Search
  • Follow NativePlanet
Share
» »அபூர்வ தோற்றம் கொண்ட பஞ்சமுகேஸ்வரர்- பௌர்ணமியில் வழிபட்டால் இந்த ராசிக்கு ஏற்றது..!

அபூர்வ தோற்றம் கொண்ட பஞ்சமுகேஸ்வரர்- பௌர்ணமியில் வழிபட்டால் இந்த ராசிக்கு ஏற்றது..!

சிவ தோற்றத்தின் அடையாளங்கள் வேறுபட்டு இருப்பது நாம் அறிந்ததே. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு மனித நாகரீகம் தோன்றியது மதல் இருந்து வந்துள்ளது என்பதை விளக்குகிறது. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது. சிவனை வழிபடும் வழக்கம் பழங்காலத்திலும் நம்மிடம் இருந்துள்ளது. ஒரு மக லிங்கம், இரு முகம், மூன்று, நான்கு என இன்னும் பல தோற்றங்களில் சிவபெருமான் காட்சியளித்தாலும் சிவனின் ஜந்து முகங்கள்சதாசிவ மூர்த்தியின் ஆயிரத்தில் ஒரு கூறிலிருந்து தோன்றியவரே மகேசர். மகேச மூர்த்தி மகேச வடிவங்கள் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். இவரே படைத்தல், காத்தல், ஒடுக்கல் ஆகியவற்றை நேரடியாக இயற்றுகிறார். இத்தகைய பஞ்ச முகம் கொண்ட சிவலிங்கம் எங்கே உள்ளது ?. பௌர்ணமியன்று எந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான செல்வமும் வாழ்க்கையும் அளிக்கவுள்ளார் என பார்க்கலாம் வாங்க.

பஞ்சமுகேஸ்வரர்

பஞ்சமுகேஸ்வரர்

பஞ்சமுகம் என்னும் ஐந்துமுக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே பஞ்சமுகேஸ்வரர் கோவில் என்று தனியாக உள்ளது. சஷ்டி அப்த பூர்த்தியை அந்தக் கோவிலில் வைத்துச் செய்யப்படுவது விசேஷமாகும். வட இந்தியாவில் சில தலங்களிலும் பஞ்சமுக லிங்கங்கள் காணப்படுகின்றன. திருக்கைலையில் இறைவனின் தரிசனம் பஞ்சமுக லிங்க தரிசனம் என்றே சொல்லப்படுகிறது. இந்தப் பஞ்ச முகங்களில் இருந்தே கங்கை ஐந்து உருவங்களில் பொங்கி வருவதாயும் சொல்லப் படுகிறது.

Ranjithsiji

திருவானைக்காவல் பஞ்சலிங்கம்

திருவானைக்காவல் பஞ்சலிங்கம்

திருச்சியில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் பஞ்சமுகலிங்கத்திற்கு என தனிக்கோவில் உள்ளது. இத்தல மூலவர் பஞ்சமுகேஸ்வரர் என திருநாமம் கொண்டுள்ளார். அம்மையார் திரிபுரசுந்தரி. ஐந்து முக லிங்கங்களில் திசைக்கு ஒன்றாக ஐந்து முகங்கள் தவிர, உச்சியில் வடகிழக்கு திசை நோக்கி ஒரு முகமும் காணப்படும். பஞ்சமுக லிங்கத்தைச் சிலர் சிவாகம லிங்கம் எனவும் சொல்வார்கள். ஐந்து முக ருத்திராட்சத்தினால் மண்டபம் கட்டி, ஐந்து பொருட்களால், குறிப்பாய் பஞ்சகவ்யம் எனப்படும் பசும்பால், தயிர், நெய், கோமியம், சாணம் போன்றவற்றால் அபிஷேஹம் செய்து, ஐந்து மலர்களால் மாலை அணிவித்து, ஐந்து வில்வங்களால் அர்ச்சித்து, ஐவகை நைவேத்தியம் செய்வித்து, வழிபடுவதே இதன் விசேசமாகும்.

Laks316

பஞ்சமுக ஈஸ்வரன்

பஞ்சமுக ஈஸ்வரன்

சத்தியோஜாதம், அகோரம், தத்புருஷம், வர்மதேவம், ஈசானம், என்பனவே அந்த ஐந்து முகங்கள். நான்முகனுக்கு இருப்பது போல் சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாக கணக்கிடப்பட்டு ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் என இந்த மூலவர் அழைக்கப்படுகிறார். தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இறைவனின் தோற்றம் அவ்வளவு அபூர்வமானதாக இருக்கும்.

Ms Sarah Welch

தல அமைப்பு

தல அமைப்பு

மூலவர் சன்னதிக்கு நேர் எதிரே தனிச் சன்னிதியில் திரிபுர சுந்தரி அம்மையார் சன்னதி உள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்க முடியும். எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜ ராஜேஸ்வரியின் சன்னதி உள்ளது. ஆலய பிரகாரத்தின் மேற்கே மகா கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜ லட்சுமி ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கிழக்கே பிரகாரத்தில் கால பைரவர் உள்ளார். மாத தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர சிவலிங்க வடிவிலான சதுஷ் சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஷ் சஷ்டி கலேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன. இறைவனின் தேவக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. தேவக் கோட்டத்தின் தென்புறம் துர்க்கையின் திருமேனியும் கிடையாது.

Ssriram mt

64 முகங்கள்!

64 முகங்கள்!

தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் பாணம் அமைந்துள்ளது. இந்த இறைவனுக்கு 64 முகங்கள். பாணம் முழுவதும் உள்ள 64 வரிக் கோடுகள் முகங்களாக கணக்கிடப்பட்டு அதே கோணத்தில் இறைவனை பக்தர்கள் தரிசிக்கின்றனர். இறைவனின் பின் புறம் நான்கு வேதங்கள் சாலிக்கிராமம் வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். கோவிலின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் கூடுதல் சிறப்பாகும்.

Ssriram mt

தல வரலாறு

தல வரலாறு

விச்ரவஸ்ஸீக்கு ராவணன், குபேரன் என்று இரு புத்திரர்கள் இருந்தனர். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை இருந்தமையால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. இதில் குபேரனின் அனைத்துவிதமான செல்வங்களும் ராவணனால் அபகரிக்கப்பட்டன. மனம் உடைந்த குபேரன் மகாதேவரை வேண்டி நின்றார். குபேரனின் வேண்டுதலை ஏற்ற மகாதேவர், மகாவிஷ்ணு தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப்படுவான். உன்னிடமிருந்து பறிபோன செல்வங்கள் அனைத்தும்மீன்டும் உன்னிடம் வந்தடையும் என்றார். குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினார். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தன் பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான்.

Ssriram mt

வழிபாடு

வழிபாடு

இத்தல மூலவரையும், அம்மையாரையும் ஒருசேர வழிபடுவதால் நீண்ட நாட்கள் நின்றுருந்த திருமணம் கைகூடும். செல்வ வளம், உடல் நலம் பெரும் என்பது தொன்நம்பிக்கை. அவ்வாறு வேண்டயவை நிறைவேறியதும் மூலவருக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Ssriram mt

நடைதிறப்பு

நடைதிறப்பு

அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோவில் நடை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ssriram mt

தலசிறப்பு

தலசிறப்பு

இங்கு அம்மனுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அன்னை தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள். இறைவனையும் இறைவியையும் தரிசித்து விட்டு திரும்பி நடந்து சிறப்பு மண்டபத்தினுள் நுழைந்து மகாமண்டபத்தில் நுழைந்தால் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை நாம் தரிசிக்கலாம்.

Ssriram mt

ராசிக்காரர்களை வாழவைக்கும் பௌர்ணமி

ராசிக்காரர்களை வாழவைக்கும் பௌர்ணமி

நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரிகளுக்கு பெயர் பெற்ற பஞ்சமுகேஸ்வரரை ஒவ்வொரு மாதமும் தேய்பிறையன்று வழிபடுவது ஏற்றது. பெபளர்ணமி தினத்தன்று கன்னி ராசிக்கார்களும், மீனம் ராசிக்கார்களும் வழிபட்டு வர வாழ்நாள் செழிப்பதோடு, செல்வம் பெருகும் என்பது தொன்நம்பிக்கையாகும். தோஷத்தால் விரக்தியடைந்திருப்போர், தொழில் பெருகுவோர் பஞ்சமுகேஸ்வரரை வழிபடுவது சிறந்தது.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

திருச்சி மாநகரில் இருந்து ஸ்ரீரங்கநாதர் ஆலயம் செல்லும் வழியில் திருவானைக்காவல் என்னும பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் ஆலயம். பாப்பங்குறிச்சி, திருவெறும்பூர், வளலூர் என மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more