» »எட்டு மகா நாகங்கள் வழிபட்ட திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலின் அற்புத சக்திகாண வேண்டுமா?

எட்டு மகா நாகங்கள் வழிபட்ட திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலின் அற்புத சக்திகாண வேண்டுமா?

Posted By: Udhaya

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில். இந்த கோயில் ஒரு சிவாலயம் ஆகும்.

இங்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றது.

கோயிலின் மூலவர் சேஷபுரீஸ்வரர். தாயார் பிரமராம்பிகை.

எட்டு மகா நாகங்கள் வழிபட்ட திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலின் அற்புத சக்திகாண வேண்டுமா?

Ssriram mt

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும். ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், "பாம்புரம்" எனப் பெயர் கொண்டது. திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் "பாம்புர நன்னகர்" என்று குறிப்பிடுகிறார்.

திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.

எட்டு மகா நாகங்கள் வழிபட்ட திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலின் அற்புத சக்திகாண வேண்டுமா?

Redtigerxyz

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் ஆகியோர் வழிபட்ட தலம் என்பது இதன் பெருமையாகும்.

Read more about: travel, temple