Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கோவில்ல தங்கத்தையே பிரசாதமா தர்றாங்களாம்!! எங்க தெரியுமா?

இந்த கோவில்ல தங்கத்தையே பிரசாதமா தர்றாங்களாம்!! எங்க தெரியுமா?

பிரசாதமாக தங்கம் வழங்கும் கோயில் எங்கயிருக்கு தெரியுமா?

இந்தியா ஆன்மீகத்துக்கு பெயர் பெற்ற நாடு. உலகில் மற்ற நாடுகளைப்போலல்லாமல் தனக்கென்று மிக நீண்ட வரலாற்றை இன்றளவும் பேணி பாதுகாப்பது.

வரலாற்றை பற்றி பேசும்போது ஆன்மீகத்தை நம்மால் ஒதுக்கி வைத்துவிட முடியாது. முதலில் அரசர்களின் கடவுள் நம்பிக்கை பலரை நாட்டை கோட்டைவிடச் செய்தது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

பழங்கால மன்னர்களும் சரி, குடியரசு ஆன பின் இந்தியாவும் சரி ஆன்மீகத்துக்கென பல வசதிகளையும் செய்தவண்ணம் உள்ளனர்.

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் கோட்பாடுகளுக்கிணங்க, இங்கு பல்வேறு மத கோவில்களும் உள்ளன. ஒவ்வொரு கோவிலிலும் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டுள்ள பலர் வந்து வழிபடுகின்றனர்.

இந்தியாவில் இந்து, முஸ்லிம்,கிறித்துவம்,சமண,புத்த மதங்கள் உள்ளன. அவற்றில் எல்லா வழிபாடு தலங்களிலும் பிரசாதம் என்ற ஒன்று வழங்கப்படுகிறது. வேறு வேறு பெயர்களில் அளித்தாலும் பொதுவாக நாம் அதை பிரசாதமாகத்தான் கருதுகிறோம்.

திருநீறு, குங்குமம், சந்தனம்,பூ, சர்க்கரைப் பொங்கல் என விதவிதமாக வழங்கப்படும் கோவில்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்த கோவிலில் என்ன பிரசாதம் வழங்குகிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்தால் உடனே சென்றுவிடுவீர்கள் மத்திய பிரதேசத்துக்கு...

அப்படி என்ன தர்றாங்க... தங்கம்... ஆம் தங்கம் பிரசாதமாக வழங்கும் கோவில் ஒன்று இருப்பதாக சமீபத்தில் தொலைக்காட்சி செய்திகளில் காட்டப்பட்டது. அதுபற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாங்க...

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயர்கொண்ட இந்த ஊர் தங்கத்திற்கு பெயர்பெற்றது.

மஹாலக்ஷ்மி கோவில்

மஹாலக்ஷ்மி கோவில்

தங்கம் பரிசாக வழங்கும் கோயில் மத்தியபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. கோயில் என்பது பக்திக்கான இடம் மட்டுமல்ல. வறியவர்களுக்கு வசதியானவர்கள் தங்களால் இயன்றவற்றை வழங்குவதற்கு நம் முன்னோர்கள் அமைத்துகொடுத்த இடமாகும்.

தங்க பிரசாதம்

தங்க பிரசாதம்

பொதுவாக கோயில்களில் திருநீறு, குங்குமம் பிரசாதமாக வழங்குவது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் தங்க பிரசாதம் வழங்கப்படுகிறது என்பது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் விசயமாகும்.

காணிக்கை

காணிக்கை

நாம் கோயிலுக்கு செல்லும்போது பணமாக காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த கோவிலுக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக தருகிறார்களாம்

PC: Vibhorjain

எப்போது தருகிறார்கள்

எப்போது தருகிறார்கள்

அந்த வருடத்தின் தீபாவளி நன்னாளில் மொத்த காணிக்கையையும் கணக்கிட்டு, வந்த தங்கம்,வெள்ளி, காசுகளை அப்படியே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்களாம்.

PC: Rajasekhar

பிரசாதமாக வழங்கப்படும் பணம்

பிரசாதமாக வழங்கப்படும் பணம்

கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பணம், தங்கம், வெள்ளி போன்றவை குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

மத்தியபிரதேச தலைநகர் போபாலிலிருந்து 300 கிமீ தொலைவிலும் ,
இந்தூரிலிருந்து 137 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த கோயில்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

பாக்ஹ் குகைகள், பீதாம்பூர், பென்ட் தேசிய பூங்கா, பச்டர் கிராமம், நேவ்கான் தேசியப் பூங்கா, கன்ஹா தேசியப்பூங்கா, உஜ்ஜைன், சின்தமன் கணேஷ் கோவில், படே கணேஷ்ஜி கா மந்திர், ஹர்சித்தி கோவில், விக்ரம் கீர்த்தி மந்திர், கோபால் மந்திர் மற்றும் நவக்ரஹ மந்திர் போன்றவைகள் இங்குள்ள சில புகழ் பெற்ற கோவில்களாகும்.

இது போக சித்தாவட், பர்த்ரிஹரி குகைகள், சண்டிபணி ஆசிரமம், கால பைரவர், துர்காதாஸ் கி சத்ரி, கட்கலிகா, மங்கள்நாத் மற்றும் பிர் மட்ஸ்யேந்த்ரநாத் போன்ற சில முக்கிய இடங்களும் இங்கு அமையப்பெற்றிருக்கின்றன.

பாக்ஹ் குகைகள்

பாக்ஹ் குகைகள்

தர் நகரத்திலிருந்து 97 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பாக்ஹ் குகையை மத்தியப் பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இந்த குகையில் இருக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் அஜந்தா குகையை நினைவு படுத்தும் வகையில் இருக்கும்.

இந்த குகைகள் 9 நினைவுச் சின்னங்களின் குவியலாகும். இந்த குகை பாறைகள் குடைந்து உருவாக்கப்பட்டவை. சுவர் ஓவியங்களுக்கு புகழ் பெற்ற இந்த குகை, இந்தியாவின் பாறை வெட்டும் கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பென்ச் தேசியபூங்கா

பென்ச் தேசியபூங்கா

பென்ச் சுற்றுலா புகழ் பெற முக்கிய காரணமாக விளங்குகிறது இங்குள்ள பென்ச் தேசிய பூங்கா/பென்ச் புலிகளின் காப்பகம். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா அதன் தாவரவளம் மற்றும் விலங்கின வளத்துக்கு புகழ் பெற்றது. ஜாமுன், டீக், லென்டியா, பலஸ், பிஜா, மஹுவா, குசும், செமல், மூங்கில் போன்ற பல வகையான பூண்டுத்தன்மையுடைய செடி கொடிகளை இங்கு காணலாம். கரடிக்குரங்குகள், புனுகுப் பூனைகள், கரடிகள், மான்கள், புலிகள், காட்டு நாய்கள், பன்றிகள், சிறுத்தைகள் போன்ற பல வகையான விலங்குகள் இந்த பூங்காவில் இருக்கின்றன.

Rudraksha Chodankar

பச்டர் கிராமம்

பச்டர் கிராமம்


பச்டர் என்ற சின்ன கிராமம் பென்ச் துரியா கேட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே களிமண்ணில் இருந்து மண் பாண்டங்கள் செய்பவர்களை அதிகம் காணலாம். இங்கு செய்யப்படும் கைவினை பொருட்களின் அழகு நம்மை மயங்க வைக்கும். அதனை நம் வீட்டிற்கு வாங்கியும் செல்லலாம்.

பென்ச் தேசிய பூங்காவிற்கு அருகில் பல கிராமங்களை கொண்டுள்ளது பென்ச் சுற்றுலா. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் காண்ட் பழங்குடியினரின் மரபு மற்றும் பண்பாட்டினை பார்க்க முடியும்.

பென்ச்சிற்கு அருகில் இருக்கும் நேவ்கோன் தேசியப் பூங்கா மற்றும் நாக்சிரா வழிப்பாட்டிடம் மகாராஷ்டிராவில் உள்ள இயற்கை காடுகள் ஆகும். கன்ஹா தேசியப் பூங்கா பென்ச்சிலிருந்து 198 கி.மீ. தொலைவில் உள்ளது.

Graf orlok2004

உஜ்ஜைன்

உஜ்ஜைன்


மத்தியப் பிரதேசத்தின் மிகப் பழமை வாய்ந்த நகரமான உஜ்ஜைன், உஜ்ஜயினி என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. அதற்கு போற்றத்தக்க வெற்றி வீரன் என்று பொருளாகும். இங்கு சமயஞ்சார்ந்த செயல்பாடுகள் அதிகமாக நடைபெறும்.+

தெருவோரம் கிடைக்கும் உணவுகளுக்கு புகழ் பெற்றது உஜ்ஜைன். டவர் சௌக் என்ற இடத்தில் இவ்வகை உணவுகளை சுற்றுலாப் பயணிகள் உண்ணலாம். இந்த வகை உணவுகளோடு எச்சில் ஊறும் சாட்ஸ், பாணி பூரி, நெய் கலந்த சோளம், பேல் பூரி போன்ற நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு மகிழலாம்.

LRBurdak

 உடனடி நிவாரணம் தரும் விநாயகர்

உடனடி நிவாரணம் தரும் விநாயகர்

உஜ்ஜைன்னில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் சின்தமன் கணேஷ் கோவில். விநாயகரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு இந்தக் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சின்தமன் என்ற பழமையான ஹிந்து சொல்லுக்கு 'மன அழுத்தத்தை நீக்குதல்' என்று பொருளாகும். இங்கு மன அழுத்தத்துடன் வரும் அனைத்து பக்தர்களுக்கும் விநாயகர் உடனடி நிவாரணம் தருவார் என்று மக்களால் நம்பப்படுகிறது.

மேலும் சில கோயில்கள்

மேலும் சில கோயில்கள்


கோவில் நகரமான உஜ்ஜைன்னில் அமைந்துள்ள படே கணேஷ்ஜி கா மந்திர், இந்த நகரத்தில் உள்ள மரபு சார்ந்த முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் இருக்கும் கடவுள் மிகவும் அனுகூலமானவர் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

இங்கே மிகப்பெரிய விநாயகர் சிலை ஒன்று காணப்படுகிறது. இந்த விநாயகரிடம் நாம் வேண்டியது விரைவிலேயே நிறைவேறும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார்.

ஹர்சித்தி கோவில், கோவில் நகரமான உஜ்ஜைன்னில் முக்கிய பங்கு வகிப்பதால், இது ஒரு விசேஷ கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவில் அன்னபூர்ணி தேவிக்காக கட்டப்பட்டதாகும். கருமையான செந்நிறத்தில் அன்னபூர்ணி தேவியின் ஓவியம் இங்கு தீட்டப்பட்டுள்ளது. மேலும் அன்னபூர்ணி தேவியின் சிலை மஹாலக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியின் சிலைகளுக்கு நடுவில் நிறுவப்பட்டுள்ளது

மௌரியன் காலத்து பெருமைகளை இளைய சமுதாயனத்தினர் நினைவில் வைத்துக் கொள்ள, உஜ்ஜைன் நகரத்தில் எழுப்பட்டதே விக்ரம் கீர்த்தி மந்திர். ஸ்கிந்தியா ஓரியண்டல் ஆராய்ச்சி நிலையம், தொல்பொருள் அருங்காட்சியம், கலைக்கூடம் மற்றும் ஒரு அவைக்கூடத்தை கொண்டுள்ளது இந்த விக்ரம் கீர்த்தி மந்திர்.

 பர்த்ரிஹரி குகைகள்

பர்த்ரிஹரி குகைகள்

த்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது பர்த்ரிஹரி குகைகள். இந்த குகை பழமையான உஜ்ஜைன் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இது மனதை மயக்கும் இடம் என்று மத்தியப் பிரதேசத்தின் சுற்றுலா அமைச்சகம் கூறுகிறது. இந்த குகையில் நுழையும் போது ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதவையாக இருக்கும். இந்த குகையில் இருக்கும் பல சிற்பகங்கள் அழிந்த நிலையில் இருந்தாலும், இந்த இடத்தை இன்னும் காணாதவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் காத்திருக்கிறது. இந்த குகையில் பூமிக்கு அடியில் ஆழமாக செல்ல வேண்டும்.

உள்ளே மூச்சு விட கூட சிரமமாக இருக்கும். விக்ரமாதித்ய அரசரின் மூத்த தமையனின் பெயர் தான் இந்த குகைக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த இடம் பர்த்ரிஹரியின் யோகப் பயிற்சியால் புகழ் பெற்றது. இவர் நாதா செச்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய பலரில் ஒருவராக விளங்கியவர். இந்த குகையின் வடிவமைப்பை கவனித்தோமானால், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பர்மர் காலத்து இரண்டடுக்கு கவானோடையை நினைவுபடுத்தும்.

 கட்கலிகா கோவில்

கட்கலிகா கோவில்

புகழ் பெற்ற கட்கலிகா கோவில் உஜ்ஜைன் நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. மத்தியப் பிரதேச சுற்றுலா அமைச்சகம் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கிறது.

இந்த கோவில் ஹிந்துக்களின் சக்தி வாய்ந்த கடவுளான காளி தேவிக்காக எழுப்பப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலைப் பற்றி ஒரு புராணக் கதை உள்ளது.

அதன் படி பெரிய கவியான காளிதாசர் இந்த கடவுளின் பெரும் பக்தராக இருந்த காரணத்தால் அவருடைய கவி ஆற்றல் அனைத்தும் இந்த கடவுளின் அருளால் கிடைக்கப்பட்டவை என்று நம்பப்படுகிறது.

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X