Search
  • Follow NativePlanet
Share
» »ஏரி முழுக்க எலும்புக் கூடுகள்... இந்தியாவின் மிக பயங்கரமான இடங்கள்...

ஏரி முழுக்க எலும்புக் கூடுகள்... இந்தியாவின் மிக பயங்கரமான இடங்கள்...

இந்தியாவில் எத்தனையோ அதிசயங்கள் பட்டியலிட்டு கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அப்பட்டியலில் இடம்பெறாத மர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த பகுதிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

நம்ம இந்தியாவுல மர்மங்களுக்கும், அதிசயங்களுக்கும் எந்த குறைச்சலும் இல்லை. தாஜ் மஹாலை கட்டியது யார்? தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழுமா, விழாதா? என்று இன்னும் விடை அறியப்படாத கேள்விகள் எத்தனை எத்தனையோ உள்ளன. அந்த வகையில் காற்றில் மிதக்கும் கல், எலும்புக்கூடுகள் நிறைந்த ஏரி, பறவைகளின் தற்கொலை, கதவற்ற வீடுகள் நிறைந்த கிராமம் என்று உங்களுக்காக அதிசயமான மர்மங்களும், மர்மமான அதிசயங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.

காற்றில் மிதக்கும் கல்

காற்றில் மிதக்கும் கல்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஷிவாபூர் என்ற இடத்தில் காற்றில் மிதக்கும் கல் காணப்படுகிறது. இந்தக் கல்லை 11 பேர் தங்கள் விரல்களால் தொட்டு "கம்மார் அலி தர்வேஷ்" என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுவதாக உள்ளூர் மக்கள் வியக்கவைக்கின்றனர். 200 கிலோ எடை கொண்ட இந்தக் கல் காற்றில் மிதக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்றாகவே இருந்து வருகிறது. எனினும் கம்மார் அலி என்ற அற்புத சக்தி படைத்த சூஃபி ஞானி இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், அவருடைய சக்தியால்தான் இந்தக் கல் காற்றில் மிதப்பதாகவும் உள்ளூர் மக்கள் நம்பி வருகின்றனர்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து சுமார் 318 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஷிவாபூர். அவுரங்காபாத்- அகமத்நகர் வழியாக புனே சென்று அங்பிருந்து மும்மை நெடுஞ்சாலையில் ஷிவாபூர் செல்ல வேண்டும்.

மேக்னடிக் ஹில்

மேக்னடிக் ஹில்

PC : AKS.9955

உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகள் வாகனங்களை மலையின் மேலே இழுக்கும் தன்மை உடையது. எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. தில்லியில் இருந்து நீங்கள் செல்கிறீர்கள் என்றால் இமாச்சல பிரதேசம்- ஹெமிஸ் தேசியப் பூங்கா வழியாக சுமார் 1000 கிலோ மீட்டர் பயணித்து ஜம்மு- காஷ்மீர் அருகே உள்ள லே செல்ல வேண்டும். இச்சாலை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் முறையான அனுமதி பெருவது கட்டாயம். இது கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

ரூப்குந்த் லேக்

ரூப்குந்த் லேக்

PC : Schwiki

1942-ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டின் உறைந்த ஏரியான ரூப்குந்த் லேக்கில் ஆய்வில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் காட்டிலாக்க அதிகாரி ஏரி முழுக்க எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அதுமட்டுமின்றி அந்த ஆண்டு கோடை காலத்தில் ஏரி உருகியபோது இன்னும் பல மனித எலும்புக்கூடுகள் வெளியே வந்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய சிப்பாய்களின் எலும்புக்கூடுகளாக இது இருக்கலாம் என முதலில் சொல்லப்பட்டன. ஆனால் அறிவியல் அறிஞர்கள் இந்த எலும்புக்கூடுகள் 9-ஆம் நூற்றாண்டில் இறந்த இந்திய பழங்குடியினரின் கூடுகள் என்று தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இரட்டையர் கிராமம்

இரட்டையர் கிராமம்

PC : Kiran Gopi

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடிஞ்சி கிராமம் இரட்டையர்கள் கிராமம் என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் 2008-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது பல சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்தன. அதாவது முதலில் 100 இரட்டையர்கள் என்று கணக்கிடப்பட்டு, 200 இரட்டையர்கள் என்றாகி தற்போது 400 ஜோடி இரட்டையர்கள் இந்த கிராமத்தில் உள்ளனர். அதுவும் உலக அளவில் இந்தியா இரட்டையர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் இந்த கிராமம் உலகப் பிரசித்தி பெற்றுவிட்டது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

சென்னையில் இருந்து 654 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில் இருந்து 151 கிலோ மீட்டர் தூரத்திலும் கோட்டக்கல் அடுத்து அமைந்துள்ளது கொடிஞ்சி. சென்னை எக்மோரில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், எம்எஸ் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

ஷனி ஷிங்க்னாபூர்

ஷனி ஷிங்க்னாபூர்

PC : Singhmanroop

ஷிர்டியிலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாதாம்!. இங்குள்ள சனி பகவான் கோவிலில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை திருட்டிலிருந்து காத்து வருவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

PC : Vishal0soni

சென்னையில் இருந்து புனேவிற்கு செல்ல மதுரை - மும்பை குர்லா எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர் - தாதர் சென்ட்ரல், சென்ட்ரல்- மும்பை, நாகர்கோவில் - மும்பை, சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளன. புனேவில் இருந்து பேருந்து அல்லது உள்ளூர் டாக்சியில் சுமார் 161 கிலோ மீட்டர் பயணித்தால் ஷனி ஷிங்க்னாபூரை அடையலாம்.

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்

பறவைகள் தற்கொலை செய்யும் இடம்

PC : VasuVR

அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஜதிங்கா எனும் கிராமம் பறவைகளின் தற்கொலை பூமியாக கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அதாவது இந்த பருவத்தில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரில் உள்ள காந்தப் பண்புகள் மாறி அது பறவைகளின் உடலியல் இயக்கங்களை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது என்ற ஒருசாரார் நம்புகின்றனர்.

11

11

PC : Wikipedia

அதேப்போல பறவைகள் கூடு அதிவேக காற்றால் சிதறடிக்கப்பட்டு பறவைகளை ஒரு ஒளியை நோக்கி திருப்பிவிட்டு மூங்கில் கம்புகளை கொண்டு பழங்குடியின மக்கள்தான் அடித்துக்கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

More News

    Read more about: travel பயணம்
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+