» »முன் ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இது!

முன் ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இது!

Posted By: Udhaya

ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது.

உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும் நடுவே ரணக்பூர் அமைந்துள்ளது. இக்கிராமம் 15ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புகழ்பெற்ற ஜெயின் கோயிலை கொண்டிருக்கிறது. இக்கோயில் ஜெயின் சமுகத்தினர் பெரிதும் பூஜிக்கும் கோயிலாக திகழ்கிறது.

இந்த கோயிலின் வசீகரம் அதன் கம்பீரமான தூண்களில் பிரதிபலிக்கிறது. பின்னணியில் முடிவிலா பாலைவனப்பகுதியுடன் இக்கோயில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது.

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரில் சூரிய நாராயணக்கோயில் அல்லது சூரியக்கோயில் என்று அழைக்கப்படும் பிரசித்தமான கோயில் சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. பலகோண வடிவில் அமைக்கப்பட்ட இக்கோயிலின் வெளிச்சுவரில் கிரகங்களின் புடைப்புச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது இப்பிரதேச பூர்வகுடிகளின் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. சூரியக்கடவுள் ஒரு ரதத்தை செலுத்துவது போன்ற சிலை இங்கு காணப்படுகிறது. ரணக்பூருக்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள பிரபல ஜெயின் யாத்ரீகத்தலமான சத்ரி எனும் இடத்தையும் பார்க்கலாம்.

Nagarjun Kandukuru

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரின் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சம் இங்குள்ள முச்சல் மஹாவீர் கோயிலாகும். இது சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ளது. கனேராவ் எனும் இடத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே இந்த கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் மீசையுடன் காணப்படுவது ஒரு வித்தியாசமான அம்சமாகும். மேலும் கனேராவ் கிராமத்திலேயே இன்னும் ஏராளமான கோயில்களும் தரிசிப்பதற்கு உள்ளன. அவற்றில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் இரண்டும் இப்பிரதேசத்தின் முக்கியமான ஜெயின் கோயில்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

Christopher Walker

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரிலிருந்து 6கி.மீ தூரத்திலுள்ள நர்லாய் எனும் கிராமமும் அங்குள்ள ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயில்களின் கலையம்சங்கள் மற்றும் அவற்றின் உள்ளே காணப்படும் சுவர்ச்சித்திரங்கள் ரசிக்கும் விதமாய் காட்சியளிக்கின்றன.

Acred99

ரணக்பூரின் விசேஷங்கள்

ரணக்பூரின் விசேஷங்கள்


மற்றொரு பிரதான விசேஷமாக கும்பல்கர் எனும் வரலாற்றுத்தலமும் அமைந்துள்ளது. இங்குள்ள மேவார் கோட்டை கம்பீரமாக எழுந்து காட்சியளிப்பதுடன் இதன் கோட்டைச்சுவர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. கடல்மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டைப்பகுதியிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் இயற்கை எழிலையும் தார் பாலைவனத்தின் மணற்குன்றுகளின் கம்பீரத்தையும் பார்த்து ரசிக்கலாம். இக்கோட்டை தற்சமயம் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

Flicka

ரணக்பூர் ஜெயின் கோயில், ரணக்பூர்

ரணக்பூர் ஜெயின் கோயில், ரணக்பூர்

ரணக்பூர் ஜெயின் கோயில் ஜெயின் இனத்தாருக்கான ஐந்து முக்கியமான புண்ணிய யாத்ரீகத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் ஆதிநாத பஹவானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மெலிதான நிறம் கொண்ட பளிங்குக்கற்களால் உருவாக்கப்பட்ட இக்கோயில் மிக அழகான தோற்றத்தைக்கொண்டுள்ளது.

Gprakashjain

சூரிய கோயில்

சூரிய கோயில்

சூரிய கோயில் அல்லது சூரிய நாராயண கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ரணக்பூர் ஜெயின் கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இக்கோயிலின் அறுகோணவடிவில் அமைந்த சுற்றுச்சுவர்களில் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் கிரகங்களின் சிற்பவடிப்புகள் காணப்படுகின்றன.

Acred99

சத்ரி

சத்ரி


சத்ரி எனும் இந்த ஸ்தலம் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் முக்கியமான வழிபாட்டுத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. முற்காலத்தில் இது ‘மேவாரின் மார்வார் வாசல்' என்றும் அறியப்பட்டுள்ளது. ஜைன சமூகத்தினரின் முக்கியமான ஆன்மீகத் திருத்தலமாக இது புகழ்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 முச்சல் மஹாவீர் கோயில்

முச்சல் மஹாவீர் கோயில்

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் இந்த முச்சல் மஹாவீர் கோயில் மஹாவீரருக்காக எழுப்பப்பட்டதாகும். இது கனேராவ் கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.

கனேராவ்

கனேராவ்

கனேராவ் என்றழைக்கப்படும் இந்த கிராமத்தில் பல அழகிய சிறு ஹிந்துக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரசித்தமான ரணக்பூர் சுற்றுலாத்தலத்துக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக திகழ்கிறது. இப்பிரதேசத்தில் உள்ள 11 ஜெயின் கோயில்களில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் ஆகிய இரண்டும் பிரசித்தமானவை ஆகும்.

 நர்லய்

நர்லய்

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் இந்த நர்லய் ஆகும். இது சுற்றுலா நகரமான ரணக்பூரிலிருந்து 6கி.மீ தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் பல ஹிந்துக்கோயில்கள் மற்றும் ஜெயின் கோயில்களை சுற்றுலாப்பயணிகள் காணலாம்.

Clément Bardot

கும்பல்கர்

கும்பல்கர்

ரணக்பூர் சுற்றுலாத்தலத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கும்பல்கர் ஒரு வரலாற்றுத்தலமாகும். இது இங்குள்ள மேவார் கோட்டைக்கு புகழ் பெற்றுள்ளது. இந்தக்கோட்டை ராணா கும்பா எனும் மன்னரால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டையிலிருந்து பயணிகள் 10கி.மீ தூரத்திற்கு ஆரவல்லி மலைத்தொடரையும் மற்றும் தார் பாலைவன மணற்குன்றுகளையும் பார்த்து ரசிக்கலாம்.

தேசுரி

தேசுரி

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் இந்த தேசுரி ஆகும். இது ரணக்பூரிலிருந்து 16கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு சிவன் கோயில், நவி மாதா கோயில் மற்றும் ஹனுமான் கோயில் போன்ற பிரசித்தமான கோயில்கள் அமைந்துள்ளன. மேலும், தேசுரி கிராமத்துக்கு அருகிலேயே உள்ள மலைப்பகுதியில் பிரசித்தமான பரசுராம் மஹாதேவ் கோயிலும் அமைந்துள்ளது.

பயணம் மேற்கொள்ள சிறந்த வழிகள்

பயணம் மேற்கொள்ள சிறந்த வழிகள்

சாலை மார்க்கமாக:

ஜெய்பூர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்களிலிருந்து ரணக்பூர் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சுலபமாக சாலை மார்க்கத்திலும் பயணம் மேற்கொள்ளலாம்.

பயணம் மேற்கொள்ள சிறந்த வழிகள்

பயணம் மேற்கொள்ள சிறந்த வழிகள்

விமான மார்க்கமாக:

உதய்பூரிலுள்ள மஹாராணா பிரதாப் விமான நிலையம் அல்லது தபோக் விமான நிலையம் ரணக்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். இது முக்கிய இந்திய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளைக்கொண்டுள்ளது.வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் டெல்லியிலுள்ள இந்திரா காந்தி விமான நிலையம் வழியாக இணைப்புச்சேவைகள் மூலம் வருகை தரலாம்.

ரயில் மூலமாக:

மேலும், ரணக்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் ஃபால்னா எனும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களிலிருந்து ஃபால்னா ரயில் நிலையத்துக்கு ரயில் சேவைகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் பேருந்து வசதிகள் ரணக்பூர் வருவதற்கு கிடைக்கின்றன.

 பயணம் மேற்கொள்ள சிறந்த காலம்

பயணம் மேற்கொள்ள சிறந்த காலம்

ரணக்பூர் கிராமத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள உகந்த காலம் குளிர் காலமாகும். இக்காலத்தில் பருவநிலை இனிமையானதாகவும் சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாகவும் உள்ளது.

Read more about: rajasthan, travel