» »வால்பாறையிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலா தளங்கள்

வால்பாறையிலும் அதை சுற்றிலும் இருக்கும் சுற்றுலா தளங்கள்

Written By: Udhaya

வால்ப்பாறையின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, நீரார் அணை, கணபதி கோவில், அன்னை வேளாங்கன்னி ஆலயம், சோலையார் அணை, புல் குன்று ஆகியவை அறியப்படுகின்றன. ஆனால் பெரும்பான்மையான காட்டுப் பகுதிகள் இன்னும் சுற்றுலாப் பயணிகளால் அணுக முடியாத இடத்தில் இருக்கின்றன.

மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக 'தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி' என்று வால்ப்பாறை அழைக்கப்படுகிறது. இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான சின்னக்கல்லாரை இதற்கு ஒரு உதாரணம். இவ்விடம் தோட்டங்களுக்கும், தேனீர் தொழிற்சாலைகளுக்கும், அணைகளுக்கும் பெயர்பெற்றதாக இருக்கின்றது.

தேனீர் தோட்டங்களின் வழியாக காலையில் நடைபயில்வது உங்கள் ஆன்மாவை இயற்கையின் மடியில் விழித்தெழச் செய்யும் அற்புத உணர்வு. இவ்விடத்தின் காட்டு வாழ்க்கையும், இயற்கை அழகும் புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

 வால்ப்பாறையை எப்படி அடைவது?

வால்ப்பாறையை எப்படி அடைவது?

சாலைவழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் வால்ப்பாறை நன்கு இணைக்கப்பட்டு இருக்கின்றது. வால்ப்பாறைக்கு நெருக்கமான விமானநிலையம், 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் விமானநிலையம்.
சாலை வழியாக வால்ப்பாறைக்கு செல்வது மிகவும் சுலபம். கோயம்புத்தூரில் இருந்து சொகுசு வாகனங்கள் ஏற்கக்கூடிய கட்டணத்தில் உங்களை வால்ப்பாறைக்கு அழைத்துச் செல்லும்.

வால்ப்பாறையின் பனிக் காலங்களிலும், மழைக் காலங்களிலும் குளிர் சற்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்தக் காலங்களிலும் நீங்கள் வால்ப்பாறைக்கு சுற்றுலா வரலாம். எனினும் கோடை காலங்களில் நிலவும் இதமான தட்பவெப்பநிலை சுற்றுலாவுக்கு மிகவும் பொருத்தமானது.

wiki

 பாலாஜி கோவில்

பாலாஜி கோவில்

வால்ப்பாறையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில், பெரிய காரமலை தேனீர் தொழிற்சாலையினால் சொந்தமாக நடத்தப்படுகின்ற, ஒரு தேனீர் தோட்டத்தின் உள்ளே பாலாஜி கோவில் அமைந்து இருக்கிறது.

இந்த தெய்வத்தை வழிபடுவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் இவ்விடத்திற்கு கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். பாலாஜி கோவில் வால்ப்பாறையில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்று. இது கோயம்புத்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

Thangaraj Kumaravel

 சின்னக்கல்லார் அருவி

சின்னக்கல்லார் அருவி

வால்ப்பாறை மலைப்பிரதேசத்தில் இருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவில் சின்னக்கல்லார் அருவி அமைந்து இருக்கிறது. இவ்விடம் நாட்டிலேயே இரண்டாவது அதிகமான மழைப்பொழிவை பெருவதால், இது தென் இந்தியாவின் சீராப்புஞ்சி என்று அழைக்கப்படுகின்றது.

சுற்றிலும் பச்சைப்பசுமையினால் சூழப்பட்டு இருக்கும் சின்னக்கல்லார் அமைதியான சூழலை கொடுக்கின்றது. அருவிக்கு மேலே அமைக்கப்பட்டு இருக்கும் தொங்கு பாலம் பயணத்தை சாகசம் நிறைந்ததாக மாற்றுகின்றது.

Bikash Das

 புல் குன்று

புல் குன்று

வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்திரா காந்தி வன உயிர் பாதுகாப்பு மையத்தின் ஒரு பகுதியாக புல் குன்று இருக்கின்றது. வனவிலங்குத் துறை பாதுகாவலரிடம் இருந்து அனுமதி பெறாமல் புல் குன்றினை பார்வையிட முடியாது.

பண்டைக்கால பசுமைநிறைந்த சுற்றுச்சூழலையும், மலை மற்றும் காடுகளை பார்வையிடும் அற்புதமான காட்சி அமைப்பையும் ஒருங்கே இணைத்து கொடுக்கிறது இந்த புல் குன்று. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்த புல் குன்றினைப் பார்ப்பதற்கான சிறந்த காலம். இது கடல்மட்டத்தில் இருந்து 2400 மீட்டர்களுக்கு மேல் அமைந்து இருக்கிறது.

wiki

 சோலையார்

சோலையார்

சோலையாருக்கு புகழ்சேர்ப்பது, வால்பாறையில் இருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் மேல் சோலையார் அணை. ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை இது, ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இது ஈர்க்கின்றது.

தமிழ் நாடு நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கின்றது. இந்த அணையை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அணையின் பிரம்மாண்டமான வலிமையும், பீரிட்டு வரும் நீரும், பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சி ஆகும். இதன் அமைதியான இருப்பிடத்தின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அணை சுற்றுலா பயணிகளால் நிறைந்து காணப்படுகின்றது.

wiki

 அன்னை வேளாங்கன்னி ஆலயம்

அன்னை வேளாங்கன்னி ஆலயம்

வால்ப்பாறையின் பரந்தவெளியில் ஆச்சரியமூட்டும் அம்சமாக அன்னை வேளாங்கன்னி ஆலயம் திகழ்கின்றது. வால்ப்பாறையில் இருந்து 10 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இவ்வாலயம், 2003 ஆம் ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டது.

ஆண்டுத் திருவிழா நிகழும் செப்டம்பர் மாதமே இந்த ஆலயத்தை பார்வையிட சிறந்த காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த திருவிழா உள்ளூரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 காட்சிப் புள்ளிகள்

காட்சிப் புள்ளிகள்

பல்வேறு காட்சி புள்ளிகளை உடைய இடம் என்று வால்ப்பாறை பெருமிதம் கொள்கின்றது. வால்ப்பாறை வழியாகச் செல்லும் போது, தவற விடக்கூடாத ஒரு முக்கியமான காட்சிப் புள்ளி லோம்ஸ் காட்சிப் புள்ளி.
பொள்ளாச்சியில் இருந்து வால்ப்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவில் இது அமைந்து இருக்கிறது. பொள்ளாச்சி பட்டணம் வரை இருக்கும் சமவெளிகளை காண்பதற்கு இது ஒரு அனுகூலமான இடம்.

Navaneeth KN

 நீரார் அணை

நீரார் அணை

நீரார் அணை வால்ப்பாறையில் இருந்து 15 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கின்றது. சமவெளிகளில் பல வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் அளிக்கின்ற நீர் மின் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணை கட்டப்பட்டது.

தமிழ் நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் இவ்வணை முக்கிய பங்கு வகிக்கின்றது. சோலையார் அணை, ஆழியார் அணை, நீரார் அணை வால்ப்பாறையில் இருக்கும் மூன்று முக்கிய அணைகள் ஆகும்.

Technofreak

Read more about: travel