Search
  • Follow NativePlanet
Share
» »குதுரேமுக் வாருங்கள், புத்துணர்வோடு திரும்புங்கள்!

குதுரேமுக் வாருங்கள், புத்துணர்வோடு திரும்புங்கள்!

By Super Admin

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குதுரேமுக் மலைவாசஸ்தலம், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமையப்பெற்றுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.

குதுரேமுக் வாருங்கள், புத்துணர்வோடு திரும்புங்கள்!

இந்த மலைவாசஸ்தலம் அடர்ந்த காடுகள், அருவிகள், ஆறுகள் என அற்புதமான சுற்றுலா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

ஊட்டி, கொடைக்கானல் என்று பார்த்த இடங்களையே பார்த்து பார்த்து அலுத்துப்போனவர்களுக்கு குதுரேமுக் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

குதுரேமுக் ஹோட்டல் டீல்கள்!

குதுரேமுக்கின் சுற்றுலாத் தலங்கள்

குதுரேமுக்கின் சுற்றுலாத் தலங்கள்

குதுரேமுக் பகுதியில் ஏராளமான சுற்றுலா அம்சங்கள் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன. அவற்றில் குதுரேமுக் தேசியப்பூங்கா, லக்யா அணை, ஹனுமான் குந்தி அருவி, குதுரேமுக் சிகரம் போன்றவை முக்கியமானவை.

படம் : Ashwin Kamath

குதுரேமுக் சிகரம்

குதுரேமுக் சிகரம்

கடல் மட்டத்திலிருந்து 1894 மீட்டர் உயரத்தில் உள்ள குதுரேமுக் சிகரம் டிரெக்கிங் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த சிகரத்திற்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள மலைகள் அகலமாகவும் ஒன்றோடன்று இணைந்தும் அமைந்துள்ளதை கண்டு ரசிக்கலாம். குதுரேமுக் சிகரத்திலிருந்து அரபிக்கடலின் அழகையும் தரிசிக்கமுடிவது மற்றொரு விசேஷம்.இங்குள்ள காட்டுப்பகுதியில் பல்வேறு உயிரினங்களும் அரிய தாவர இனங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

படம் : Nilesh

குதுரேமுக் டிரெக்கிங்

குதுரேமுக் டிரெக்கிங்

குதுரேமுக் டிரெக்கிங் முல்லோடி என்ற இடத்திலிருந்து தொடங்குகிறது. முல்லோடியிலிருந்து குதுரேமுக் சிகரம் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. எனவே 9 + 9 = 18 கி.மீ தூரம், மொத்தம் 9 மணிநேரம் நீங்கள் டிரெக்கிங் செய்யவேண்டும். டிரெக்கிங் செல்வதற்கு வனத்துறை அனுமதி பெறவேண்டும் என்பதுடன், டிரெக்கிங் கட்டணமாக 275 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

படம் : Praveen

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

பெங்களூரிலிருந்து, கலசா எனும் சிறிய நகரத்துக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் கலசாவை அடைந்தபிறகு அங்கிருந்து பளேகால் என்ற இடத்துக்கு பேருந்தில் செல்லவேண்டும். அதன்பின்பு டிரெக்கிங் தொடங்கும் இடமான முல்லோடியை அடைய நிறைய ஜீப்கள் பளேகால் பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கட்டணமாக (அதிகபட்சம் 8 பேர்) 500 முதல் 700 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. ''தொடர்புக்கு : 9481179008''

படம் : Jayashree B

ஜீப் பயணம்

ஜீப் பயணம்

பளேகால் என்ற இடத்திலிருந்து டிரெக்கிங் தொடங்கும் இடமான முல்லோடிக்கு இதுபோன்ற ஜீப்பில்தான் பயணிகளை அழைத்துச் செல்வார்கள்.

படம் : Nilesh

ஹனுமான் குந்தி அருவி

ஹனுமான் குந்தி அருவி

சுத்தனப்பே அருவி என்றும் அழைக்கப்படும் ஹனுமான் குந்தி அருவி குதுரேமுக் தேசியப்பூங்காவில், கர்கலா அணை மற்றும் லக்யா அணைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல வனத்துறையால் பாதுகாப்பான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அருவியைக் காண அனுமதிக்கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

படம் : Arun Keerthi K. Barboza

குதுரேமுக் இரும்புத்தாது நிறுவனம்

குதுரேமுக் இரும்புத்தாது நிறுவனம்

குதுரேமுக் பகுதி இரும்புத்தாது உற்பத்திக்காக மிகவும் பிரபலம்.

படம் : Arun Keerthi K. Barboza

மிகப்பெரிய நிறுவனம்

மிகப்பெரிய நிறுவனம்

உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது நிறுவனங்களில் ஒன்றாக குதுரேமுக் இரும்புத்தாது நிறுவனம் திகழ்கிறது.

படம் : e900

சைக்கிளிங்

சைக்கிளிங்

குதுரேமுக் மலைப்பகுதியில் சைக்கிளிங் செல்வது உல்லாசமான அனுபவம்.

படம் : Abhijit Shylanath

லக்யா அணை

லக்யா அணை

குதுரேமுக் மலைப்பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் லக்யா அணையும் ஒன்றும். இந்த அணை குதுரேமுக்கிலிருந்து 4.5 கி.மீ தொலைவில் உள்ளது.

படம் : solarisgirl

குறிஞ்சல் சிகரம்

குறிஞ்சல் சிகரம்

குதுரேமுக் மலைப்பிரதேசத்தில் உள்ள மற்றொரு சிகரமான குறிஞ்சல் சிகரம்.

படம் : karnatakatouristguide

டிரெக்கிங் செல்லும் வழி

டிரெக்கிங் செல்லும் வழி

குதுரேமுக் சிகரத்துக்கு டிரெக்கிங் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : netlancer2006

இயற்கை வனப்பு

இயற்கை வனப்பு

நீர்நிலை, அடர்வனம், பசுமையான மலை என குதுரேமுக்கின் இயற்கையின் எழில் எவரையும் சொக்கவைத்துவிடும்.

படம் : solarisgirl

உச்சி

உச்சி

குதுரேமுக் சிகரத்தின் உச்சி இப்படித்தான் இருக்கும்.

படம் : solarisgirl

சூரிய உதயம்

சூரிய உதயம்

குதுரேமுக் சிகரத்துக்கு சூரிய உதயமாகும் அற்புதமான காட்சி.

படம் : netlancer2006

சைலன்ட் வேல்லி ரிசார்ட்டிலிருந்து....

சைலன்ட் வேல்லி ரிசார்ட்டிலிருந்து....

குதுரேமுக்கில் உள்ள சைலன்ட் வேல்லி ரிசார்ட்டிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : Nikhil Verma

ஓடை

ஓடை

குதுரேமுக் சிகரத்துக்கு டிரெக்கிங் செல்லும் வழியில் தென்படும் ஓடை ஒன்று.

படம் : Praveen

சிலந்தி

சிலந்தி

டிரெக்கிங் செல்லும் வழியில் வலையில் உள்ள பெரிய சிலந்தி ஒன்றை படம்பிடிக்கும் புகைப்படக் கலைஞர்.

படம் : shrikant rao

குதுரேமுக் தேசியப்பூங்கா

குதுரேமுக் தேசியப்பூங்கா

குதுரேமுக் தேசியப்பூங்காவானது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும். இது 600 ச.கி.மீ பரப்பளவில் பசுமைப் பள்ளத்தாக்குகளையும், பசுமை மாறாக்காடுகளையும் கொண்டுள்ளது. இங்கு சாம்பார் மான், சிங்கவால் குரங்கு, காட்டுப்பன்றி, புலிகள், காட்டு நாய்கள் மற்றும் சிறுத்தைகள் வாழ்கின்றன. இந்த தேசியப்பூங்காவினுள் நுழைந்து சுற்றிப்பார்க்க வனத்துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது. குதுரேமுக் தேசியப்பூங்காவிற்கு அருகில் பயணிகள் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் இல்லம் உள்ளது.

படம் : Karunakar Rayker

கடம்பி அருவி

கடம்பி அருவி

குதுரேமுக் தேசியப்பூங்காவினுள் அமைந்துள்ள மற்றொரு அருவி கடம்பி அருவி.

படம் : Karunakar Rayker

பாம்பு

பாம்பு

குதுரேமுக் தேசியப்பூங்கா மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருப்பதால் ஒரு சில பாம்பு வகைகளையும் நீங்கள் இங்கு காணலாம்.

படம் : Amithbangre

கரடுமுரடு

கரடுமுரடு

குதுரேமுக் சிகரத்துக்கு டிரெக்கிங் செல்லும்போது நீங்கள் இதுபோன்ற கரடுமுரடான பாதைகளிலும் பயணிக்க வேண்டும்.

படம் : Gvarma.biomed

வித்தியாசமான தவளை

வித்தியாசமான தவளை

குதுரேமுக் தேசியப்பூங்காவில் காணப்படும் ஒருவகை தவளை. பொதுவாக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இதுபோன்ற வினோதமான தவளைகளை பார்க்கலாம்.

படம் : Chinmayisk

குதிரை முகம்

குதிரை முகம்

குதுரேமுக் சிகரம் குதிரையின் முகம்போன்று காணப்படுவதால்தான் குதுரேமுக் என்ற பெயரைப் பெற்றது.

படம் : Anandbharadwaj

குரங்கு

குரங்கு

குதுரேமுக் தேசியப்பூங்காவில் காணப்படும் குரங்கு.

படம் : Karunakar Rayker

குதுரேமுக் செல்லும் வழி

குதுரேமுக் செல்லும் வழி

குதுரேமுக் மலைப்பிரதேசத்துக்கு செல்லும் வழி.

படம் : Praveen Selvam

ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவி

ஆர்ப்பரித்துக்கொட்டும் அருவி

ஆர்ப்பரித்துக்கொட்டும் ஹனுமான் குந்தி அருவி.

படம் : vinay

உச்சியிலிருந்து...

உச்சியிலிருந்து...

குதுரேமுக் சிகரத்தின் உச்சியிலிருந்து கீழே தெரியும் காட்சி.

படம் : Gvarma.biomed

கவனம் தேவை!

கவனம் தேவை!

குதுரேமுக் சிகரத்தின் உச்சியில் இருக்கும்போது ஒவ்வொரு அடியையும் பார்த்து வையுங்கள். சும்மா கிடையாது 1894 மீட்டர் உயரம்.

படம் : Praveen

அம்பா தீர்த்தம்

அம்பா தீர்த்தம்

குதுரேமுக் மலைப்பிரதேசத்துக்கு அருகிலுள்ள அம்பை தீர்த்தம் எனப்படும் நதி.

படம் : solarisgirl

கேம்ப் ஃபயர்

கேம்ப் ஃபயர்

குதுரேமுக் டிரெக்கிங்கின் போது கேம்ப் ஃபயரில் ஈடுபடும் அனுபவம் இனிமையானதாக இருக்கும்.

படம் : netlancer2006

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

டிரெக்கிங் செல்லும் வழியில் எண்ணற்ற பட்டாம்பூச்சிகள் உங்களை வட்டமடித்து பறந்து செல்லும்.

படம் : solarisgirl

பசுமை

பசுமை

ஹனுமான் குந்தி அருவிக்கு அருகில் உள்ள பசுமையான நிலப்பரப்பு.

படம் : solarisgirl

சலசலத்து ஓடும் நதி!

சலசலத்து ஓடும் நதி!

சலசலத்து ஓடும் அம்பை நதி.

படம் : solarisgirl

பாழடைந்த கோயில்

பாழடைந்த கோயில்

ஹனுமான் குந்தி அருவிக்கு அருகில் காணப்படும் பாழடைந்த கோயில் ஒன்று.

படம் : solarisgirl

காட்டுப்பூ

காட்டுப்பூ

குதுரேமுக் வனப்பகுதியில் காணப்படும் ஒருவகை காட்டுப்பூ.

படம் : Arun Keerthi K. Barboza

காற்றின் நறுமணம்!

காற்றின் நறுமணம்!

டிரெக்கிங் செல்லும்போது காற்றின் நறுமணத்தை கண்டிப்பாய் உணர்வீர்கள்.

படம் : Praveen

குதுரேமுக்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

குதுரேமுக்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது

எப்போது பயணிக்கலாம்

படம் : Dhruvaraj S

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X