Search
  • Follow NativePlanet
Share
» »நீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்!

நீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்!

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழ

By Udhaya

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு. 12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. வாருங்கள் இதுவரை நீங்கள் காணாத ஊட்டியை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறோம்.

நீங்கள் இந்த இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறீர்களா?

நீங்கள் இந்த இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறீர்களா?


கெட்டை பள்ளத்தாக்கு காட்சிமுனை

கிண்ணக்கோரை காட்சி முனை

43 கொண்டை ஊசி வளைவுகள்

தேனாடு

கொடநாடு

கெட்டி

ஓ பள்ளத்தாக்கு

பைக்காரா

கவரத்தி

லவ்டேல்

ஊசிமலை காட்சி முனை

மசின குடி

என நிறைய இடங்கள் காண்பதற்காகவே இருக்கின்றன. இவற்றை குறித்து இந்த பகுதியில் காண்போம்.

Shareef Taliparamba

 கெட்டை பள்ளத்தாக்கு காட்சிமுனை

கெட்டை பள்ளத்தாக்கு காட்சிமுனை

கெட்டை எனும் பகுதி தைசோலையிலிருந்து தொட்ட கொம்பை எனும் பகுதிக்கு பயணிக்கும்போது இடையில் வரும் பகுதியாகும். இது மிக அழகான பகுதி என்றாலும் சற்று ஆபத்தும் நிறைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அழகென்றாலே ஆபத்து நிறைந்து இருப்பது சகஜம்தானே. இங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பார்க்கும்போது மிக அழகான காட்சி கண்முன் நிற்கிறது. அந்த இடத்தை காட்சிமுனையம் என்று அழைக்கிறார்கள்.

ஊட்டிக்கு புதியதாக வருகை தருபவர்களுக்கு இந்த இடம் தெரியாது. அதனால் ஊட்டியைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு பயணிக்க விரும்புபவர்கள் இங்கு வரும் வழியில் இதை கண்டு மிகுந்த காதல் கொள்கிறார்கள். சாலை எண் 1071ல் வருகை தருபவர்கள் இதை கவனிக்கலாம்.

Prateek Rungta

கிண்ணக்கோரை காட்சி முனை

கிண்ணக்கோரை காட்சி முனை

கிண்ணக்கோரை எனும் பகுதி தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது மிகவும் அழகான பகுதியாக உள்ளது. இங்கு கிராம மக்கள் கொஞ்சம்பேர் வசித்து வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் என்று பெரியதாக யாரும் இல்லாத இந்த இடத்திற்கு அவ்வப்போது மக்கள் வருகை தருவதைத் தொடர்ந்து இந்த இடம் தற்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக அமைந்துள்ளது.

இதன் அருகே காட்சி முனை ஒன்றும் உள்ளது. மேல்குண்டா - கிண்ணக்கோரை - அர்த்த நீலகிரி சாலையில் செல்லும்போது நீங்கள் கிண்ணக்கோரையை அடைந்து அங்கிருந்து காட்சிமுனையை தொட முடியும். அந்த காட்சிகள் என்றும் மறவாமல் உங்கள் நினைவில் நீங்காத ஒன்றாய் அமையும்.

Muneef Hameed

43 கொண்டை ஊசி வளைவுகள்

43 கொண்டை ஊசி வளைவுகள்

பொதுவாக கொண்டை ஊசி வளைவுகள் அவ்வளவாக சுற்றுலாப் பயணிகளால் பெரிய சுற்றுலா அம்சமாக பார்க்கப்படாது. ஆனால் திரில்லிங்க் பயணத்துக்கு செல்பவர்களுக்கு கொண்டை ஊசி வளைவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். அதிலும் பைக்கில் செல்பவர்களுக்கு மிகவும் இந்த கொண்டை ஊசி வளைவுகள் மனதுக்கு நெருக்கமானதாக அமையும். இங்கிருக்கும் பகுதிகள் மிகவும் ரிஸ்க்கானதாக இருப்பதாலும், மேலும் இந்த இடத்தில் மிகக் கவனமாக செல்லவேண்டும் என்பதாலும், நம் வாசகர்களுக்கு இதை எச்சரிக்க கடமைப் பட்டுள்ளோம்.

Anoop Kumar

தேனாடு மற்றும் கொடநாடு

தேனாடு மற்றும் கொடநாடு

தேனாடு நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஊட்டியிலிருந்து 32கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கெங்காரை 4 கிமீ தூரத்திலும், நெடுங்குளம் 8 கிமீ தூரத்திலும், கொடநாடு 11 கிமீ தூரத்திலும், கோத்தகிரி 14 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு மிக அழகான காட்சிகளைக் கொண்ட இடங்கள் இருக்கின்றன.

இது கிராமம் என்பதாலும், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இன்னும் வருகை தரவில்லை என்பதாலும் மிகவும் அழகானதாக இன்றளவும் காணப்படுகிறது.

Pallab Kabir

 தேவலா

தேவலா

தேவலா எனும் பகுதி தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இதை பகுதி என்று சொல்வதைவிட காடு என்றுதான் சொல்லவேண்டும். மசினகுடிக்கு எப்படி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து செல்கின்றனரோ அதைப் போல இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இங்கு செல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பான இடம் இதுவாகும். அப்படி இந்த இடத்துக்கு எப்படித்தான் போறதுனு நீங்க கேக்குறது புரியுது.. வாங்க போகலாம்.

GoDakshin

 எப்படி செல்வது

எப்படி செல்வது

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் ஊட்டிக்கு அருகேதான் அமைந்துள்ளது. இது பெரும்பாலானோரால் கேரள வனப்பகுதி என்று நம்பப்பட்டாலும், இது தமிழகத்தின் பகுதிதான். கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி வழியாக தேவலாவை அடையமுடியும். அல்லது கோயம்புத்தூர் பாலக்காடு மன்னார்க்காடு நீலாம்பூர் வழியாகவும் இந்த ஊரை அடைய முடியும்.

Shareef Taliparamba

சுற்றுலா செல்வோம்

சுற்றுலா செல்வோம்

தேவலா மற்ற இடங்களைப் போல் இருந்தாலும், இதற்கு ஒரு தனித்தன்மை உண்டு. இங்கு சுற்றுலாப் பயணிகள் என நிறைய பேரைக் காணமுடியாது. அழகின் மொத்த உருவமே உங்கள் கண் முன் இருப்பதாக தோன்றும் இந்த இடத்தை நீங்கள் பார்க்கும்போது. இந்த காடுகளின் நடுப்பகுதிகளில் சில விலையுயர்ந்த விடுதிகளும் வசதியான விடுதிகளும் இருக்கின்றன. அவற்றை தங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், அருகில் காணவேண்டிய இடங்களுக்கு செல்வது சிறந்தது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் சிறப்பான சுற்றுலாவுக்கு வழிவகுக்கும் கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் இருப்பதால் இயற்கையாகவே கோடைக்கு உகந்த நிலப்பரப்பாக இருக்கிறது.

Jerome Bon

அருகிலுள்ள கிராமங்கள்

அருகிலுள்ள கிராமங்கள்

பண்டலூர், உப்படி எனும் மலைக்கிராமங்கள் இதன் அருகே இருக்கின்றன. நீங்கள் நல்ல சுற்றுலாவை அனுபவிக்கு இங்கு செல்லமுடியும். ஊட்டியிலிருந்து தேவாலா செல்லும் வழியில் நடுகனி எனும் ஊர் இருக்கிறது. இங்கு சுற்றிப்பார்க்க சில இடங்கள் பசுமையாக அமைந்திருக்கிறது. மேலும் இங்கு தோட்டம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களின் உதவி கிடைத்தால் இங்குள்ள மலைப் பகுதியில் உச்சிக்கு சென்று பார்க்கலாம். எனினும் இதில் அனுபவம் இல்லாதவர்கள் செல்வது ஆபத்தானது. நமது வாசகர்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Greg Willis

மசினகுடி

மசினகுடி

தொடர் ஆக்கிரமிப்பால் பசுமை மறைந்து கான்கிரீட் காடாக மாறி வரும் ஊட்டி வார இறுதி நாட்களிலும், கோடை காலத்திலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மாசற்ற இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்கள் ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த மசினகுடிக்கு செல்லவேண்டும்.

மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

Faisal Akram

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X