Search
  • Follow NativePlanet
Share
» »அடுத்த பத்து நாளைக்கு மழையால் குளிரப்போகும் சுற்றுலாத் தளங்கள்!

அடுத்த பத்து நாளைக்கு மழையால் குளிரப்போகும் சுற்றுலாத் தளங்கள்!

By Udhaya

தென்மேற்கு பருவக் காற்று தேனிப் பக்கம் வீசும்போது என்று ஒரு பாடல் கேட்டுருப்பீங்க. அது என்னவோ சீசனுக்காக பாடுன இன்னிசை தென்றலா இருக்கும். ஆனா இந்த வாட்டி பெய்யுற மழை தேனி, வால்பாறை, நீலகிரினு வச்சி செய்யப்போது.. இங்கெல்லாம் சுற்றுலாத் தளங்கள் மிகவும் குளிரப்போகுது.. அது என்னென்ன சுற்றுலாத் தளங்கள்னு பாக்கலாமா?

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள்

மாஞ்சோலை, அகத்தியர் மலை, குற்றாலம், மேகமலை, கம்பம், தேனி, வால்பாறை, நீலகிரி வரைக்கும் இந்த தென்மேற்கு பருவமழையால செழிக்கப்போகுது. அதுக்காக இந்த இடங்களின் சுற்றுலாத் தளங்கள் பாதிக்கப்படுமா என்று கேட்டா அத பொறுத்திருந்ததான் பாக்கணும். ஏன்னா கனமழை மிகக் கனமழை பெய்யும்னு சொல்லிருக்காங்க.. சுற்றுலா ஏற்பாடு பண்ணவங்களாம் கொஞ்சம் கவனமா சென்று வரணும்.

Amal94nath

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

திற்பரப்பு அருவி, உலக்கை அருவி, தென்காசி குற்றாலம், பாபநாசம், அகத்தியர் மலை, தேன்மலை, மேகமலை, இடுக்கி, மூணாறு, ஆனைமலை உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கு செல்பவர்கள் அல்லது செல்லத் திட்டமிட்டவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செல்லவேண்டும். நேரத்தைப் பொறுத்து மழை, கன மழை, மிக கனமழை பெய்யலாம் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், மழைக்காலத்தில் பயன்படுவனவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது.

Anand2202

 உலக்கை அருவி

உலக்கை அருவி

மிக முக்கியமான சுற்றுலாத் தளமான உலக்கை நீர்வீழ்ச்சி நாகர்கோவிலில் இருந்து 20கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இந்நீர்வீழ்ச்சிக்கு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வருகை தருகிறார்கள். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். உள்ளூர் நம்பிக்கைகளின்படி உலக்கை நீர்வீழ்ச்சி மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தோல்வியாதிகளையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்நீர்வீழ்ச்சி, அதில் குளிக்கும் வயதானவர்கள் புத்துணர்ச்சி பெறவும், சக்தி பெறவும் உதவுகிறது.

Gokulnathk

மாஞ்சோலை மலை

மாஞ்சோலை மலை

மாஞ்சோலை மலை என்ற மலை வாழிடம் தேயிலை தோட்டத்திற்கு பெயர் போன்றது. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர் இருக்கும். பல ரகத்து தேயிலைச் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இயற்கை எழிலுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது இந்த மலை. இந்த மலையின் அமைதியான சூழல் இங்கு வருபவர்களுக்கு மன அமைதியையும் ஓய்வையும் தரும். கக்கச்சியும், நலுமுக்கும் மாஞ்சோலை மலையின் அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

Archana Venkatraj

அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவி பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம். இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும்.

wiki

மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, பொதிகை மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு நீர்த்தேக்கம். இயற்கை வளம் கொண்ட இந்த இடம் வண்ணமயமான அழகை கொண்டுள்ளது.

மேலும் இங்கே மலைகளும், தண்ணீரும், ஆகாயமும் ஒன்று சேர்ந்து காணப்படும் அக்காட்சி, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கும். மணிமுத்தாறு அருவி, அணையிலிருந்து சிறிது தூரம் தொலைவில் தான் உள்ளது.

Rahuljeswin -

மேகமலை

மேகமலை

தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும். இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். இந்த இடத்தின் பல்லுயிர்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு இவ்விடத்தை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்க கோரிக்கை வைத்துள்ளது. மேகமலைப்பகுதியில் விலங்கினங்கள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை உள்ளன.

Mprabaharan

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஊற்றெடுத்துள்ள அருவிதான் கும்பக்கரை நீர்வீழ்ச்சியாகும். தேனியிலிருந்து 20 கிமீ தொலைவும், பெரிய குளத்திலிருந்து 9 கிமீ தொலைவும் உள்ள கும்பக்கரை என்ற இடத்தில் தான் இந்த அருவி உள்ளது.

இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின் கீச்சிடும் குரல்கள் சுற்றூலாப் பயணிகளுக்கு நல்ல வரவேற்பளிக்கும் அம்சமாகும். இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது.

400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், மிருகங்களின் பெயரால் அழைக்கப்பட்டு வரும் அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுந்து சேகரிக்கப்பட்டு விழுந்து கொண்டிருக்கிறது.

சுருளி நீர்வீழ்ச்சி

சுருளி நீர்வீழ்ச்சி

18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுந்து கொண்டிருக்கிறது. மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது. தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் சிறப்பையும், வனப்பையும் பற்றி இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

Mprabaharan

போடி மெட்டு

போடி மெட்டு

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் வீற்றிருக்கும் போடி மெட்டு ஒரு தனித்தன்மையான சுற்றுலாத் தலமாகும். அழகிய சுற்றுலா தலமான போடி மெட்டு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. பல்வேறு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை உடைய போடி மெட்டு பகுதி வன உயிர் மற்றும் தாவரங்களை அதிகமாக பெற்றுள்ள இடமாகும். தேனியிலிருந்து 43 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் போடி மெட்டு பகுதியை போடிநாயக்கனூர் சென்று அங்கிருந்து அடைய வேண்டும்.

Kujaal

வால்ப்பாறை

வால்ப்பாறை

தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் வால்ப்பாறை, கடல் மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் ஆணைமலை மலைத்தொடரின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வால்ப்பாறையில் இருந்து ஆழியாறு வரை ஏறத்தாழ 40 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. வால்ப்பாறையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளது. அதோடு கோயம்புத்தூர் வால்ப்பாறையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன.

Raj21 G

ஊட்டி

ஊட்டி

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Karthik Sridhar

Read more about: travel rain india tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more