» »இந்திய சினிமாக்களில் அடிக்கடி வரும் இந்த இடங்கள் எவை தெரியுமா?

இந்திய சினிமாக்களில் அடிக்கடி வரும் இந்த இடங்கள் எவை தெரியுமா?

Written By: Udhaya

சினிமா.. நம் வாழ்வின் பொழுதுபோக்கு மட்டுமில்லாது, வாழ்வியலை பிரதிபலிப்பதாக அமைகிறது இந்த பொழுதுபோக்குக்கான அம்சம்.

திரை நட்சத்திரம் உடுத்தியிருக்கும் உடை, உபயோகப் படுத்தும் பொருள்களில் தொடங்கி அந்த படத்தில் இடம்பெற்றுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு நேரில் சென்று பார்க்கவும் ஆசைப் படுகின்றோம். அப்படி இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் வரும் இடங்களைப் பற்றி காணலாம்.

ஊட்டி மலை ரயில்வே

ஊட்டி மலை ரயில்வே

சினிமா எடுப்பவர்களுக்கு அதற்கான அழகிய லொகேஷன்களை கண்டுபிடிப்பதற்குள்ளே ஒரு வழியாகிவிடும். அப்படி அடிக்கடி சினிமாக்களில் வரும் சுற்றுலாத்தளம் ஊட்டி மலை ரயில்வே.

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெற்றியடைந்த உயிரே படத்தில் வரும் தையா தையா பாடல் ஊட்டியின் தேயிலைத் தோட்டங்களிலும், மலை ரயிலிலும் எடுக்கப்பட்டதாகும்.

PC: VInayaraj

ஊட்டி ஏரி

ஊட்டி ஏரி

அஜாப் ப்ரேம் கி கஸாப் கஹானி படத்தில் வரும் இந்த காட்சி பெரிதும் பேசப்பட்டது. இந்த காட்சியில் இருப்பது சாட்சாத் அந்த ஊட்டி ஏரிதான். இந்த படத்தைத் தவிர பல படங்களிலும் இந்த ஏரி காட்டப்பட்டுள்ளது. தமிழ் படங்களான குட்டி, மூன்றாம் பிறை ஆகியவற்றிலும் இந்த ஊட்டி ஏரியின் அழகை ரசிக்கலாம். மிஸ்டர் பெர்பெக்ட் எனும் தெலுங்கு படத்திலும் இந்த இடத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும்.


PC: Amalshaji27

தொட்டபெட்டா

தொட்டபெட்டா

பிரபல ஹிந்தி படங்களான சஜன், ஆஷிக்கி ஆகிய படங்கள் தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்ட காட்சிகளைக் கொண்டு வெளிவந்தது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழி படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகின்றன. இதனால் அது ஒரு சென்டிமென்ட் ஆகவே இருக்கிறது.

சமீபத்தில் வெளியான பர்பி படத்தில் கூட சில காட்சிகள் தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்டன. ரன்பிர் கபூரும் இலியானாவும் சைக்கிளில் செல்லும் காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டவையே.

PC: Shanmugamp7

ஊட்டி தாவரவியல் பூங்கா

ஊட்டி தாவரவியல் பூங்கா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் பலவற்றில் ஊட்டி தாவரவியல் பூங்கா காட்டப்பட்டுள்ளது. எனினும் தற்போது இங்கு படமெடுக்க சிறப்பு அனுமதி தரப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

குச் குச் ஹோத்தா ஹெய் எனும் ஹிந்தி படம் இங்கு எடுக்கப்பட்டது. மலையாள தமிழ் இயக்குநர் பிரியதர்ஷனின் பல படங்களில் இந்த லொகேஷன் இடம் பெற்றுள்ளது.

மலையாள படமான கிலுக்குளம், கீதாஞ்சலி முதலிய படங்களில் இந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

PC: Adams63

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தின் சில பகுதிகள் தமிழ், தெலுங்கு உட்பட பல படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் படங்களான தெய்வ திருமகள், ராவணன் படங்களில் வரும் மரங்கள் நிறைந்த பகுதிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ளது.

PC: Prof.Mohamed Shareef

கொடைக்கானல்

கொடைக்கானல்

உலகநாயகன் கமல் நடித்த குணா படம் முழுக்க கொடைக்கானலில் எடுக்கப்பட்டது.

இயக்குநர் பாலா எடுத்த நான் கடவுள் படமும் பெரும்பாலும் கொடைக்கானலில் எடுக்கப்பட்டது.

PC: nikhil1508

கொடைக்கானல்

கொடைக்கானல்

ஜீவா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான ராம் படமும் முழுவதும் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதாகும்.

தெலுங்கில் வளர்ந்து வரும் நான் ஈ புகழ் நானி நடித்த ஜென்டில்மேன் படத்தில் சில காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளன.

PC: Silverschoky

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படம் கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் எடுக்கப்பட்டதாகும்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் எனும் கரண் படமும் கன்னியாகுமரியில் எடுக்கப்பட்டது.

தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குட்டி படத்தின் ஆரம்பகட்ட காட்சிகள் கன்னியாகுமரியில் தான் எடுக்கப்பட்டிருந்தது.

PC: Ravivg5

Read more about: travel, பயணம்