Search
  • Follow NativePlanet
Share
» »வாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா ?

வாஜ்பாய் பிறந்த ஊருல என்னவெல்லாம் இருக்கு தெரியுமா ?

இந்திய அரசியல் கலத்தில் அழுத்தமான கால்தடத்தை படைத்த தலைவர்களுள் ஒருவரான அடல் பிகாரி வாஸ்பாய் பிறந்த ஊரின் சிறப்புகள் தெரியுமா ?

இந்திய அரசியல் கலத்தில் அழுத்தமான கால்தடத்தை படைத்த தலைவர்களுள் ஒருவர் அடல் பிகாரி வாஸ்பாய். வாஸ்பாய்ஜி என அன்புடன் அறியப்படும் இவர் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவரது ஆட்சிக்காலத்தில் தான் நான்கு வழி, ஆறு வழிச்சாலைகள் என பல திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இந்திய விடுதலையின் போது ஆங்கிலேயரிடம் அடிபணிந்தார் உள்ளிட்டு எந்த அளவிற்கு இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளனவோ அந்தளவிற்கு தனது ஆட்சிக் காலத்தில் சிறப்பான திட்டங்கள் மூலம் நற்பெயர்களையும் ஈட்டினார். அரசியலில் மூத்த தலைவரான இவர் பிறந்த ஊரில் என்னவெல்லாம் உள்ளது தெரியுமா ?

எங்கே பிறந்தார் தெரியுமா ?

எங்கே பிறந்தார் தெரியுமா ?


மத்திய பிரதேசத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் வரும் குவாலியர் என்னும் இடத்தில் பிறந்தவர் தான் நம் வாஜ்பாய். மாநிலத்தில் நான்காவது பெரிய நகரமாக உள்ள இப்பகுதிக்கு அடையாளமாக இருப்பதே பல பழமை வாய்ந்த கோவில்களும், பழமைவாய்ந்த அரண்மனைகளும் தான். வட இந்திய சாம்ராஜ்யங்களின் புகழ்பெற்ற நிர்வாக மையமாக திகழ்ந்த குவாலியர் கோட்டை இங்குதான் உள்ளது.

Shivangi Kushwah

ஈர்க்கும் குவாலியர்

ஈர்க்கும் குவாலியர்


இயற்கை எழில் காட்சிகள் என்றாலும் சரி, புராதானமிக்க தலங்கள் என்றாலும் சரி குவாலியர் அனைத்துத் தரப்பு பயணிகளையும் தன்வசம் ஈர்க்கும் வல்லமையினை கொண்டுள்ளது. அவற்றுள், குவாலியர் கோட்டை, மன் மந்திர் அரண்மனை, ஜெய் விலாஸ் மஹால் போன்றவை நிச்சயம் பயணிக்க வேண்டிய தலங்களாகும்.

YashiWong

குவாலியர் கோட்டை

குவாலியர் கோட்டை


மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரின் மையத்தில் அமைத்துள்ளது குவாலியர் கோட்டை. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இது இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளுல் ஒன்று என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. உயரமான விதானங்கள் கொண்ட கோபுரங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், கோட்டையினுள் கலைநயமிக்க ஓவியங்களுடன் காணப்படும் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலயம் என ஒரு நாள் முழுவதுமே இங்கே சுற்றி ரசிக்கலாம்.

Gyanendrasinghchauha...

ஹாத்தி பூல்

ஹாத்தி பூல்


குவாலியர் கோட்டையின் நுழைவு வாயில்களில் ஒன்றுதான் ஹாத்தி பூல். கோட்டையின் ஏழாவது நுழைவு வாயிலான இதன் வழியாக மான்சிங் என்னும் அரசலால் கட்டப்பட்ட மன்மந்திர் அரண்மனைக்கு எளிதாகச் செல்லலாம். ஒரு பெரிய யானை செல்லும் அளவிற்கு பெரிதாக இதன் நுவு வாயில் இருப்பதாலோ என்னவோ இந்தியில் ஹாத்தி பூல் என பெயரிடப்பட்டுள்ளது.

Aavindraa

ஜெய் விலாஸ் மஹால்

ஜெய் விலாஸ் மஹால்


ஜெய் விலாஸ் மஹால் என்னும் அரண்மனை 1809-ஆம் ஆண்டில் ஜியாஜி ராவ் சிதியா என்னும் அரசரால் கட்டப்பட்டதாகும். இத்தாலிய நாட்டின் கட்டிடக் கலையுடன் ஒத்திருக்கும் இது இத்தாலி மற்றும் பிரான்சிலிருந்து வரலழைக்கப்பட்ட கலைப் பொருட்கள் மலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த பொருட்களின் தொகுப்பு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Joash Robin Kale

திக்ரா அணை

திக்ரா அணை


எப்போதும், பரபரப்பாக காணப்படும் சுவாலியரில் கொஞ்சம் சத்தமின்றி சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் அது திக்ரா அணையாகத் தான் இருக்கும். நகரத்தில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இது குவாலியர் நகரத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் முக்கிய நீராதாரமாகும்.

Ameybarve27

முகம்மது கல்லறை

முகம்மது கல்லறை


சூஃபி துறவியான கவுஸ் முகம்மது என்பவரின் கல்லறை கி.பி 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க சுறுலாத்தலமாக உள்ளது. இதன் பிரம்மாண்டமும், கட்டிடக் கலை அம்சமும் நிச்சயம் இங்கே பயணிப்போரின் மனதை கொள்ளைகொண்டு விடும்.

Pavel Suprun

மன்மந்திர் கோட்டை

மன்மந்திர் கோட்டை


சித்திரங்களின் மாளிகை என உள்ளூர் மக்களால் அறியப்படும் இக்கோட்டையின் உள்ளே உள்ள சுவர்களின் வண்ணமயமான, இயற்கைக் காட்சிகள், வனப் பகுதி போன்ற ஓவியம், ராஜவம்சத்தினர் என பலவித ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இக்கோட்டையின் உள்ளே ஒரு சிறைச்சாலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kausik.dr

கூர்ஜரி மஹால்

கூர்ஜரி மஹால்


நாட்டில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகங்களில் பழமையான ஒன்று இந்த கூர்ஜரி மஹால். இங்கே, 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அக்காலத்து அரிய பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள், விலைமதிப்பற்ற மாணிக்க மணிகள், ஆபரணங்கள், சுடுமண் பொருட்கள், போர் ஆயுதங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் உள்ளிட்டவை அடங்கும்.

Abhishek727

லட்சுமிபாய் கல்லறை

லட்சுமிபாய் கல்லறை


ராணி லட்சுமி பாஸ் கல்லறை குவாலியரின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களிலு முக்கியத் துவம் வாய்ந்ததாக உள்ளது. புகழ்பெற்ற பெண் வீராங்கனையான ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் போர்த் திறனையும், அவரது வீரத்தினையும் நினைவு கூறும் விதமாக இது அமைந்துள்ளது. மேலும், இதனருகிலேயே அமைந்துள்ள ஜான்ஸி ராணியின் 8 மீட்டர் உயர சிலை இன்றும் அவரது கம்பீரத் தோற்றத்தினை கண்முன் நிறுத்துகிறது.

Dharmadhyaksha

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


குவாலியர் நகரின் மையத்தில் இருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் விமான நிலையம் அமைந்துள்ளது. டெல்லி, ஜெய்பூர், மும்பை, சென்னை என பல நகரங்களில் இருந்து இங்கே விமான சேவை இயக்கப்படுகிறது. டெல்லியில் சென்னை, டெல்லியில் இருந்து மும்மை ரயில் பாதைகளின் முக்கியமான சந்திப்பாக குவாலியர் உள்ளதால் ரயில்கள் மூலம் எளிதில் இதனை சென்றடையலாம்.

YashiWong

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X