Search
  • Follow NativePlanet
Share
» »சிவ பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – வெள்ளியங்கிரி மலைகள் ஏற அனுமதி – கரகோஷத்துடன் மலையேறி வரும் பக்தர்கள்!

சிவ பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – வெள்ளியங்கிரி மலைகள் ஏற அனுமதி – கரகோஷத்துடன் மலையேறி வரும் பக்தர்கள்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் தென் இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் "தென்கயிலை" எனப்படும் வெள்ளியங்கிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வெள்ளியங்கிரி மலையேறும் அனுமதியை சென்னை உயர்நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது! ஏன் நாம் அனைவரும் கட்டாயம் வெள்ளியங்கிரி மலை ஏற வேண்டும் என்று தெரியுமா? ஒரு காரணம் இருக்கிறது!

velliangirihills

அனைவரும் கட்டாயம் காண வேண்டிய இடம்

நீங்கள் ஆன்மீக வாதியாகவோ அல்லது சாகச விரும்பியாகவோ அல்லது இயற்கை ஆர்வலராகவோ, ஏதோ ஒரு விதத்தில் வாழ்வில் ஒரு முறையேனும் தென் கயிலை என போற்றப்படும் கோயம்புத்தூரின் வெள்ளியங்கிரி மலைகளுக்கு வர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரிக்கு பின்னர் இந்த மலையேற பொது மக்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிப்ரவரி 9 முதல் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மலைக்கு ஏன் நீங்கள் செல்ல வேண்டும்? என்னவெல்லாம் பார்க்கலாம்? அதனால் கிடைக்கிற அரிய அனுபவம் என்னவென்று இங்கே பார்ப்போம்!

மலையேற இது தான் சரியான தருணம்

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மற்றும் சித்ரா பவுர்ணமி திருவிழாவை காலங்களில் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொதுமக்கள் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேறி சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா காலங்களில் மலை ஏற வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சிவராத்திரியின் போது தான் நீண்ட நாட்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.

velliangirihills1

உற்சாகத்துடன் மலையேறி வரும் பக்த கோடிகள்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பிப்ரவரி 9ம் தேதி முதல், வெள்ளியங்கிரி மலையில் மலையேற மக்களை அனுமதிக்கும் வகையில், போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள், மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்களை ஒழுங்குபடுத்த, சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடுப்புகளை பொருத்தி வந்தனர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற அனுமதி வந்த நிலையில் பக்தர்கள் அனைவரும் 'சிவாய நம' எனும் கரகோஷத்துடன் பக்தி பொங்க மலையேறி வருகின்றனர்.

2023 இல் 2 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம்

கடந்த ஆண்டைப் போலவே, வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளிலும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில்களுடன் ஏற அனுமதிக்கப்படுவார்கள், மேலும் மலையடிவாரத்தில் உள்ள கவுண்டர்களில் திரும்பியவுடன் ஒவ்வொன்றும் ரூ.20 திரும்பப் பெறப்படும். கடந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி பக்தர்களுக்காக மலை திறக்கப்பட்டு மார்ச் 31ஆம் தேதி மூடப்பட்டது.மொத்தம் இரண்டு லட்சம் பக்தர்கள் கோயிலுக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருகில் இருக்கும் தென் கயிலாயத்தை நாம் காண வேண்டாமா

எங்கும் நிறைந்திருக்கும் அந்த ஆதி பரம்பொருளான சிவபெருமான் பல ஆலயங்களில் நமக்கு காட்சி கொடுத்தாலும், கயிலாயத்தில் தான் நிரந்திரமாக குடிக் கொண்டிருக்கிறார். இமயமலை மட்டுமே கயிலாயம் என்று குறிப்பிடப்படுவதில்லை. ஆம் இமயமலை வட கயிலை என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலைகள் தென் கயிலை என்றும் அழைக்கப்படுகின்றன.

மன நிம்மதி வழங்கும் ஈசன்

தான் காப்பாற்ற எண்ணி வந்த பெண்ணின் உயிரை காக்க முடியாத கோவத்தினாலும் சோகத்தினாலும் மன வருத்ததுடன் இங்கு சிவபெருமான் அமர்ந்த இடமே "வெள்ளியங்கிரி மலைகள்". அவர் இங்கு மன சாந்தியுடன் இங்கு அமராவிட்டாலும் கூட, இங்கு வரும் பக்த பெருமக்களுக்கு மன நிம்மதியும், அமைதியையும் வழங்கி ஆசி புரிகின்றார்.

கடினமான வெள்ளியங்கிரி பயணம்

ஏழு மலைகளை அடக்கிய தொடர் தான் வெள்ளியங்கிரி மலைகள். ஏழாவது மலைக்கு சென்றால் தான் எம்பெருமானை தரிசிக்க முடியும்.

1. முதல் மலையில் ஒரு அடி அளவுள்ள படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறுவதற்கு சற்று சிரமமாகத் தான் உள்ளது.

2. இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. உங்களுக்கு பிடித்த நட்சத்திரத்துடன் ஓர் செல்ஃபி எடுக்க போலாம்?உங்களுக்கு பிடித்த நட்சத்திரத்துடன் ஓர் செல்ஃபி எடுக்க போலாம்?

3. மூன்றாவது மலையில் சித்தர்கள் நடமாட்டம் இருக்கும் என நம்பப்படுகிறது. இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வருகிறதாம்.

4. நான்காவது மலையும் ஐந்தாவது மலையும் நடந்து போக சற்றே எளிதாக உள்ளன.

5. நீங்கள் நடந்து வந்த களைப்பு எல்லாம் காணமல் போக வேண்டுமானால் ஆறாவது மலையில் உள்ள சுனையில் ஒரு குளியல் போடுங்கள்.

6. கிரிமலை என்றழைக்கப்படும் ஏழாவது மலையில் தான் வெள்ளியங்கிரி நாயகனான எம்பெருமான் சுயம்பு வடிவில் வீற்றிரிக்கிறார்.

இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் ஏற்ற இடம்

இந்த இடத்திற்கு நீங்கள் சிவபெருமான் பக்தராக மட்டுமில்லாமல் இயற்கை மற்றும் சாகச விரும்பியாக கூட வருகை தரலாம். மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், ரம்மியமான சூழலும், பறவைகள் மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலியும் நம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. ஏழு மலைக்கு மேலே உச்சியில் எட்டாவது மலை ஒன்று உள்ளது. அதன் உச்சியில் இருந்து பார்க்கும் போது உங்களுக்கு கிடைக்கின்ற சிலிர்ப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

More News

    Read more about: coimbatore velliangiri hills
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+