» »ஒரே நாளில் 2 கோயில்கள்.....உங்களால 'அந்த' ஒற்றுமைய கண்டுபிடிக்க முடியுமா?

ஒரே நாளில் 2 கோயில்கள்.....உங்களால 'அந்த' ஒற்றுமைய கண்டுபிடிக்க முடியுமா?

Posted By: Udhaya

நேட்டிவ் பிளானட் தமிழ் உங்களுக்கு பலவிதமான டூர் பேக்கேஜ் மற்றும் கோயில்களுக்கு செல்வதற்கான யோசனைகளையும், அதற்கான வழிமுறைகளையும் சொல்லிவருகிறது.
அந்த வகையில் ஒரே நாளில் சென்று வரக்கூடிய கோயில்களையும் இங்கு தரவிருக்கிறோம்.

நாம் மனதில் ஒன்று நினைத்துக்கொண்டே ஓர் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வோம். அதே நேரத்தில் அங்கு செல்லும் நேரம் காலம், செய்யவேண்டியது, எடுத்துச் செல்லவேண்டியது எல்லாவற்றையும் கவனத்தில் கொள்வோம்தானே.

இருந்தபோதிலும், சில சமயங்களில் நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக அமைந்துவிடுகிறது. அதாவது, ஒரு இடத்தை சுற்றிப்பார்க்கவே நேரம் சரியாகி விட, ஏற்கனவே திட்டமிட்ட இடமும் தூரமாகிவிட, எங்கும் செல்லமுடியாமல் பாதி வழியில் தவிக்கும் நிலைமைக்கு ஆளாகிவிடுகிறோம்.

நீங்கள் சென்ற கோயிலின் அருகே இன்னொரு சுற்றுலாத் தளமிருந்தால், அதற்கு செல்வதற்கான நேரம் உங்களிடமிருந்தால் வெகு எளிதாக சென்று வரலாம்தானே...

கட்டுரையை படித்து முடித்துவிட்டு இரண்டு கோயில்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை கமண்டில் கூறுங்கள் பார்க்கலாம்

இன்னிக்கு நாம திருநெல்வேலி மாவட்டத்துக்கு போகப்போகிறோம்.

திருநெல்வேலி என்றவுடனே நமக்கு நினைவுக்கு வர்றது அல்வாவும், நெல்லையப்பரும்.

சரி. ஒரே நாள்...இரண்டு கோயில்கள் பகுதில இன்னைக்கு நெல்லையப்பர் கோயில் பத்தியும், அதற்கு அருகிலுள்ள குற்றாலநாதர் கோயில் பத்தியும் பாக்லாமா?

நெல்லையப்பர்

நெல்லையப்பர்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது.

Pc Theni.M.Subramani

திருநெல்வேலி பதிகம்

திருநெல்வேலி பதிகம்


கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருப்பதால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

wikipedia

சிறப்புகள்

சிறப்புகள்

இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது.

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.

wikipedia

கல்லில் வழிந்த ரத்தம்

கல்லில் வழிந்த ரத்தம்


அரண்மனைக்கு பால் ஊற்றிக்கொண்டிருந்த பால்காரர் ஒருவர் செல்லும் வழியில் அடிக்கடி ஒரு இடத்தில் தவறி விழுந்தாராம். இதனை மன்னரின் கவனத்துக்கு கொண்டு சென்றதும், மன்னர் தன் வீரர்களை அனுப்பி பார்க்கச் சொன்னாராம். அவர்களும் கோடரி கொண்டு அங்குள்ள கல்லை அகற்ற முயல, ரத்தம் பீறிட்டு அடித்ததாம்.

அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

வெட்டுக்காயத்துடன் நெல்லையப்பர்

வெட்டுக்காயத்துடன் நெல்லையப்பர்


அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயம்

ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது

குற்றால நாதர் ஆலயம்

குற்றால நாதர் ஆலயம்

திருநெல்வேலியிலிருந்து 2 மணி நேரத்துக்கும் குறைவான தூரமே உள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ளார் குற்றால நாதர்.

திருமாலை சிவலிங்கமாக மாற்றிய அகத்தியர்

திருமாலை சிவலிங்கமாக மாற்றிய அகத்தியர்

இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.

கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்

இத்திருக்கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுகள் உள்ளன.

பாண்டியர் கல்வெட்டுகள் 75 இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன.

PC: Booradleyp1

சிவனின் தலையில் வடு

சிவனின் தலையில் வடு


அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்க்கு தைல அபிசேகம் நடைபெறுகின்றது.

Read more about: travel, temple