» »நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருவாரூர் கோயிலுக்கு ஒரு பயணம்

நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருவாரூர் கோயிலுக்கு ஒரு பயணம்

Posted By: Udhaya

திருவாரூர் தியாகராஜர் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகவும் பழமையானது. மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரிய கோயில் இதுவாகும். எனவேதான் இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராக புகழ்பெற்றுள்ள ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.

தல வரலாறு

தல வரலாறு

இவை சப்தவிடங்கத் தலங்கள் (ஏழு தலங்கள்) எனப்படும்.

இக்கோவிலில் தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக நம்பிக்கை நிலவுகிறதுய

கமலை என்னும் பராசத்தி தவம் செய்ததாக வரலாறு உள்ளது. பக்தர்கள் இதனை மிகச்சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

எல்லாச் சிவாலயங்களிலும் நடைபெறும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குவதாக கருதப்படுகிறது.

PC: Kasiarunachalam

தல சிறப்புக்கள்

தல சிறப்புக்கள்

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர். திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது

தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.

நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம்பெற்றுத் தந்த ஊர் திருவாரூர். இவ்விடத்தில் சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்டதாக நம்பிக்கை.

பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த ஊரிதுவாகும். எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் இடம் இதுவாகும்.

PC: Nsmohan

கட்டமைப்பு:

கட்டமைப்பு:

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.

PC: Wiki

கோயிலின் சிறப்புக்கள்:

கோயிலின் சிறப்புக்கள்:

இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.

PC: Raguma

 எப்படி செல்வது?

எப்படி செல்வது?

திருவாரூர், மாநிலத்தின் முக்கிய நகரங்களான திருச்சி மற்றும் சென்னையில் இருந்து, சாலை வழியாக எளிதில் அடையும்படி அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து, சென்னை, சுமார் 290 கி.மீ தொலைவிலும், திருச்சி, சுமார் 110 கி.மீ தொலைவிலும் உள்ளன. திருவாரூரிலிருந்து, டாக்ஸி மூலமாக திருச்சிக்கு செல்வதற்கு ரூபாய் 1500 வரை செலவாகும்.

நன்றி

நன்றி

தொடர்ந்து இணைந்திருங்கள் நேட்டிவ் பிளானட் தமிழ்..

நன்றி

Read more about: travel temple