Search
  • Follow NativePlanet
Share
» »அந்த கொண்டாட்டத்துக்கு ஏன் அவ்ளோ தூரம் போய்கிட்டு இதோ நம்ம ஊர்லயே பண்லாமே!

அந்த கொண்டாட்டத்துக்கு ஏன் அவ்ளோ தூரம் போய்கிட்டு இதோ நம்ம ஊர்லயே பண்லாமே!

இளைஞர்கள் கொண்டாடி கூத்தடித்த காலம் முடிந்து பொறுப்புகள் கையாளவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதாங்க.. திருமணம் ஆகபோகுதுனா அப்படித்தானே...

சுதந்திரப் பறவையாய் திரிந்த உங்களுக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் சரியாகும்னு வீட்டிலுள்ள சீனியர் சிட்டிசன்ஸ்லாம் சேர்ந்து முடிவு பண்ணி கல்யாணத்த பண்ணி வச்சிடலாம்னு ஏற்பாடு பண்ணுவாங்க.

நீங்களும் எவ்ளோநாள்தான் சிங்கிளாவே இருக்குறது மிங்கிள் ஆகவேண்டியதுதான்னு ஓகே சொல்லிடுவீங்க. இல்லைனா உங்க பல வருட தெய்வீக காதலுக்கு வீட்ல சம்மதம் வாங்கி திருமண நாளை எண்ணிக்கொண்டிருப்பீங்க..

அட அதுவும் இல்லையா.. 2018ல கூட சிங்கிளாத்தான் இருப்பீங்களா. சரி உங்க நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடலாம்ல.. என்ன பாங்காக்கா.. எதுக்கு அதான் நம்ம ஊர்லயே இருக்கே வாங்க பாக்கலாம்.

கோவா

கோவா

ஒவ்வொரு முறை சென்றாலும் திரும்பி திரும்பி வரவழைக்கத்தூண்டும் இடமான கோவா இந்தியாவின் பேச்சுலர் பார்ட்டி தலைமை மையம்னே சொல்லலாம்.

உல்லாசம், உற்சாகம், விளையாட்டு, கேளிக்கை, கொண்டாட்டம் என எல்லாவற்றையும் நண்பர்களுடன் களித்து வர சிறந்த இடம் கோவா தானுங்களே.

நாட்டுப்புற கடற்கரை பகுதிகள்,மந்தவி நதி, கடற்கரை சுற்றுலாத் தளங்கள் என ஆட்டம் போட்டு வரலாம். பேச்சுலர் பார்ட்டினா சும்மாவா..

இதுவரைக்கு வாழ்வில் அனுபவிக்காத மொத்த சந்தோசத்தையும் அப்ப அனுபவிச்சிறனும்னு பலர் பேசிக்குறத நா கேட்டுருக்கேன்.

Photo Courtesy: Tutu Djs

 நாசிக்

நாசிக்

அது என்ன நண்பர்கள் கூட மட்டும்தான் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடனும்னு ஏதும் சட்டம் இருக்கா என்ன.

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கேர்ள் பிரண்டும் பேச்சுலர்தானுங்களே..

உங்கள் காதலியுடன் அட்டகாசமாக ஒரு பேச்சுலர் பார்ட்டி கொண்டாட நாசிக்குக்கு போங்க.

உங்கள் நண்பர்களுடனும் போக ஏற்ற இடமாக இது உள்ளது.

மது எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது. தயாரிப்பு முறைகள், பாட்டில் அடைக்கும் பேக்கிங்க் முறைகள் உட்பட பலவற்றை கற்றுக்கொள்ளவும் இங்கு முடியும்.

நீங்க ரொமேன்டிக்னு யாராச்சும் சொல்லிருக்காங்களா. அப்படி இல்லைனாலும் நாசிக் போங்க உங்கள அது ரொமான்டிக் ஹீரோவா மாத்திடும்.

Photo Courtesy: Arjun Shekar

பெங்களூரு

பெங்களூரு

ஐடி மக்களின் ஒட்டுமொத்த அடையாளமாக விளங்கும் இந்தியாவின் ஐடி ஹப் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கு பேச்சுலர் பார்ட்டி கொண்டாட போனீங்கனு வைங்க.

அதிலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1 மணி வரைக்கும் கூட்டம் அலைமோதும். பூராவே இளைஞர்கள்தான். பெங்களூருவை சும்மா தத்தளிக்க விடுவாங்க.

உங்கள் நட்பு வட்டாரத்திலிருந்து குழுவாக சேர்ந்துகூட மகிழ்ந்திருக்க பெங்களூருவில் பல இடங்கள் உள்ளன. இதமான காற்றில் ஒரு பைக் ரைடு செல்வது பெங்களூருவில் சிறந்ததாக கருதப்படுகிறது.

Photo Courtesy: Ashwin Kumar

மும்பை

மும்பை

கனவுகளின் நகரம் என்று அழைக்கப்படும் மும்பை பேச்சுலர் பார்ட்டிக்கான சிறந்த நகரமாகும். அங்கு இரவுப் பறவைகளுக்காக சிறந்த பொழுதுபோக்கும் தளங்கள் எக்கச்சக்கம் உள்ளன.

உங்கள் காதலி/ காதலனுக்கு சிறந்த ருசியான உணவுகளை அனுபவிக்க ஏற்ற இடமாக உள்ளது இந்த மும்பை மாநகரம்.

உயரமான கட்டிடங்களில் டின்னர் சாப்பிட்டுக் கொண்டே நகரத்தின் அழகை ரசிப்பதுலாம் இந்தியாவில் அதிகம் வேறெங்கும் நிகழமுடியாத தருணமாகும்.

Photo Courtesy: AER

 பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

கடற்கரையின் காதலில் உங்கள் காதலிக்கு சிறந்த பேச்சுலர் பார்ட்டி கொடுக்க பாண்டிச்சேரி சிறந்த இடமாகும். கோவா மாதிரியான சூழல் இருப்பதாலும், செலவு குறைவு என்பதாலும் இந்த இடம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அதிலும் உங்கள் நண்பர்கள் பாண்டிச்சேரி என்றவுடன் பரபரத்துக்கொண்டு தயாராகிவிடுவார்களே.. சரி ஒரு டூர் போய்ட்டு வந்துடவேண்டியதுதானே.

Photo Courtesy: Sarath Kuchi

 அந்தமான் நிகோபார்

அந்தமான் நிகோபார்

இந்த தீவுகளில் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடுவது சற்று செலவானதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அவ்வளவு செலவு ஒன்றும் ஆகிவிடாது.

உங்கள் காதலியுடன் பொழுதை நன்றாக கழிக்கவும், மகிழ்ந்திருக்கவும் ஒரு நான்கு நாள் சுற்றுலா சென்றுவாருங்கள்.

Photo Courtesy: Arun Katiyar

கோகர்னா

கோகர்னா

கூட்டமும் ஆட்டமும் உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லையா. தனிமையில் இனிமை காண வேண்டுமா. கோவா பக்கத்துலேயே கர்நாடக மாநிலத்தின் கோகர்னா உள்ளதே.

உங்கள் மனம்விரும்பியவருடன் இணைந்திருக்க சிறப்பான இடம் இந்த கோகர்னா கடற்கரைதான்.

அருகிலேயே பல கடற்கரைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Courtesy: Jo Kent

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more