Search
  • Follow NativePlanet
Share
» »அதிகரிக்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம் – இனி அரை மணி நேரம் முன்னதாகவே சீரடியை அடையலாம்!

அதிகரிக்கும் வந்தே பாரத் ரயிலின் வேகம் – இனி அரை மணி நேரம் முன்னதாகவே சீரடியை அடையலாம்!

புனிதமான பல்வேறு ஆன்மீக சுற்றுலாத் தலங்களின் தாயகமாக இருக்கும் இந்தியாவின் மிக முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்று - மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஷீரடிக்கு வருகை தரும் பக்தர்கள், முதலில் மும்பைக்கு சென்று பின்னர் ஷீரடிக்கு செல்கின்றனர். இந்நிலையில் மும்பையிலிருந்து ஷீரடிக்கு செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பக்தரகள் 30 அல்லது 45 நிமிடங்கள் முன்னதாகவே ஷீரடியை அடைந்து விடலாம்!

திரளான பக்தர்களின் எண்ணிக்கையால் வந்தே பாரத் துவக்கம்

ஷீரடி ஒரு புகழ்பெற்ற யாத்திரைத் தலமாகவும், ஸ்ரீ சாய்பாபாவின் இல்லமாகவும் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில், அவரது மரபுக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் வருகை தருவது வழக்கம். ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கண்டு இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கியது. இப்போது மும்பையிலிருந்து ஷீரடி செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது.

1

ஐந்தரை மணி நேரத்தில் செல்லும் மும்பை to ஷீரடி வந்தே பாரத்

மும்பை CSMT-சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 22223 சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சாய்நகர் ஷீரடி டெர்மினஸ் இடையே இயக்கப்படுகிறது. மும்பை CSMT-சாய்நகர் ஷிர்டி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 22223 நேரங்களைப் பொறுத்தவரை, இந்த ரயில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து சாய்நகர் ஷீரடி டெர்மினஸ் அடைய மொத்தமாக 5 மணிநேரம் 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

இந்த ரயில் இன்னமும் அதிக வேகத்தில் செல்லலாம்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் சாய்நகர் டெர்மினஸ் இடையேயான 343 கிமீ தூரத்தை இந்த ரயில் இன்னமும் வேகமாக கடக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ரயில் மும்பையில் இருந்து காலை 6.20 மணிக்கு தானே, கல்யாண் மற்றும் நாசிக் சாலை ரயில் நிலையங்களில் நின்று 11.30 மணிக்கு இலக்கை அடைகிறது. ஷீரடியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு மும்பை சென்றடைகிறது.

வேகத்தை அதிகரிக்க மத்திய ரயில்வே முடிவு

இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரியாக 83 கிமீ வேகத்தில் இயங்கி வருகிறது, ஆனால் மோசமான பாதை நிலை காரணமாக 180 கிமீ செல்லக்கூடிய ரயில் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியத்தின் உத்தரவுகளின்படி, இந்த வேகத்தை அதிகரிக்க மத்திய ரயில்வே மும்பை ஷீரடி இடையேயான பாதையை மேம்படுத்தத் தொடங்கியுள்ளது.

2

30 நிமிடங்கள் முன்னதாகவே இலக்கை அடையலாம்

ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்களின்படி, ரயில் பாதைகளை மேம்படுத்தும் பணியை மத்திய ரயில்வே தொடங்கியுள்ளது. முடிந்த பிறகு, இந்த ரயில் பயண நேரத்தை குறைந்தது 30 நிமிடங்கள் குறைக்கும். இகத்புரி-புசாவல் வழித்தடம் இதன் மூலம் பயனடையும், இதைப் பயன்படுத்தும் அனைத்து ரயில்களுக்கும் பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும்.

இது ஒரு சிறந்த முடிவு

ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு மதங்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். மேலும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை உயரும். இதை மனதில் வைத்து, பாதையை மேம்படுத்தும் செயல்முறை மற்றும் ரயில் வேகத்தை அதிகரிப்பது ஒரு சிறந்த முடிவாகும்.

More News

    Read more about: shirdi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+