாயம் செய்யும் பாண்டி நாட்டு மக்களுக்கும் சண்டை என அந்த தகவல் கூறுகிறது. இப்போதும் கூட கேரள மக்களில் சிலர் தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதி மக்களை பாண்டி என்றே அழைக்கின்றனர். இதனால் எழுந்த பிரச்சனையில் குறிஞ்சி நில மக்களுக்கும், மருத நில மக்களுக்கும் இடையில் பிரச்சனை ஆரம்பிக்க அதை தீர்த்து வைக்க முயற்சித்தவர்கள் முல்லை நில மக்கள்.

குறிஞ்சி நிலத்துக்கும் மருத நிலத்துக்கும் இடையில் முல்லை நிலம் இருப்பதை நாம் நன்றாக உணரமுடியும். பாருங்கள் திருநெல்வேலி மாவட்டம் மட்டும்தான் இந்தியாவிலேயே ஐவகை திணைகளையும் ஒருங்கே அமையப் பெற்ற இடம்.

Dushipillai

ஐவகை திணைகள்

ஐவகை திணைகள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களில் மலைவாழ் குறிஞ்சி மக்களுக்கும், விவசாய மருத நில மக்களுக்கும் இடையில் முல்லை நில மக்கள் இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் குறிஞ்சி நிலங்கள். அடுத்ததாக அம்பாசமுத்திரம், களக்காடு, தென்காசி அருகாமை பகுதிகள் எல்லாம் காடுகள்,. அதாவது முல்லை நிலங்கள். அடுத்ததாக மருத நிலங்கள் ஆலங்குளம், திருநெல்வேலி, மருதகுளம், செங்குளம், கூந்தங்குளம் என அழைக்கப்படும் ஊர்களாகும். அடுத்ததாக கடற்கரைப்பகுதிகளான உவரி, இடிந்தகரை சுற்றியுள்ள பகுதிகள் நெய்தல் நிலங்களாகும். இவை எதுவுமே இல்லாத பகுதிகள் பாலை என்று அழைக்கப்படும். விஜயநாராயணண், நாங்குனேரி தாண்டிய பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தின் பாலை நிலங்களாகும்.

 ஊர்களின் பெயர்களை கவனியுங்கள்

ஊர்களின் பெயர்களை கவனியுங்கள்

மலைக்காடுகளில் உள்ள ஊர்களை கவனித்தால் அவை பெரும்பாலும் மலை என்றே முடியும். ஆனைமலை, தீர்த்தமலை, தேன்மலை முதலியன. அடுத்து முல்லை நில ஊர்கள் காடு, சோலை என முடியும். களக்காடு, மாஞ்சோலை. அடுத்து மருத நில ஊர்கள் ஏரி, குளம்,ஆறு என முடியும். செட்டிக்குளம், கன்னங்குளம், நாங்குனேரி,அம்பாசமுத்திரம். அடுத்ததாக நெய்தல் நிலங்கள் பெரும்பாலும் உருமாறிப் போகி ஆங்கில பெயர்கள் சூட்டப்பட்டது போன்ற பொலிவைத் தரும். அது ஆங்கிலேயர்கள் வருகைக்கு பின் உருமாறியிருக்கக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பிடத் தகுந்த சுற்றுலாத் தளங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பிடத் தகுந்த சுற்றுலாத் தளங்கள்

பாபநாசம் அணை, மணிமுத்தாறு, பாபநாசர் கோயில், காரையாறு அணை, அகத்தியர் அருவி, கீழ்த்திருவேங்கடநாத கோயில், கப்பல்மாதா கோயில், வரதராஜர் கோயில், அழகியமன்னர் கோயில், கழுகுமலை, பாம்புபண்ணை என எக்கச்சக்க இடங்கள் அருகாமையில் சுற்றிப் பார்க்க ஏதுவாக அமைந்துள்ளன.
Jaseem Hamza

பாபநாசம் பாபனாசர் கோயில்

பாபநாசம் பாபனாசர் கோயில்

பாபநாசம் பாபனாசர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கியம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பாபநாசம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலக்கடவுள் சிவபெருமான்.

இக்கோயிலில் புனித நீராடினால் நம் மேல் படிந்துள்ள பாவங்கள் கரைந்தோடும் என்ற நம்பிக்கையினாலேயே இக்கோயில் பாபநாசம் என்ற பெயர் பெற்றது.

திருமண வைபவங்கள் போன்ற சடங்குகளை இக்கோயிலில் நடத்துவது மிக மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த கிராமத்தில் நடைபெறும் அதிகப்படியான திருமணங்கள் இக்கோயிலிலே நடத்தப்படுகின்றன.
Bastintonyroy

அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவி பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம். இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும். இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.

wiki

காரையார் அணை

காரையார் அணை

முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணை அந்த காப்பகத்தின் ஒரு பகுதியே. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இங்கு படகு சவாரியும் உண்டு.

அரை மணி நேர படகு சவாரி பின்னடை நீரில் பெரிய நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் நம்மை அழைத்துச் செல்லும். இந்த நீர் வீழ்ச்சியை வானத்தீர்த்தம் என்றழைப்பர்.

இந்த அருவியின் நீரில் மருத்துவ குணநலன்களைக் கொண்ட கனிமங்கள் பலவும் கலந்திருப்பதால் இதுவும் சுற்றலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்கும். இந்த நீர்த் தேக்கத்தில் பல முதலைகளும் உள்ளன.

Sukumaran sundar

 மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணை


மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது. மேலும் இங்கே மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். மணிமுத்தாறு அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில் தான் உள்ளது. இதுவும் அணையின் அழகிற்கு சிறிதும் சளைத்தது அல்ல.

Rahuljeswin

கழுகு மலை

கழுகு மலை


கழுகு மலை கோவில்பட்டியில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். மூன்று முக்கிய கோவில்களுக்கு இந்த நகரமானது பெயர் பெற்றது.

அவையாவன ஜைன உறைவிடம், வேட்டுவன் கோவில் மற்றும் கழுகுசாலமூர்த்தி கோவில். ஜைன உறைவிடம் அதன் கட்டட கலைக்கு பேர் போனது மற்றும் இது ஜெயின் சமூகத்தவரின் ஒரு குகை கோவிலாகும்.

இது அமைந்துள்ள இந்த மலையின் தெய்வம் ஆரைமலை ஆழ்வார் என்று அறியப்படுகிறது. சரியாக கட்டிமுடிக்கப்படாது கோவில் வேட்டுவன் கோவில். கழுகு சாலமூர்த்தி கோவில் முருககடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நகரத்தில் விநாயகர் மற்றும் ஐய்யனார் கோவில்களும் அமைந்துள்ளன.

Balajijagadesh

செண்பகதேவி நீர்வீழ்ச்சி

செண்பகதேவி நீர்வீழ்ச்சி

செண்பகதேவி நீர்வீழ்ச்சி செண்பக மரங்கள் வழியாக பாய்வதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தேனருவிக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த அருவி 40 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது. பிரதான அருவி வழியாக மலைப்பாதை வழியாக சென்றால் இந்த அருவியை அடையலாம். இந்த அருவிக்கு அருகில் செண்பகதேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஒன்று உள்ளது. இது துர்கா தேவியின் அவதாரம் ஆகும். இதன் காரணமாக இந்த அருவி சமய முக்கியத்துவம் பெறுகிறது.

காசிவிஸ்வ நாதர் கோவில்

காசிவிஸ்வ நாதர் கோவில்


காசிவிஸ்வ நாதர் கோவில் தென் காசியில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் இருந்து 8 கி. மீ தொலைவில் உள்ள இந்த கோவில் கி.பி 1455 ம் ஆண்டு இப்பகுதி ஆட்சியாளரான பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.

புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும் ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்த படியால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியின் படியே இந்த கோவிலை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.


இக்கோயிலின் தலைமை தெய்வம் காசி விஸ்வ நாதர். 178 அடி உயரம் கொண்ட இந்த கோயிலின் கோபுரம் இதன் தனி சிறப்பு. மாசி மக திருவிழா 10 நாட்கள் தொடந்து நடக்கிறது. ஐப்பசி கல்யாண உற்சவம், நவராத்திரி, மார்கழி திருவாதிரை மற்றும் கார்த்திகை ரூத்ர தீபம் முதலிய இங்கு கொண்டாடப்படும் மற்ற முக்கிய திருவிழாக்கள்.

tshrinivasan

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில்

ஸ்ரீ வரதராஜ பெருமாளின் தீவிர பக்தரான கிருஷ்ணவர்மா என்னும் மன்னரால் பல நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் கட்டப்பட்டது. முன்னொரு காலத்தில், மன்னர் கிருஷ்ணவர்மா அண்டைநாட்டு மன்னரால் தாக்கப்பட்டபோது, வீரராகவன் என்னும் பெயருடைய வீரராக ஸ்ரீ வரதராஜபெருமாள், மன்னருக்கு உதவியதாகவும், அவ்வீரரின் நினைவாக மன்னர் கிருஷ்ணவர்மா இக்கோவிலை கட்டியதாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன.

வீரராகவபுரம் என்னும் ஒரு ஊரையும், மன்னர் கிருஷ்ணவர்மா உருவாக்கினார். இக்கோவில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் வீரராகவசுவாமி எனவும், உற்சவமூர்த்தி ஸ்ரீ வரதராஜபெருமாள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இக்கோவிலில் திருவிழாக்கள் நடைபெறும்பொழுது இக்கோவிலுக்குச் செல்வது சிறப்பாக இருக்கும். தமிழ்மாதமான சித்திரையில்( ஏப்ரல்-மே)கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தின் போது இக்கோவிலுக்குச் செல்வது ஆனந்தமான அனுபவமாக அமையும்.

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆகும்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X