Search
  • Follow NativePlanet
Share
» »தேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா?

தேவியின் வலது மார்பு விழுந்த இடம் எது தெரியுமா?

தேவி தலாப் மந்திர் எனும் பிரசித்தமான இந்த ஆன்மிக தலம் ஜலந்தர் நகர ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி, தேவியின்

By Udhaya

தேவி தலாப் மந்திர் எனும் பிரசித்தமான இந்த ஆன்மிக தலம் ஜலந்தர் நகர ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. நாட்டுப்புற கதைகளின்படி, தேவியின் வலது மார்பு இந்த ஸ்தலத்தில் விழுந்ததாக கருதப்படுகிறது. 200 வருடங்கள் பழமையான இந்த கோயிலில் துர்க்கை வடிவில் சக்தி வீற்றுள்ளார். இந்த இடத்துக்கு பயணம் செய்து அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

அமெர்நாத் குகைக் கோயிலைப் போன்ற கோயில்

அமெர்நாத் குகைக் கோயிலைப் போன்ற கோயில்

ஒரு தீர்த்தக்குளத்தையும் கொண்டுள்ள இந்த கோயிலில் பிஷான் பைரவ் (சிவன்) சிலையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் ஹரிவல்லப் சங்கீத் சம்மேளன் எனும் இசை நிகழ்ச்சி இந்த கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், கண்டு ரசிக்கவும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். மேலும், இந்த கோயிலுக்கு அருகிலேயே ஒரு காளி கோயிலும் அமைந்திருக்கிறது. அமர்நாத் குகைக்கோயிலைப்போன்று இந்த தேவி தலாப் மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

commons.wikimedia.org

பகத் சிங் மியூசியம்

பகத் சிங் மியூசியம்

ஷாஹீத் இ அஸாம் சர்தார் பகத் சிங் மியூசியம் எனும் இந்த அருங்காட்சியகம் 1981ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி துவங்கப்பட்டிருக்கிறது. இந்த நாள் ஷாஹித் பகத் சிங் அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜலந்தரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த மியூசியம் அமைந்துள்ளது. இது கட்கர் கலியான் எனும் மற்றொரு சுதந்திரப்போராட்ட தியாகி பிறந்த இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுதந்திரப்புரட்சியில் ஈடுபட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பாதி எரிந்த நிலையில் எலும்புகள் மற்றும் ரத்தம் தோய்ந்த செய்தித்தாள்கள் போன்றவை இங்கு வரலாற்று சான்றுகளாக காட்சி தருகின்றன. ஷாஹீத் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்த தீர்ப்பை எழுதுவதற்கு பயன்படுத்திய பேனாவும் இங்கு வைக்கப்பட்டிருக்கிறது.

punjabmuseums.gov.in

நேருவின் ரோஜாத் தோட்டம்

நேருவின் ரோஜாத் தோட்டம்

லூதியானாவின் மையப்பகுதியில் 1967ல் உருவாக்கப்பட்ட இந்தத் தோட்டம் 27ஏக்கர் பரப்பளவில், 1600வகை ரோஜா வகைகளுடன், 16000செடிகளுடன் அமைந்துள்ளது. பல ஆயிரம் மக்கள் கண்டுகளிக்கும் இந்தத் தோட்டத்தில் பிரம்மாண்ட நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

 மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்

மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம்

1999-ல் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஜிடி சாலையில் 6.7கிமீ தொலைவில் உள்ளது. அருங்காட்சியகத்தின் வாசலில் ரஞ்சித் சிங்கின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பழங்கால ஆயுதங்கள் சிலைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளைப் பெற்ற பஞ்சாபியர்களின் புகைப்படங்களும் உள்ளன.

மான் பூங்கா, நீலான்

மான் பூங்கா, நீலான்

அருமையான சுற்றுலா தளமான இங்கு அதிகமான எண்ணிக்கையில் மான்கள் காணப்படுகின்றன. லூதியானாவில் இருந்து 20கிமீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி மற்றும் குடும்பச் சுற்றுலாவிற்காக ஏராளமான மக்கள் வருகிறார்கள். மான்கள், சம்பார்கள், முள்ளம்பன்றிகள், முயல்கள் இங்கு காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பட்ஜ்ரிகர், சிகப்பு தலை பாராகீட், க்ரே பாராகீட் ஆகியவையும் இங்கு உள்ளன. பஞ்சாப் அரசால் நிர்வகிக்கப்படும் இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்து மகிழலாம்.

தேசிய தியாகிகள் நினைவகம், ஃபெரோஸ்பூர்

தேசிய தியாகிகள் நினைவகம், ஃபெரோஸ்பூர்

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள இந்த நினைவகம் சட்லஜ் நதிக்கரையில் உள்ளது. பகத்சிங், சுக்தேவ் சிங், ராஜ்குரு சிங் ஆகியோரை தேதிக்கு முன்பே தூக்கிலிட்டு அவர்கள் உடல்களை இங்கே ஆங்கிலேயர்கள் எரித்தனர். பி.கே.தத் அவர்களின் உடலும் இங்கேயே எரியூட்டப்பட்டது. 1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிய வீரர்கள் இங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் பஞ்சாபின் முன்னாள் முதல்வர் ஜெயில் சிங்கின் உத்தரவின் பேரில் மீண்டும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு மார்ச் மாதமும் 23ஆம் நாள் ஷஹீதி மேளா நடைபெறும்
ferozepur.nic.in

ஹரிகே சதுப்புநிலம்

ஹரிகே சதுப்புநிலம்

ஹரிகே சதுப்புநிலம் ஃபெரோஸ்பூர் அம்ரிஸ்டர் எல்லையில் 86சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. 1999ல் வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இதில் விஜியான், ஷொவெல்லார், டீல், பின்டெயில் மற்றும் பிராமினி வாத்து ஆகிய பறவைகள் வருகின்றன.

7 வகையான ஆமைகளும், 26வகையான மீன்களும் இங்குள்ள குளத்தில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்திய காட்டுப்பன்றி, காட்டுப் பூனை,குள்ளநரி, மங்கூஸ் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.
wikipedia.org

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X