Search
  • Follow NativePlanet
Share
» »அதிகம் பேசப்படாத அற்புத இடங்கள் இந்தியாவில் எங்கிருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

அதிகம் பேசப்படாத அற்புத இடங்கள் இந்தியாவில் எங்கிருக்குன்னு தெரிஞ்சுக்கனுமா? இதைப் படிங்க!!

By Staff

இந்தியாவில் காணப்படும் எண்ணற்ற இடங்களின் மூலமாக நாம் பலவற்றை ஆராய்கிறோம், அமைதி அடைகிறோம், கற்கிறோம். இங்கே காணும் இடங்களுள் சில பொதுவான இடங்களை கொண்டிருந்தாலும், இன்றும் அந்த இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் சென்று வந்துகொண்டு தான் இருக்கின்றனர். அவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிம்லா மற்றும் ஊட்டியை நம்மால் கூற முடிகிறது. இந்த இரண்டு இடங்களும் மிகவும் பிரசித்திபெற்று விளங்க, கூட்டம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் போல் என்னேரமும் சூழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், இங்கே நம்மால் அப்படி பார்ப்பதற்கு அதிகம் ஏதும் இருப்பதுமில்லை. குறிப்பாக ஊட்டியில் நாம் ரசிக்க கூடிய இடங்கள் குறைவெனினும் கூட்டம் கூட்டமாக வந்து குதூகலித்து சென்றுகொண்டுதான் உள்ளனர்.

நிறைய பேர், இதுவரை தன் வாழ்வில் பார்த்திராத இடங்களையே தேடி கண்டுபிடித்து சென்று பார்க்க வேண்டுமென மனதளவில் ஆசைகொள்கின்றனர். அவ்வாறு ஒரு இடத்தில் தன் நேரத்தை செலவிடுவதை மிகவும் மதிப்புள்ளதாகவும் கருதுகின்றனர். அப்பேற்ப்பட்ட ஓரு இடம் தான், மத்திய பிரதேசத்தில் காணப்படும் ஓர்ச்சாவாகும். இங்கே காணப்படும் முகலாய கட்டிடக்கலைகளும், பெரிய ஆலயங்களும், கோட்டைகளும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வரலாற்று பிரசித்திபெற்று நிற்கிறது.
ஓய்ந்து போன விடுமுறை இடங்களென நாம் நினைப்பதால், ஒரு சில இடங்கள் இன்று மிகவும் மக்களால் பார்க்கப்படும் ஒரு இடமாக மாறிவிட்டது. ஆம், இன்று., மக்கள், கூட்டம் அதிகமிருக்கும் ஒரு இடத்தைவிட குறைவாக வந்து போகும் இடத்தை தான் அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு காணப்படும் இடங்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இதோ வந்துவிட்டது. ஆம், அழகிய நிலப்பரப்புகளும், அமைதியான சூழலையும் உங்களுக்கு தர, புதியதோர் அனுபவத்தை நீங்கள் பெற வேண்டிய அற்புதமான இடங்கள் தான் இவை.

இப்பொழுது, மக்கள் கூட்டம் குறைவாக வந்து போகும் இடங்கள் எவை எல்லாம் என்பதை நாம் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாமே.

சிம்லிபால்:

சிம்லிபால்:


ஒடிஸாவில் காணப்படும் சிம்லிபால், பச்சை பசேல் எனும் காடுகளால் சூழ்ந்து காணப்படுவதோடு, சிம்லிபால் தேசிய பூங்காவையும், பரேஹிபனி வீழ்ச்சியையும் தலைமையாக கொண்டிருக்கிறது. இந்த தேசிய பூங்காவானது... இந்தியாவின் மூன்று அரிதான விலங்கினங்களின் வாழ்வாதாரமாக அமைந்து நமக்கு காட்சியளிக்கிறது. ஆம், புலி, ஆசிய யானை, காட்டெருமை ஆகியவற்றின் வாழிடமாக இந்த பூங்கா விளங்குகிறது. இதனை ரிசர்வ் பகுதியாக கருதப்படுவதால்...அதிர்ச்சியூட்டும் பல்லுயிரினங்களையும் நம்மால் இங்கே காண முடிகிறது. அத்துடன்...வேறுபட்ட நிலப்பகுதி, உகந்த கால நிலைகள், பொருத்தமான தாவரங்கள் ஆகியவையும் இங்கே அமைந்து நம் மனதை இதமாக்குகிறது.

Wiki GSD

 சோப்தா:

சோப்தா:


உத்தரகண்ட் மாநிலத்தில் காணப்படும் ஒரு சிறிய கிராமம் தான் இது. இந்த சோப்தா கிராமம், அழகிய முடிவற்ற சரிவுகளை கொண்டு, பசுமையான புல்வெளிகளால் சூழப்பட்டு ஒட்டுமொத்த அழகிய காட்சியை கண்களுக்கு தந்து குளிரூட்டுகிறது. இந்த பசுமை நிறைந்த புல்வெளியில் பயணம் செய்யும் ஒருவருக்கு, அது ஒரு அழகிய சாகச விளையாட்டு பயணமாக அமைந்து மனதை மெருகூட்டுகிறது. நீங்கள், மிகவும் அமைதியான மற்றும் சத்தம் அதிகம் இல்லாத இடத்தை தேடுவீர்களாயின், இங்கே சுற்றுலா கூடைகளை தூக்கி புல்வெளிகளில் வீசி விளையாடி மகிழலாம்.

Rajborah123

சம்பை:

சம்பை:

மிசோரம் மாநிலத்தில் காணப்படும் ஓர் அழகிய இடம் தான் இது. இங்கே வருவதனால்...துடிப்பான பழங்குடி கலாச்சாரத்தையும், மல்லிகை பற்றியும், என இன்னும் நிறையவே நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. இங்கிருந்து நாம் பார்க்க, மியான்மர் மலைகளின் சுவாசமுட்டும் அழகை ரசிப்பதோடு, சிறந்த கால நிலையையும் நம்மால் உணர முடிகிறது. இங்கே காணும் வண்ணமயமான காட்சிகள், சரிவான மலைப்பகுதிகளிலும் காண, அவற்றை திராட்சை தோட்டங்களும், பழ மரங்களும், கிவி தோட்டங்களும் நிறையவே சூழ்ந்திருக்கிறது.

Dheeraj Dwivedi

எத்திபொத்தாலா:

எத்திபொத்தாலா:

70 அடி உயரத்திலிருந்து காணும் அழகிய நீர்வீழ்ச்சி தான் இந்த எத்திபொத்தாலா ஆகும். மூன்று ஓடைகளான நக்கா வாகு, டும்மலா வாகு, சந்திரவனகா வாகு ஆகியவை சங்கமிப்பதால் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி, கிருஷ்னா நீர்வீழ்ச்சியில் சென்று கீழே சேர்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீர்கள், மத்தியில் நீர்ப்பரப்பை உருவாக்க, அதனை ‘முதலைகளின் விளைநிலம்' என்றழைப்பர்.

Trusharm512

 செம்ப்ரா:

செம்ப்ரா:


வயனாடு தொடர்ச்சியில் காணப்படும் ஒரு உயரமான சிகரம் தான் இந்த செம்ப்ராவாகும். இந்த உச்சி மாநாட்டை நாம் அடைய, சுமார் 15 கிலோமீட்டர்கள் நாம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த 15 கிலோமீட்டரை கடக்க, நமக்கு சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படுகிறது. இந்த பயணம், தேயிலை தோட்டங்களில் காணும் பசுமையான இலைகளின் வழியே செல்ல, அந்த காட்சி நம் கண்களை வெகுவாக கவர்கிறது. அந்த இடத்தை காணும் நம் கண்கள், சிறந்ததோர் இடத்தை கண்டதற்கான உணர்வினை பெற்று மகிழ்கிறது. செல்லும் வழியின் மத்தியில் காணப்படும் ஏரியானது...இதய வடிவத்தில் அமைந்து நம் மனதை வருடுகிறது. அதோடு, இந்த ஏரி என்றுமே வற்றாது என்பதையும் நம் மனதில் புகுத்தி நம்பவைக்கிறது.

P maneesha

 அரக்கு பள்ளத்தாக்கு:

அரக்கு பள்ளத்தாக்கு:

எல்லா பக்கங்களிலும் அடர்ந்த காடுகள் சூழ்ந்திருக்க, இந்த மலைப்பாங்கான ஓய்வு இடம் விசாகப்பட்டினத்தில் அமைந்திருக்கிறது. சிறந்த காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்ற இந்த அரக்கு பள்ளத்தாக்கு, இயற்கை அழகால் எங்கும் சூழ்ந்து மனதை காட்சிகளோடு கட்டிப்போடுகிறது. இங்கே காணப்படும் பழங்குடியினரின் அருங்காட்சியகம் ஒன்று, பழங்குடியினரின் வாழ்க்கைமுறை என பலவற்றை நாம் தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது.

Jagannathsrs

பீதாகாட்:

பீதாகாட்:


ஜபால்பூர் நகரத்தில் காணப்படும் ஒரு பளிங்கு கோடுகள் தான் இந்த பீதாகாட். 100 அடி உயரத்தில் இருப்பக்கங்களிலும் உயர்ந்து காணப்படும் இந்த இடம், முழு நிலவு இரவின் போது அழகிய காட்சிகளை கண்களுக்கு தந்து நம்மை பெருமூச்செறிந்து வியப்புடன் நோக்க வைக்கிறது. அத்துடன், இங்கே நாம் காணும் காட்சிகள் புதியதோர் அனுபவத்தை நமக்கு தந்து, நகரவிடாமல் செய்கிறது.

Anshikasjv12 -

 கஜ்ஜியர்:

கஜ்ஜியர்:

ஒரு அமைதியான அழகிய மலை வாசஸ்தலம் தான் இந்த இடமாகும். ஆம், கஜ்ஜியட்டில் காணப்படும் தேவதாரு மரங்கள் சூழ்ந்த காடுகள் மத்தியில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம், பசுமையான புல்வெளிகள் அமைந்து மனதில் அமைதியை பொங்க செய்கிறது. அத்துடன் அரிதான காட்சிகளை தரும் சூழல் அமைப்புகளும் நம்மை நெகிழ செய்கிறது. ‘இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து' என்றழைக்கப்படும் இந்த கஜ்ஜியர், பல சாகச விளையாட்டுக்கள் நிறைந்த ஒரு இடமாகவும் விளங்கி. மேலும் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கிறது.

Sandeep Bra

அன்ட்ரெட்டா:

அன்ட்ரெட்டா:

கங்க்ரா மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறிய கிராமம் தான் இந்த அன்ட்ரெட்டாவாகும். இதனை ‘கலைஞர்களின் கிராமம்' என்றும் அழைப்பர். இங்கே காணப்படும் அன்ட்ரெட்டா மட்பாண்டமும், கைவினைச் சங்கமமும் நுண்ணிய ஓவியங்களுக்கும், மட்பாண்ட காட்சிகளுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய குக்கிராமத்தை, கலை மீது காதல் கொண்ட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். மேலும், நீங்கள் ஏதேனும் உத்வேகத்தை தேடும் ஒருவராயின், கண்டிப்பாக இந்த இடத்திற்கு வர மறக்காதீர்கள்.

Ekabhishek

லெபாக்ஷி:

லெபாக்ஷி:

ஆந்திர பிரதேசத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் காணப்படும் ஒரு சிறிய குக்கிராமம் தான் இந்த லெபாக்ஷி. இந்த கிராமத்தில் அனைவராலும் அறிந்த ஒரு ஆலயமிருக்க, அது வீரப்பத்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என்பது சிவபெருமானுக்காக வடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மூலம் நமக்கு தெரிகிறது. சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில், இராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை, ஆலயத்தின் மேல்புறத்தில் செதுக்கியதின் மூலமாக நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.

Santosh Badiger

https://commons.wikimedia.org/wiki/Category:Lepakshi#/media/File:Shivalinga_at_Lepakshi.jpg

Read more about: travel places

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more