Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் புகை, மாசில்லாத அதிசய 6 நகரங்கள்!! இங்கெல்லாம் ஒரு விசிட் போயிட்டு வாங்க!!

இந்தியாவில் புகை, மாசில்லாத அதிசய 6 நகரங்கள்!! இங்கெல்லாம் ஒரு விசிட் போயிட்டு வாங்க!!

இந்தியாவில் புகை, மாசில்லாத அதிசய 6 நகரங்கள்!! இங்கெல்லாம் ஒரு விசிட் போயிட்டு வாங்க!!

By Bala Karthik

புகைபிடித்தல் பழக்கம் என்பது பலருக்கு பொதுவான விசயமாக, அதனை மறக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திக்கின்றனர். ஒருவேளை நீங்கள் நகரத்தில் வாழும் ஒருவராயின், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே உங்களை தொந்தரவு செய்வதில்லை. தொழிற்சாலைகளிலிருந்து வரும் காற்று மாசும், வாகனங்களில் இருந்து வரும் புகையும் கூட, போட்டி போட்டுகொண்டு சூழ்ந்து உங்கள் வாழ்வை வலுவிழக்க காத்துகொண்டிருக்கிறது.

சில நேரங்களில் விடுமுறையின் போது, எங்கேயாவது வெளியில் செல்ல வேண்டுமென ஆசை கொண்டாலும், அங்கே நாம் தூய காற்றை சுவாசித்து, நீண்ட நெடிய பெருமூச்செறிந்து ஓய்வில் துள்ளி குதிக்க வேண்டுமெனவே ஆசைகொள்கிறோம். அப்பேற்ப்பட்ட இடங்களை நீங்கள் தேட, இது தான் அத்தகைய இடங்கள் என புகை இல்லா இடங்களாக இந்தியாவில் காணப்படும் சிலவற்றை அதிகாரபூர்வமாக அறிவித்து நம் மனதில் அழகியதோர் உணர்வினை உண்டாக்குகின்றனர்.

நாகாலாந்தில் காணப்படும் கோஹிமாவும் கடந்த வருடம் இப்பட்டியலில் இடம்பெற்று நம்மை அன்போடு அழைக்கிறது. இதனை தவிர்த்து இந்தியாவில் காணும் புகை இல்லா இடங்கள்....இதோ உங்களை மகிழ்விக்க, குடும்ப தோழனாக கருதி அரவணைக்க காத்துகொண்டிருக்கிறது. அது எவை என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.

 சண்டிகர்:

சண்டிகர்:

புகை அற்ற நகரமாக 2007ஆம் ஆண்டு (பிற்பகுதியில்) முதன் முதலில் அற��விக்கப்பட்ட ஒரு இடம் தான் இந்த சண்டிகர். இந்த நகரமானது ஹரியானா, மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களின் தலை நகரமாக விளங்குகிறது. ஆனால் இந்த இரு மாநிலங்களையும் ஒன்றிய அரசு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க, இதனை ஒன்றிய பிரதேசம் என்றே அழைக்கப்படுகிறது.

இந்த அழகிய நகரமானது, அனைவரும் பார்க்க வேண்டிய பல இடங்களை கொண்டிருக்க, அவற்றுள் சில சுக்னா ஏரி, பாறை தோட்டம், கிளிகள் பறவை சரணாலயம், என கொண்டிருப்பதோடு ரோஜா தோட்டம், பௌகைன்வில்லா தோட்டம் ஆகியவையும் நம் கண்களை வெகுவாக கவர்கிறது.

செயற்கை ஏரியான சுக்னா ஏரி, சிவலிக் மலைக்கும், பாறை தோட்டத்திற்கும் அடிவாரத்தின் வலது பக்கத்தில் காணப்படுகிறது. இங்கே உலோக கம்பிகள், ஆட்டோ பாகங்கள், பீங்கான் ஆகியவற்றை கொண்டு அற்புத சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்க, அவை நம் மனதில் வியப்பாகிறது

Giridhar Appaji Nag Y

 கோட்டயம்:

கோட்டயம்:

சண்டிகரை தொடர்ந்து நாம் பார்க்க வேண்டிய மற்றுமோர் புகை இல்லா இடமாக கேரளாவின் கோட்டையம் காணப்படுகிறது. இதுவும் 2007 ஆம் ஆண்டு, இந்தியாவில் புகை இல்லா இடங்களுள் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட இடமாக, கடவுள் ஆண்ட நாட்டின் அழகிய காட்சிகள் நம் கண்களை கட்டி இழுக்கிறது. இதய துடிப்பை இனிமையாக தரும் அழகிய இடம���ன இவ்விடத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து பரவசத்துடன் திரும்புகின்றனர்.

பல சாதனைகளுக்கு பெயர் பெற்ற இந்த கோட்டையம், முதன் முதலில் இந்தியாவில் படிப்பறிவு கொண்ட இடங்களுள் முதன்மை இடத்தை பெற்று பெருமையுடன் விளங்குகிறது. அதோடுமட்டுமல்லாமல், நாட்டின் முதல் சுவர் சித்திர நகரம் என்ற பெருமையும் இந்த கோட்டையத்துக்கு தரப்பட, இங்கே கட்டிட சுவர்களில் காணும் ஓவியங்கள் நம் மனதில் ஒருவித அழகிய சலனத்தை உண்டாக்குகிறது.

கோட்டையம் வெளி மற்றும் சுற்று புறங்களில் காணப்படும் இடங்களாக...செயின்ட் மேரிஸ் பழமைவாத தேவாலய, குமரகோம் உப்பங்கழி, குமரகோம் பறவைகள் சரணாலயம், வைக்கோம் என பல இடங்கள் நாம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாக காணப்படுகிறது.

Jiths

 சிக்கிம்:

சிக்கிம்:


சண்���ிகர் மற்றும் கோட்டையம் ஆகிய இரு நகரங்களை புகை இல்லா இடமாக நாம் பார்க்க, முதல் புகை இல்லா இந்திய மாநிலமாக சிக்கிம், 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவில் காணப்படும் தூய்மை மாநிலமாகவும் விளங்குகிறது. இத்தகைய காரணத்தினாலே, இம்மாநிலத்தை தோழமை கொண்டு மனதில் கருதி சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செல்கின்றனர்.

அற்புதமான மலைகள், அமைதியான பசுமை நிலங்கள், என புத்துணர்ச்சி தரும் நீர்வீழ்ச்சிகளும் பல இந்த சிக்கிமை சூழ்ந்து காணப்பட, இயற்கை ஆர்வலர்களுக்கு இவ்விடம் அழகிய தருணமாக அமைகிறது. அதோடுமட்டுமல்லாமல், ரும்தெக் மடம், பேமயங்க்செ மடம், ஏன்சே மடம் என பல அழகிய மடங்களும் இம்மாநிலத்தில் சூழ்ந்து நம் மனதை அமைதியில் ஆழ்த்துகிறது.

பெல்லிங்கில் காணப்படும் புத்த பூங்கா, காங்க்டோக்கில் காணப்படும் எம்.ஜி.மார்க், சோம்கோ ஏரி, காங்க்டோக்கிற்கு அருகில் காணப்படும் நாது லா கணவாய் என இன்னும் பல இடங்கள் நாம் பார்க்க வேண்டிய இடப்பட்டியலில் சேர்ந்து நம் மனதை காட்சிகளால் இதமாக்குகிறது.

Virtous One

சிம்லா:

சிம்லா:


2010ஆம் ஆண்டு, சிம்லாவை புகை இல்லா நகரமாக அறிவிக்கப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரமான இவ்விடம், சுற்றுலா பயணிகளால் அதிகம் பார்க்கபடும் பிரசித்திபெற்ற ஒரு இடமாகும். இந்த நகரத்தை சுற்றி மந்தி, குள்ளு, கின்னூர், உத்தரகான்ட் ஆகிய இடங்கள் காணப்பட, சுற்றுலா பயணிகள் விடுமுறையென்றாலே வந்து செல்லும் ஒரு இடமாக சிம்லா மாறிவிட்டது என்பதே உண்மை.

குளிர்காலத்தில் குப்ரியின் பல இடங்களை நாம் பார்ப்பதோடு பனிச்சறுக்கு மற்றும் பயணத்தின் மூலமாகவும் மனமகிழலாம். கல்காவிற்கு செல்லும் பொ���்மை இரயில் பயணம், சைல் மலை நோக்கி அழகிய ஏற்ற பயணம், என இந்த சிம்லாவில் நாம் பார்த்து பரவசமடைய வேண்டிய இடங்கள் பல காணப்படுகிறது.

Ashwin Iyer

ஹிமாச்சல பிரதேசம்:

ஹிமாச்சல பிரதேசம்:

இயற்கை அழகால் எங்கும் சூழ்ந்த ஓர் அழகிய இடம் தான் ஹிமாச்சல பிரதேசமாகும். கம்பீரமான இமய மலையும், பெருமைப்பட வைக்கும் நதியும் நாம் இந்த மாநிலத்தை காண முதன்மை காரணமாக விளங்குகிறது. சிம்லா���ை தொடர்ந்து, ஹிமாச்சல பிரதேசம் தான் புகை இல்லா மாநிலமாக இரண்டாவதாக அறிவிக்கப்பட்டதாகும்.

சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இந்த இடம், சிம்லா, குள்ளு, மணலி, தர்மசாலா, தல்ஹௌசி, சம்பா, கங்க்ரா, கசௌலி என இன்னும் பார்க்க வேண்டிய இடப்பட்டியலானது நீண்டுகொண்டே செல்கிறது.

Michael Scalet

 கோஹிமா:

கோஹிமா:


இறுதியாக, புகையற்ற இடமாக கடைசியில் அறிவிக்கப்பட்ட க��ஹிமாவை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இதன் தலைநகரமாக...புகையால் அதிகம் பாதிக்கப்பட்டு பின் புகை இல்லா இடமாக மாறிய நாகாலாந்து காணப்படுகிறது. இங்கே பேரின்பம் தரக்கூடிய மலையை நாம் பார்க்க, அதன் மடியில் தவழ்ந்து இயற்கையை நம் தாயாக நினைத்து மனதில் பெருமிதத்தை பொங்க செய்கிறோம்.

அனகமணி நாகா பழங்குடியினரால் இவ்விடம் ஆதிக்கம் செலுத்தப���பட, இதனை முந்தைய காலத்தில் கேவிரா என்றழைத்தனர். அப்படி என்றால், ‘கெவி மலர்களால் சூழ்ந்த நிலம்' என அர்த்தமாகும். இன்றும், இதனை உள்ளூர் மக்கள் இவ்வாறே அழைத்து வருகின்றனர்.

இங்கே கால நிலையானது கடுமையாக இருக்க, கோஹிமாவுக்கு கோடைக்காலத்தில் நாம் விரைவதன் மூலம் இனிமையானதோர் பயணமாக அது நமக்கு அமைகிறது. மேலும், இங்கே நாம் பார்க்கவேண்டிய சில இடங்களாக...கோஹிமா அருங்காட்சியகம், கோஹிமா உயிரியல் பூங்கா, ஷூகோ பள்ளத்தாக்கு, ஜப்பூ சிகரம் ஆகியவையும் காணப்படுகிறது

Mike Prince

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X