Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க டிஸ்கவரி சேனல்ல பாக்கரத நேர்ல பாக்க ஆசையா? அப்பறம் என்ன போலாம் வாங்க

நீங்க டிஸ்கவரி சேனல்ல பாக்கரத நேர்ல பாக்க ஆசையா? அப்பறம் என்ன போலாம் வாங்க

இந்த மாதிரி காட்டுக்குள்ள ஒரு சுற்றுலா போனா எப்படி இருக்கும்?

By Udhaya

இந்தியா பல்வேறு வகையான உயிரினங்கள் வாழும் நாடாகும். பல்லுயிர்ப் பெருக்கத்தில் உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகளவிலான வகை உயிரினங்கள் இந்தியாவில் வசித்து வருகின்றன.

இமய மலைத் தொடங்கி, கிழக்கு மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகள் என இந்தியாவின் காடுகள் பரந்து விரிந்துள்ளன. வன சுற்றுலாப் பிரியர்களுக்கு ஏற்ற இடமாகவும் இவை அமைகின்றன.

பொதுவாக காடுகளில் சுற்றுலா செல்லவிரும்புபவர்கள் தைரியமானவர்களாகவும், தனிமை விரும்பிகளாகவும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நீங்கள் தனிமை விரும்பிகளானாலும் சரி,நண்பர்களுடன் குதூகலிப்பவர்களானாலும் சரி இந்த காட்டு சுற்றுலாவை நிச்சயம் விரும்புவீர்கள். வாருங்கள் ஒரு ரவுண்ட் போகலாம்.

ரந்தம்பூர் தேசிய பூங்கா, ராஜஸ்தான்

ரந்தம்பூர் தேசிய பூங்கா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்கா, காடுகளாலும் விலங்குகளாலும் சூழப்பட்டது.

முற்காலத்தில் அரசர்களின், வேட்டையாடும் தளமாக அமைந்திருந்ததாகவும், பின்னர் உயிரி காப்பகமாக ஆக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.


PC: Pavan Gupta

ரந்தம்பூர் தேசிய பூங்கா, ராஜஸ்தான்

ரந்தம்பூர் தேசிய பூங்கா, ராஜஸ்தான்


முக்கியமாக பறவைகள் மற்றும் புலிகள் இந்த பகுதியின் முக்கிய சின்னமாக விளங்குகிறது.

ஜெய்ப்பூரிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பூங்கா.

PC: Ajit Dharmik

சுந்தர்வன தேசிய பூங்கா, மேற்கு வங்கம்

சுந்தர்வன தேசிய பூங்கா, மேற்கு வங்கம்

இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தில் முக்கியபங்கு வகிப்பது சுந்தர்வனக் காடுகளாகும்.

இக்காடுகள், புலிகளுக்கு பெயர் பெற்றவை. இங்கு நீங்கள் புலிகளைக் காண்கிறீர்களோ இல்லையோ, இந்த காடுகளை முழுவதும் காண்பதென்பது அசாத்தியமானது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

54 தீவுகளில் பரந்து விரிந்திருக்கும் இந்த காடுகள், மேற்கு வங்கம் முதல் வங்க தேசப் பகுதிகளுக்குள்ளும் அமைந்துள்ளது.

PC: Rob

சுந்தர்வன தேசிய பூங்கா, மேற்கு வங்கம்

சுந்தர்வன தேசிய பூங்கா, மேற்கு வங்கம்


கொல்கத்தாவிலிருந்து 95கிமீ தொலைவில் அமைந்துள்ளன சுந்தர்வன காடுகள்

கண்டிப்பாக காணவேண்டியவை வங்கப் புலிகள், முதலைகள், பாம்புகள், டால்பின்கள்

PC: Arindam Bhattacharya

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, உத்தரகண்ட்

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, உத்தரகண்ட்

உத்தரகாண்ட்டின் நைனிட்டால் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜிம் கார்பெட் தேசிய பூங்கா. புலிகள் பாதுகாப்பு பகுதியான இது பல புலிகளின் புகலிடமாக அமைந்துள்ளது.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், வெள்ளைப் புலியை காணலாம்.

PC: Arindam Bhattacharya

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, உத்தரகண்ட்

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, உத்தரகண்ட்


புதுடெல்லியிலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஜிம் காடுகள்.

காணவேண்டியவை புலிகள், புள்ளி மான்கள், யானைகள், சாம்பார் மான்கள்

PC: P K Gupta VNS

கிர் காடுகள், குஜராத்

கிர் காடுகள், குஜராத்


குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கிர் காடுகள், அம்மாநிலத்துக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது.

இந்த காடுகளின் சிறப்பு இந்தியாவில் வேறு எங்கும் அதிகளவில் காண முடியாத ஆசிய சிங்கங்களை இங்கு காணலாம்.

PC: Abhishek Patel

கிர் காடுகள், குஜராத்

கிர் காடுகள், குஜராத்


அகமதாபாத்திலிருந்து ஜுனகாத் என்னும் சிறு நகரம் சென்று அங்கிருந்து கிர் காடுகளுக்கு நாம் எளிதாக செல்லமுடியும்.

PC: Nehal Shaikh

பன்னர்கெட்டா உயிரியல் பூங்கா, கர்நாடகம்

பன்னர்கெட்டா உயிரியல் பூங்கா, கர்நாடகம்


கர்நாடகத்தின் தென்பகுதியில், அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்காவில், அருங்காட்சியகம், மிருக காட்சி சாலை, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புலிகள் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன.

பெங்களூரு மாநகரிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பூங்கா.

PC: matthew logelin

பன்னர்கெட்டா உயிரியல் பூங்கா, கர்நாடகம்

பன்னர்கெட்டா உயிரியல் பூங்கா, கர்நாடகம்


காண வேண்டியவை

புலிகள், சிறுத்தைகள், யானைகள், புள்ளி மான்கள், வண்ணத்துப்பூச்சிகள், பாம்புகள்.

PC: Shawn

காசிரெங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம்

காசிரெங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம்

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்துக்கு பெயர் பெற்ற காசிரெங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

கவுகாத்தி நகரத்திலிருந்து 5 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது காசிரெங்கா தேசிய பூங்கா.

PC : Scott Anderson

 காசிரெங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம்

காசிரெங்கா தேசிய பூங்கா, அஸ்ஸாம்


காணவேண்டியவை புலிகள், காண்டாமிருகங்கள், யானைகள், காட்டெருமைகள்

PC: MissDaisy44

பெரியார் தேசிய பூங்கா, கேரளம்

பெரியார் தேசிய பூங்கா, கேரளம்

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்த மலைக் காடு புலிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்துவருகிறது.

மலையில் அமைந்துள்ளதாலும், மழைவளம் குறையாததாலும் எப்போதும் பசுமையாக காட்சிதரும் இந்த பூங்கா கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கிறது.

PC: emy de lema

பெரியார் தேசிய பூங்கா

பெரியார் தேசிய பூங்கா

கொச்சினிலிருந்து 3 மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது பெரியார் தேசிய பூங்கா.

காணவேண்டியவை

யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், பாம்புகள்

PC: Monika & Tim

பந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்

பந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பந்தவ்கர் தேசிய உயிரியல் பூங்கா, புலிகளுக்கும், குரங்குகளுக்கும் பெயர்பெற்றது.

இங்கு வெள்ளைப் புலிகளும் காணப்படுகின்றன.

பந்தவ்கருக்கு நேரடி பேருந்து வசதியோ, பிற வசதிகளோ இல்லை. எனினும் ஜபல்பூரிலிருந்து டாக்ஸி மூலம் எளிதாக சென்றடையலாம்.


PC: cowyeow

பந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்

பந்தவ்கர் தேசிய பூங்கா, மத்தியபிரதேசம்


காணவேண்டியவை

வங்கப் புலிகள், யானைகள், மான்கள் மற்றும் பல வகையான பறவையினங்கள்.

PC: Jörgen Larsson

ஹெமிஸ் தேசிய பூங்கா, ஜம்மு காஷ்மீர்

ஹெமிஸ் தேசிய பூங்கா, ஜம்மு காஷ்மீர்

கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் அமைந்துள்ளது இந்த ஹெமிஸ் தேசிய பூங்கா. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் பனி சிறுத்தை, சிவப்பு நரி, திபெத் ஓநாய் என பல்வேறு வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.

PC: On Being

ஹெமிஸ் தேசிய பூங்கா, ஜம்மு காஷ்மீர்

ஹெமிஸ் தேசிய பூங்கா, ஜம்மு காஷ்மீர்


லே மாவட்டத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு, கல்கா ரயில் நிலையத்திலிருந்து செல்ல நிறைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காணவேண்டியவை

பனிச்சிறுத்தைகள், சிவப்பு நரிகள், திபெத்திய ஓநாய்கள், நீல ஆடுகள்

PC: Jo Dale

இமாலயன் தேசிய பூங்கா, இமாச்சல பிரதேசம்

இமாலயன் தேசிய பூங்கா, இமாச்சல பிரதேசம்


இமாச்சலப் பிரதேசம் குல்லுவில் அமைந்துள்ள இந்த பூங்கா முழுவதும் பனியினால் சூழப்பட்டது போன்று அமைந்துள்ளது.

மலையடிவாரத்தில், பசுமை கொஞ்சும் இயற்கை. தன் பச்சைவண்ண புடவையை விரித்தாற்போல் காணும் இடமெல்லாம் பச்சை பசேலென்றே காட்சியளிக்கின்றன.

PC: Shilt Meadow

இமாலயன் தேசிய பூங்கா, இமாச்சல பிரதேசம்

இமாலயன் தேசிய பூங்கா, இமாச்சல பிரதேசம்


குல்லு சமவெளிக்கு டெல்லி, ஹரியானா உட்பட பல்வேறு இடங்களிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

PC: Rohit .

தடோபா, மகராஷ்டிரம்

தடோபா, மகராஷ்டிரம்

இந்தியாவின் மிகப் பெரிய தேசியப் பூங்காக்களில் ஒன்றான தடோபா மகராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது.

புலிகளுக்காகவும், தடோபா முதலைகளுக்காகவும் இப்பூங்கா பிரபலமானது.

PC: Prabhakaran

தடோபா, மகராஷ்டிரம்

தடோபா, மகராஷ்டிரம்


நாக்பூரிலிருந்து எளிதில் செல்லும் வகையில் அமைந்துள்ளது தடோபா.

காணவேண்டியவை

தடோபா முதலைகள்

PC: Bhushan Mate

 நந்தா தேவி, உத்தரகண்ட்

நந்தா தேவி, உத்தரகண்ட்

ஆசிய கருப்புக் கரடிக்கு, பிரபலமான இடம் நந்தா தேவி தேசிய பூங்கா. இங்கு வாழும் கரடிகள் மிக சிறப்பானவை. பத்திரமாக பாதுகாக்கப்படுபவை.

கண்கவர் பூக்களுடன், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களிலும் காணப்படுகின்ற இந்த இடம் சுற்றுலாவுக்கு ஏற்ற சிறந்த தளமாகும்.

PC: Rohit

நந்தா தேவி, உத்தரகண்ட்

நந்தா தேவி, உத்தரகண்ட்


ரிஷிகேஸிலிருந்து விரைவில் செல்லும் வகையில் அமைந்துள்ளது நந்தா தேவி தேசிய பூங்கா.

காணவேண்டியவை

ஆசிய கருப்பு கரடிகள், இமாலய மான்கள்

PC: Loupiote

கஞ்ஜன்ஜுங்கா, சிக்கிம்

கஞ்ஜன்ஜுங்கா, சிக்கிம்

சிவப்பு பாண்டாவுக்கு பெயர் பெற்ற இடம் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள கஞ்ஜன்ஜுங்கா தேசிய பூங்காவாகும்.

இங்கு திபெத்திய ஓநாய்கள், பனிச் சிறுத்தைகள் என பல்வேறு வகையான உயரினங்கள் வாழ்கின்றன.

PC: Andrew Luyten

Read more about: பயணம் travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X