Search
  • Follow NativePlanet
Share
» »அபிநந்தன் ஒப்படைக்கப்படும் இடத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த விசயங்கள் தெரியுமா?

அபிநந்தன் ஒப்படைக்கப்படும் இடத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த விசயங்கள் தெரியுமா?

By Staff

வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக சுதந்திரம் பெற வேண்டி இந்தியா கொடுத்த விலை தான் 'இந்தியா - பாகிஸ்தான்' பிரிவினையாகும். மதத்தின் அடிப்படையில் நடந்த இந்த பிரிவினையின் காரணமாக 1947ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை இரண்டு நாடுகளும் ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்திருக்கின்றன.இரண்டு போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இரு நாடுகளின் எல்லைகளும் இரவு பகல் பாராமல் ராணுவ வீரர்களால் கண்காணிக்கப்படுகிறது.

இவையெல்லாம் போதாதென்று வாகாஹ் எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை இணைக்கும் சாலையில் தினமும் நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு நிழல் யுத்தமே நடக்கிறது. வண்ணமயமான அந்த நிகழ்வை பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான ரகசியங்களையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

பஞ்சாப் மாநிலத்தில் அதன் தலைநகரான அம்ரித்சரில் இருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது 'வாகாஹ் எல்லை'. இந்த இடத்தின் ஊடாகத்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலை அமைந்திருக்கிறது. இங்கு ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்திற்கு இரண்டு மணிநேரம் முன்பாக கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Photo: Stefan Krasowski

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

இந்த கொடியிறக்க நிகழ்வின் போது இருநாட்டு வீரர்களும் தங்களின் எல்லை கதவுகளை திறந்து தலை உயரத்திற்கு கால்களை ஓங்கி அடித்து பின் மூன்று முறை கைகுலுக்குகின்றனர்.

Bino Caina

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

அந்த கைகுலுக்கல் முடிந்த பிறகு பிறகு இரண்டு நாட்டு வீரர்களும் ஒரே சமயத்தில் தங்களுடைய புஜங்களை உயர்த்திக்காட்டியும், தலைப்பாகையை சரி செய்தும் போர் முழக்கமிடுகின்றனர்.

புகைப்படம் : Stefan Krasowski

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

அதன் பிறகு இருநாட்டு வீரர்களும் ஒரே சமயத்தில் தங்கள் நாட்டு கொடிகளை இறக்கி அதனை தக்க மரியாதையுடன் கொண்டு செல்கின்றனர்.

புகைப்படம் : Bino Caina

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

இந்த நிகழ்வானது இரு நாடுகளிக்கிடையே சகோதரத்துவத்துவத்தையும், நட்புறவையும் வளர்க்கும் பொருட்டு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தப்படுகிறது.

புகைப்படம் : Abhishek Baxi

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

இந்த நிகழ்வை படம்பிடிக்க வந்த பிரபல பிரிட்டிஷ் நடிகரான மைக்கில் பேலின் என்பவர் "மிகத்துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும் அவமதிப்பு" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

புகைப்படம் : Bino Caina

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

இந்த நிகழ்வை கூர்ந்து கவனித்தால் அடுத்தவரின் முகத்தை உதைக்கும் விதமாக கால்களை தலை அளவுக்கு உயர்த்துவதும், நெஞ்சை உயர்த்தி போர் முழக்கமிடுவதும் அவர் அப்படி சொன்னது உண்மைதானோ என்று நினைக்க தோன்றும்.

புகைப்படம் : Bino Caina

வாகாஹ் எல்லை :

வாகாஹ் எல்லை :

இந்தியராக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் கட்டாயம் பார்க்கவேண்டிய விஷயமாகும் இந்த வாகாஹ் எல்லை கொடியிறக்க நிகழ்வு.

பஞ்சாபில் இந்த வாகாஹ் எல்லையை ஒட்டியே ஜாலியன் வாலாபாக் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இருக்கின்றன. அவற்றைப்பற்றி அடுத்த பக்கத்தில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

H Savage

ஜாலியன்வாலாபாக் :

ஜாலியன்வாலாபாக் :

பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரசில் அமைந்திருக்கிறது ஜாலியன்வாலாபாக்.

இங்கே 1919ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்தின் போது அமைதி வழியில் போராட குழுமியிருந்த ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் ஜெனரல்.டயர் என்பரின் உத்தரவின் பெயரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜாலியன்வாலாபாக் :

ஜாலியன்வாலாபாக் :

இந்திய சுதத்திர போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்றாக ஜாலியன்வாலாபாக் படுகொலை இருக்கிறது. இன்றும் இங்குள்ள சுவர்களில் அந்த படுகொலையின் போது சுடப்பட்ட குண்டுகள் ஏற்படுத்திய தடயங்களை காணலாம்.

ஜாலியன்வாலாபாக் :

ஜாலியன்வாலாபாக் :

இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத நிகழ்வாகிப்போன அந்த படுகொலை நடந்த இடத்திற்கு நிச்சயம் ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.

ஜாலியன்வாலாபாக் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

பொற்கோயில் :

பொற்கோயில் :

சீக்கியர்கள் அதிகமாக வாழும் பஞ்சாப் மாநிலத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அவர்களின் புனித கோயிலான 'ஸ்ரீ ஹர்மந்திர் சாஹேப்' தான். இக்கோயில் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டிருப்பதால் 'பொற்கோயில்' எனவும் அழைக்கப்படுகிறது.

பொற்கோயில் :

பொற்கோயில் :

நான்கு வாயிலை கொண்டிருக்கும் இக்கோயிலுக்கு சர்வ மதத்தினரும் எந்த தடையும் இன்றி வரலாம்.

இக்கோயிலினுள் தான் சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த சாஹேப்' வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர்.

பொற்கோயில் :

பொற்கோயில் :

இக்கோயிலை சுற்றியிருக்கும் குளம் 'அம்ரித்சர்' அதாவது அம்ரிதகுளம் என்று அழைக்கப்படுகிறது. இக்குளத்தில் கால்களை கழுவிய பிறகே பொற்கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

இந்த குளத்தின் பெயரே அம்ரித்சர் நகருக்கும் அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

பொற்கோயில் :

பொற்கோயில் :

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள இடங்களை காண பஞ்சாப் சென்றால் அங்கு கிடைக்கும் அதிசுவையான தந்தூரி உணவுகளை சுவைக்கவும் மறந்துவிடாதீர்கள்.

பஞ்சாப் மாநிலத்தை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழின் ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more