Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

By Naveen

இப்பெல்லாம் கல்யாணத்துக்கான ஏற்பாடுகளை செய்வதை காட்டிலும் தலைவலியாய் இருப்பது திருமணதிற்கு பிறகு எங்கே தேனிலவு செல்வது என்பது தான். எங்கேனும் மலை பிரதேசத்திற்கு செல்வதா, கடற்கரைகள் இருக்கும் இடத்திற்கு செல்வதா, இதற்க்கு முன் சுற்றுலா சென்ற இடத்திற்கே செல்வதா அல்லது புதிதாக எங்காவது செல்லலாமா என பல குழப்பங்கள் எழுவது இயல்பு.

இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

அப்படியொரு குழப்பத்தில் இருக்கிறீர்களா நீங்கள். வாருங்கள் இந்தியாவில் இருக்கும் இன்னும் அதிகம் பிரபலமாகாத அதே சமயம் தேனிலவு செல்ல அற்புதமான இடங்கள் எவை எவை என்பதை தெரிந்து கொள்வோம். அருமையான ஒரு மலைப்பிரதேசம், பேரழகு வாய்ந்த கடற்க்கரை என உங்கள் ரசனைக்கு ஏற்ற இடங்களான இவற்றிற்கு நிச்சயம் ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

1. தவங், அருணாச்சல பிரதேசம்:

இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

Photo: Kunal Dalui

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் தவங் என்னும் பேரழகு வாய்ந்த நகரம் தனிமையும் அமைதியும் விரும்புகின்றவர்களுக்கு மிக ஏற்ற இடமாகும். திபெத் மற்றும் புட்டான் நாடுகளின் எல்லையின் அருகில் அமைந்திருக்கும் இங்கு கோடை காலத்தில் பசுமை போர்த்திய மலைகளையும், குளிர் காலத்தில் காணுமிடமெல்லாம் வெண்பனி போர்த்தியும் பேரழகுடன் காணப்படுகிறது. இன்னும் வணிகமயமாகாத, அசுத்தமற்ற இடமான இங்கு வருவது நிச்சயம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் .

2. கத்மட்:

இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

Photo: Sankara Subramanian

லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஓரழகிய தீவு தான் கத்மட். இங்கு தான் இந்தியாவிலேயே மிக சுத்தமான கடற்க்கரை உள்ளது. வெள்ளை மணல் கடற்கரையும் 30 அடி ஆழம் வரை பார்க்க கூடிய அளவிற்கு தெளிவான நீரினை உடைய கடல் என வெளி உலகத்துடன் முற்றிலும் தொடர்பற்று காதலை கொண்டாட நினைப்பவர்கள் தாரளமாக இங்கே வரலாம்.

3. சக்ரதா:

இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

Photo: Nipun Sohanlal

வெறுமனே இடங்களை சுற்றிப்பார்ப்பது மட்டும் போதாது அதை தாண்டி ஏதேனும் வேண்டும் என நினைப்பவரா நீங்கள். தேனிலவுக்கு சென்று விட்டு அங்கே நம் மனைவியுடனோ கணவருடனோ சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். உத்ரகண்ட் மாநிலத்தில் இருக்கும் சக்ரதாவில் இயற்கையை ரசிப்பதோடு மட்டும் இல்லாமல் பாராசூட்டில் பறக்கலாம், பாறைகளில் ஏறலாம், மலைகளில் சாக பைக் சவாரி செய்யலாம், தொங்கும் பாலத்தில் நடக்கலாம், ஆற்றில் கயாக்கிங் செய்யலாம். கோல்ப், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும் கலந்து கொள்ளலாம். இதற்க்கு மேல் இங்கே செல்ல வேறேதும் காரணம் வேண்டுமா என்ன?.


4. மலபே:

இந்தியாவில் இன்னும் அதிகம் பிரபலமாகாத அற்புதமான ஹனிமூன் ஸ்தலங்கள்

Photo: Arun Keerthi K. Barboza

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் இன்னும் அதிகம் வெளி உலகத்திற்கு தெரியாத இடம் இந்த மலபே ஆகும். அலைகள் எழாத அமைதியான ஆறு, அமைதியான சுத்தமான கடற்க்கரை என எந்த தொந்தரவும் இல்லாமல் தேனிலவை கொண்டாட நினைப்பவர்கள் இங்கே வரலாம். இது பெங்களுருவில் இருந்து 408 கி.மீ தொலைவில் இருக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X