Search
  • Follow NativePlanet
Share
» » நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா? இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா?

நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா? இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா?

சென்னை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக கையாள்வதில் அவர்கள் பாணியே தனி. கோடை வெப்பத்தில் வேர்த்து வெறுத்து போய், இந்த ட்ராபிக்கில் சிக்கி சின்னபின்னமாகி நாட்களின் பெரும்பகுதி வீணாய் போகும் போ

By Narayanan V

சென்னை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக கையாள்வதில் அவர்கள் பாணியே தனி. கோடை வெப்பத்தில் வேர்த்து வெறுத்து போய், இந்த ட்ராபிக்கில் சிக்கி சின்னபின்னமாகி நாட்களின் பெரும்பகுதி வீணாய் போகும் போது, இந்த சிட்டியை விட்டு எங்காவது ஓடி போய் ரெண்டு நாள் அமைதியா இருந்துட்டு வரணும் என்று தோன்றும் போது!!! கவலை வேண்டாம் ஓரு வழி இருக்கு.

தஞ்சை மண்ணின் அமைதி கொஞ்சும் பகுதியில், நம் கலாச்சார பராம்பரியத்தை சங்க காலத்திலிருந்து இன்றுவரை கட்டிகாக்கும் ஒரு ஊர் கும்பகோணம், தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்றால் அது மிகையாகது. இங்கு நீங்கள் செல்லும் ஆன்மிக சுற்றுலா, உங்களுக்கு தெய்வீக உணர்வையும், ஆத்மதிருப்தியும் அளிக்கும் என்பது நிச்சயம்.

அதுவும் கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக கும்பகோணத்துக்கு பயணிக்கும் போது தங்களுக்கு கிடைக்கும் மனஅமைதியே அலாதி.

 கும்பகோணம் செல்ல சிறந்த நேரம்

கும்பகோணம் செல்ல சிறந்த நேரம்

கும்பகோணத்தில் பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும். குளிர் காலங்களில் பயணிப்பது அருமையாக இருக்கும். ஆனால் கோடையில் போய் வெயிலில் மாட்டிகொண்டீர்கள் என்றால் அவ்வளவு தான். ஆனால் சென்னையை விட கும்பகோணம் பரவாயில்லை. மழைக்காலமும் ஒகே தான் சமயத்தில் மழை வெளுத்து வாங்கும். அதுவும் நன்றாக தான் இருக்கும். எது எப்படியோ கும்பகோணம் தங்களுக்கு வீக் எண்ட் சுற்றுலா செல்ல ஒரு சிறந்தஇடம்.

PC: Ssriram mt

 கும்பகோணம் போவது எப்படி ?

கும்பகோணம் போவது எப்படி ?

சென்னையிலிருந்து தாங்கள் குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பிடித்தமான காரில் செல்லுங்கள். தனியாக அல்லது நண்பர்களுடன் ஜாலி டிரிப் என்றால் பைக் தான் இருககவே இருக்கே. சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் அடையலாம். கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையை ஒட்டியே செல்லும் சாலை என்பதால் ஒருபுறம் கடலின் அழகும், மறுபுறம் இயற்கையின் ஜாலமும் கண்ணை கவரும். வழியில் தங்கி செல்ல திட்டம் போட்டீர்களானால், அதற்கு தகுந்தாற்போல் ஆடைகளை எடுத்துச்செல்ல மறக்காதீர்கள்.

செல்லும் வழி

சென்னையிலிருந்து கும்பகோணம் சுமார் 280 கிமீ முதல் 300 கிமீ க்குள் இருக்கும். வழிதடம் 1 - சென்னை-விழுப்புரம்-பண்ருட்டி-நெய்வேலி-கும்பகோணம். இது 300 கிமீ தூரம் சுமார் 6 மணி நேரம் ஆகலாம். வழிதடம்2 - கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை-புதுச்சேரி-கடலூர் - சிதம்பரம்-மயிலாடுதுறை-கும்பகோணம் இது 284 கிமீ தூரம். இந்த வழியில் செல்லும் போது இயற்கையை ரம்யமாக ரசித்து கொண்டே போகலாம். மாசுபடாத சுத்தமான காற்றை சுவாசிப்பதின் சுகமே தனி.

கிழக்கு கடற்கரை சாலை

கிழக்கு கடற்கரை சாலை

கிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதே கண்களுக்கு விருந்து அளிக்கும் ஒரு சுவையான அனுபவம் தான். இருபுறமும் வயல்வெளிகள், மலைகள், வழியில் இருக்கும் சிற்றூர்கள், கடலில் கலக்கும் ஆறுகள், எதிர்படும் கடல்நீர் ஓடைகள் இவை அனைத்தும் கண்கொள்ளகாட்சிகள்.

தென்னகத்தின் கிராமப்புறங்களின் அழகே அழகு. பைக் பயணமும் நல்ல ஒரு இனிமையான அனுபவத்தை தரும்.

PC: Karthik

செங்கல்பட்டு கிராமம்.

செங்கல்பட்டு கிராமம்.

சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள வண்ணமிகு செங்கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பாடாலாத்திரி நரசிம்மர் கோயில் தொன்மையான பிரசித்தி பெற்ற திருக்கோயில். வழியில் உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை வழங்க பல உணவகங்கள் உள்ளன.

PC: Sarath Kuchi

முதலியார்குப்பம்

முதலியார்குப்பம்

அடுத்ததாக வருவது முதலியார்குப்பம் மற்றும் உடையுர் ஏரி. இங்கு நீர் சருக்கு, நீர் சருக்கு ஸ்கூட்டர் விளையாட்டு வசதிகளும் உள்ளது. மேலும் இங்கே உள்ள பறவைகள் சரணாயத்தில் பலவித வெளி நாட்டு பறவைகளிய கண்டு ரசிக்கலாம்.

PC: Prabhakaran Govindarajan

 கும்பகோணம்

கும்பகோணம்

அடுத்த நிறுத்தம் கும்பகோணத்தில் தான். காவிரியும் , அரசலாறும் இருபுறமும் அழகு செய்ய நம் பராம்பரியத்தை பறைசாற்றும் இடம். சோழர் காலத்தில் கல்விக்கு முதன்மை இடமாக இருந்து மட்டுமில்லாமல் ஆங்கிலேயர் காலத்திலும் ஐரோப்பிய மற்றும் நமது இந்து முறைகல்விக்கான சிறந்த இடமாக விளங்கியது.

இங்கு பெருமளவு நெல் விவசாயம் தான். நெல் வயலின் பச்சை கம்பள விரித்த அழகும், வீசும் மெல்லிய தென்றலும், உயர்தோங்கிய தென்னை மரங்களும் டெல்டா பகுதியின் பிரத்தேயக மரங்களும் உண்மையில் உங்கள் உயிரோடு ஒட்டி உறவாடும். இங்கு எண்ணற்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன.

PC: Nagarjun Kandukuru

 ஐரவதிஸ்வரர் ஆலயம்

ஐரவதிஸ்வரர் ஆலயம்


முதலில் ஐரவதிஸ்வரர் ஆலயத்தை பற்றி பார்ப்போம். இந்த கோயில் யூனெஸ்கோ-ஆல் உலக தொன்மையான பராம்பரிய சின்னமாக அறிவிப்பட்டுள்ளது. சோழர்கால கட்டியமைப்பு பாணியில் கட்டப்பட்டுள்ள அமைந்துள்ள வேத, புராண கால தெய்வங்களின் சிற்பங்கள் விஜயநகர மற்றும் சோழற்கால பேரரசுகளின் புகழை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது.

PC: Arian Zwegers

ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்

ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்

ஆதி கும்பேஸ்வரர் ஆலய சோழர்கால கட்டியமைப்புக்கு சான்றாக, பல கோபுரங்களை கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயம் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. அருகிலுள்ள சாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணி பெருமாள் மற்ற்ம் லக்ஷ்மி தாயார் சன்னதிகள் அமைந்துள்ளன.

இதை தவிர உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம் கோவில், சுவாமிமலை, நாகேஸ்வரம் கோவில்களை தவறவிடாமல் போய் பாருங்கள்.

PC: Varun Shiv Kapur

மகாமக குளம்

மகாமக குளம்

உலக புகழ் பெற்ற மகாமக குளம் தமிழகத்திலேயே பெரியகுளமாகும். இந்த குளத்திற்குள் 21 ஊற்றுகளும், 8 கிணறுகளும் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் தான் மகாமகம் சிறப்பாக கொண்டாட படுகிறது.

PC: Melanie M

சாரங்கபாணி கோவில்

சாரங்கபாணி கோவில்


இங்கு விஷ்ணு கோவிலில், பெருமாள் எட்டு கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வராக அருள்புரிகிறார். கோவிலின் கம்பீரமும், வடிவமைப்பும் உங்களை ஆன்மிக அனுபவத்தில் திளைக்க செய்யும்.

மற்றபடி கும்பகோணத்தை சுற்றிலும் பலவகையான சிற்றுண்டி கடைகளும் பெரிய ஓட்டல்களும், தென்னிந்தியா உணவு வகைகளை அள்ளி தருகின்றன. குறிப்பாக கும்பகோணத்து கடப்பா, இதன் சுவையே அலாதி. இட்லிக்கும் தோசைக்கும் செம்ம காம்பினேஷன்.

கும்பகோணம், விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் சோழ பேரரசுகளின் கட்டிடகலை நிபுணத்துவத்தை தாங்கி நின்று, இன்றும் நம்மை அவற்றின் சிறப்பை உணரவைக்கிறது. இந்த இனிய சுற்றுலா தங்களுக்கு மனஅமைதி தருவதுடன், உங்கள் உள்ளுணர்வுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

அப்போ அடுத்த வீக் எண்ட் கும்பகோணம் போக ரெடியா!!!!!

PC: Arian Zwegers

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X