Search
  • Follow NativePlanet
Share
» »TTDC ஏற்பாடு செய்யும் சென்னை to புதுச்சேரி ஒரு நாள் டூர் - சுற்றிப்பார்க்கும் இடங்கள், போட்டிங்!

TTDC ஏற்பாடு செய்யும் சென்னை to புதுச்சேரி ஒரு நாள் டூர் - சுற்றிப்பார்க்கும் இடங்கள், போட்டிங்!

சென்னையில் இருக்கும் மக்களுக்கு இரண்டே மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள புதுச்சேரி, சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலமாகும். இவ்வளவு பக்கத்தில் இருந்தாலும் கூட நம்மில் பலர் இன்னும் சரிவர முழுதாக புதுவையை சுற்றிப் பார்த்து இருக்க மாட்டோம். வீட்டில் உள்ள அனைவரையும் கார் அல்லது தனி வாகனத்தில் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று சுற்றி காமிக்க நிறைய செலவாகும் என்ற யோசனையா? ஆனால் அதிக செலவில்லாமல் ஒரே நாளில் புதுவையை சுற்றிப் பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கு கழகம் (TTDC) ஒரு நாள் சுற்றுலாவை நீண்ட நாட்களாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஒரு நாள் சுற்றுலாவை புக் செய்தால் போதும், ஏ.சி பேருந்தில் புதுவையின் அணைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ருசியான உணவு சாப்பிட்டுவிட்டு, போட்டிங் செய்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பலாம்! இந்த அசத்தலான சுற்றுலாவை எப்படி புக் செய்வது? கட்டணம் என்ன என்று பார்ப்போமா?

ttdccover

அனைவர்க்கும் பிடித்த புதுச்சேரி

வண்ணமயமான பல கடற்கரைகள், அமைதியான ஆசிரமம், கண்ணை கவரும் பிரெஞ்சு கட்டிடங்கள், சொக்க வைக்கும் கஃபேக்கள் மற்றும் பப்கள், எல்லா வயதினருக்கும் ஏற்ற ஷாப்பிங், அரிக்கன்மேடு ASI சுற்றுலாத் தலம், எல்லா தரப்பினரையும் தன வசம் ஈர்க்கும் ஆரோவில், புதுவையைச் சுற்றியுள்ள அழகான கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் என புதுச்சேரி எல்லா தரப்பினருக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. குறிப்பாக வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுவை மக்கள் கூட வீட்டை விட்டு வெளிவர யோசிக்கின்றனர். காரணம் அந்த அளவுக்கு புதுவையை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம்!

pondicherry

TTDC ஏற்பாடு செய்யும் ஒரு நாள் சுற்றுலா

பெரும்பாலான மக்கள் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்காக பயணம் செய்கின்றனர். அதிக அளவு மக்கள் பயணம் செய்வதால் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்கிறது. இந்த சுற்றுலாவின் சிறப்பம்சம் என்ன தெரியுமா, இது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதனால் நீங்கள் வேலையில் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

chennai2

சுற்றுலாவில் என்னவெல்லாம் வருகிறது?

1. நீங்கள் காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்புவீர்கள்.

2. ஏ.சி பேருந்தில் டிவி பார்த்துக் கொண்டே ஆனந்தமாக பயணிக்கலாம். 9.00 மணிக்கெல்லாம் புதுவையை அடைந்து விடுவீர்கள்.

3. அங்கே நீங்கள் முதலில் உலகப்புகழ்பெற்ற ஆரோவில் நகரத்தை சுற்றிப் பார்ப்பீர்கள்.

4. அடுத்ததாக புதுவையின் புகழ்பெற்ற அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்வீர்கள்.

5. பின்னர் வரலாறு நிறைந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொல்லுவீர்கள்.

6. புதுவை கடற்கரைக்கும், புதுவை அருங்காட்சியகத்திற்கும் அடுத்ததாக அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

7. பிரெஞ்சு கட்டிடக்கலையை ரசித்த பின்னர் அங்கே நீங்கள் ஷாப்பிங்கில் ஈடுபடலாம்.

8. பின்னர் அங்கிருந்து பேருந்து பபுறப்பட்டு உங்களை சென்னைக்கு வரும் வழியில் இருக்கும் முதலியார்குப்பம் படகு குழாமிற்கு அழைத்து வரும்.

9. அங்கு போட்டிங் முடிந்த கையோடு நீங்கள் சென்னைக்கு திரும்பி விடுவீர்கள்.

10. காலை 6 மணிக்கு தொடங்கும் சுற்றுலா இரவு 8 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புவோர்க்கு இது தான் பெஸ்ட் ஆன சாய்ஸ்.

marinachennai

கட்டண விவரங்கள்

ஏ.சி பேருந்து கட்டணம் ஒரு ஆளுக்கு ரூ.1020 ஆகவும், சாதாரண பேருந்தின் கட்டணம் ரூ.850 ஆகவும், வோல்வோ ஏ.சி பேருந்தில் கட்டணம் ரூ.1300 ஆகவும் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தில் எல்லா இடத்திற்கும் செல்லும் நுழைவுக் கட்டணம், போட்டிங் கட்டணம் ஆகியவை அடங்கும். உணவை நாம் நம் செலவில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் புதுவையில் பலதரப்பட்ட உணவகங்கள் இருப்பதால், புதிதாக ருசியாக சாப்பிட இது ஒரு வாய்ப்பளிக்கிறது.

இந்த டூருக்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

More News

    Read more about: ttdc pondicherry chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+