Search
  • Follow NativePlanet
Share
» »ஆந்திர மாநிலத்தின் அட்டகாச அருவிகளுக்கு போகலாமா?

ஆந்திர மாநிலத்தின் அட்டகாச அருவிகளுக்கு போகலாமா?

ஆந்திர பிரதேசம் அதற்குரிய கோடைக்கால சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. அவற்றுக்கு போகும் வழியில் என்னெவெல்லாம் பார்க்கலாம் என்றும் காண்போம் வாருங்கள்.

By Udhaya

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் மாவட்ட மக்களுக்கு ஆந்த பிரதேசமும் கர்நாடகமும் அருகாமை மாநிலங்கள். இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் அடிக்கடி ஆந்திர பிரதேசம் சென்று வருவது இயல்பான விசயம்தான். அவர்கள் முழுமையாக திட்டமிடல் இன்றி ஆந்திரமாநிலத்துக்கு சென்று வருகிறார்கள். இந்த கோடையில் ஆந்திர மாநிலத்துக்கு சுற்றுலா செல்லவேண்டும் என்றால் நம்மில் பலருக்கு பெரிய திட்டம் ஒன்றும் இருக்காது. ஏனெனில் இயல்பிலேயே ஆந்திர மாநிலம் மிகுந்த வெப்பக்காடு. இங்கே சுற்ற என்ன இருந்துவிடப் போகிறது என்று நமக்குள்ள ஒரு எண்ணம் இருக்கும். கேரள மாநிலம் போன்று இல்லை என்றாலும் ஆந்திர பிரதேசம் அதற்குரிய கோடைக்கால சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. அவற்றுக்கு போகும் வழியில் என்னெவெல்லாம் பார்க்கலாம் என்றும் காண்போம் வாருங்கள்.

ஆந்திராவின் அருவிகள்

ஆந்திராவின் அருவிகள்

ஆந்திர மாநிலம் என்னதான் வெப்பக்காடாக அறியப்பட்டாலும், இங்கும் சில அருவிகள் காணப்படுகின்றன. அவற்றில் கைலாசகோனா அருவி, பஞ்சலகோனா அருவி, கைகல அருவி, எத்திப்போதலா அருவி, தலக்கோனா அருவி மற்றும் தடா அருவி ஆகியன மிக முக்கியமானதாகும்.

இவற்றில் கைலாசகோனா அருவியும், கைகல் அருவியும் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. மேலும் சித்தூர் மாவட்டத்தில் இன்னும் இரு அருவிகள் காணப்படுகின்றன. அவை தலக்கோனா மற்றும் தடா நீர்வீழ்ச்சி ஆகும். நெல்லூரில் ஒரு அருவியும், குண்டூரில் ஒரு அருவியும் காணப்படுகிறது. வாருங்கள் எல்லா அருவிகளுக்கு ஒரு பயணம் சென்று வருவோம்.

Rajib Ghosh

கைலாச கோனா அருவி

கைலாச கோனா அருவி

இந்த அருவி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணவனம் மண்டல் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ஒரு கோயிலும் அமைந்துள்ளது. இந்த அருவி 40 அடி உயரம் கொண்டதாகும். இங்கு வருடம் முழுதும் நீர் கொட்டும். இதைத் தொடர்ந்தே மொத்தம் 3 நீர் வீழ்ச்சிக்கள் அமைந்துள்ளது. சிவன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள நீர்வீழ்ச்சி முக்கிய அருவியாகும். மற்ற இரண்டும் இதைவிட சிறியதுதான். இவை விழுந்து இரு குளங்கள் உருவாகின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

எப்படி செல்லலாம்

ஊத்துக்கோட்டை - புத்தூர் - திருப்பதி சாலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி, முக்கிய அருவிக்கு நீங்கள் கார் மூலமாகவே எளிதில் செல்லமுடியும். இங்கு கார் நிறுத்துவதற்கான அமைப்பும் உள்ளதால் பயமின்றி காரை நிறுத்திவிட்டு மகிழச் செல்லலாம். கார் நிறுத்தும் இடத்திலிருந்து 5 நிமிடங்களில் நீர்வீழ்ச்சியை அடையலாம்.

கைலாசகோனா கடப்பாவிலிருந்து சென்னை வரும் தடமான தேநெஎ 40ல் அமைந்துள்ளது. ஒருவேளை நீங்கள் திருப்பதியிலிருந்து செல்லவிரும்பினால், 44கிமீ தூரம் பயணிக்கவேண்டியிருக்கும். இந்த இடத்திலிருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் எளிதில் கிடைக்கின்றன.

பேருந்து வழித்தடம் - திருப்பதியிலிருந்து சத்யவீடு செல்லும் பேருந்தில் கைலாசகோனாவில் இறங்கவேண்டும்.

ரயில் வழித்தடம் - திருப்பதி புத்தூர் செல்லும் ரயிலில் புத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்துகள் கைலாசகோனத்துக்கு செல்கின்றன.

Rahuljoseph ind

 பெஞ்சக்கோனா நீர்வீழ்ச்சி

பெஞ்சக்கோனா நீர்வீழ்ச்சி

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே ராபூர் பகுதியில் அமைந்துள்ளது பெஞ்சக்கோனா எனும் கிராமம். இங்கு அமைந்துள்ள நீர்வீழ்ச்சி என்பதால் கிராமத்தின் பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது. இது நெல்லூர் நகரிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

லட்சுமி நரசிம்மர் கோயில்

பஞ்சலக்கோனாவில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த இடத்தில் மேலும் பல சிறப்புகள் இருந்தாலும், இந்த கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

எப்படி செல்லலாம்

நெல்லூரிலிருந்து நேரடி பேருந்து மூலமாக 78 கிமீ தூரம் பயணம் செய்து இந்த கோயிலை அடையமுடியும். திருப்பதியிலிருந்து இது 113கிமீ ஆகும்.

ரயில் மூலமாக வருவதென்றால் ராபூர் ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பேருந்துகளில் பயணிக்க வேண்டும். நீங்கள் சென்னையிலிருந்து பயணிக்க விரும்பினால் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லூர் நோக்கி பயணிக்கவேண்டும்.

கைகல் நீர்வீழ்ச்சி

40அடி உயரத்திலிருந்து கொட்டும் கைகல் நீர்வீழ்ச்சி சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது துமுகுரல்லு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. கைகல் எனும் கிராமத்திலிருந்து 2.5கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.

எப்படி செல்லலாம்

கோலாரிலிருந்து 55கிமீ தொலைவிலும், ஹார்ஸ்லி மலைகளிலிருந்து 92கிமீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 142கிமீ தொலைவிலும், சித்தூரிலிருந்து 68 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பாலமனார் - குப்பம் சாலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி. மிகப்பெரிய பாறையை பிளந்துகொண்டு கொட்டினாற்போல 40அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. கௌன்டின்யா பல்லுயிர் காடுகளில் நீர் ஆவியாகி, மலைமீது சேர்ந்து அங்கிருந்து இந்த பாறை வழியாக நீர் வழிந்தோடுகிறது. இப்படி இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது.

Chandu3782

எத்திப்போத்தலா நீர்வீழ்ச்சி

எத்திப்போத்தலா நீர்வீழ்ச்சி

ஆந்திர மாநிலம் குண்டூரில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சந்திரவங்கா ஆற்றில் சேர்கிறது. இது கிருஷ்ணா நதியின் கிளையாறாகும்.

நாகர்ஜூனா சாகர் அணையில் இருந்து11 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். இந்த அருவிக்கு செல்லும்போதே நாகர்ஜூனா சாகர் அணைக்கும் சேர்த்து செல்வதற்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள். இது மலைப்பாதை என்பதால் இங்கு அதிகம் வாகனங்கள் செல்வதில்லை. எனவே சுய வாகனபயன்பாடு என்பது இங்கு முக்கியமான ஒன்றாகும்., காரை வாடகைக்கு எடுத்து வருதலும் சிறப்பு. மாச்செரிலா சாலையிலிருந்து 7-8 கிமீ தூரம் கடந்த பின், இடதுபுறத்தில் உங்களை வரவேற்கும்படியான சாலை குறியீடு இருக்கும். அந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழி என எழுதப்பட்டிருக்கும். நுழைவுக் கட்டணம் செலுத்தி உள்செல்லவேண்டும். அதிகபட்சம் நுழைவு கட்டணம் 30 வரை இருக்கும். இங்கிருந்து எத்திப்போதலா நீர்வீழ்ச்சிக்கு எளிதில் சென்றடையலாம். இங்கிருந்து ஹைதராபாத் 193கிமீ தூரம் ஆகும்.

எப்போது செல்லலாம்

மழைக்காலம் கழிந்து ஜூலை முதல் பிப்ரவரி வரை செல்வது சிறப்பாகும். எனினும் சில சமயங்களில் கோடை மழைக்காலத்திலும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

சங்க்டா அருவி

அரக்கு பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சங்க்டா அருவி, கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அழகிய குன்றுகள் மீது ஓவியம் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருவி சங்க்டா கிராமத்திற்கு வெகு அருகாமையில் அமைந்திருப்பதால் அதன் பெயராலேயே சங்க்டா அருவி என்று அழைக்கப்படுகிறது. சங்க்டா அருவியை சூழ அமைந்திருக்கும் அடர் வனங்களின் பேரமைதியை குலைக்கின்ற ஒரே பேரொலி அருவியின் ஆர்பரிப்பே அன்றி வேறில்லை. இவ்வாறு அமைதியும், ஆர்பரிப்பும் ஒன்றென திகழும் புதுமையான சங்க்டா அருவியை நோக்கி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைகடலென வந்து கொண்டே இருக்கிறது.

Abhinaba Basu

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி

வெய்யிலிங்கல கோணா நீர்வீழ்ச்சி ஸ்ரீ காளஹஸ்தி நகரத்திற்கு அருகில், நகர எல்லையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிற்காட்சிகளை கொண்டிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழாமல் திரும்புவதில்லை.

தெலுங்கு மொழியில் இந்த நீர்வீழ்ச்சியின் பெயருக்கு" ஆயிரம் லிங்கங்கள் கொண்ட பள்ளத்தாக்கு" என்பது பொருள். நீர்வீழ்ச்சியை சுற்றிலும் உள்ள மலைகள் சிவலிங்கங்கள் போன்று காட்சியளிப்பதே இப்படி ஒரு பெயர் ஏற்படக்காரணமாகும். இந்த நீர்வீழ்ச்சியின் நீர் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுவதால் இதில் நீராடுவதற்காகவே ஏராளமான பயணிகள் விஜயம் செய்கின்றனர். தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சியில் நீராடி வந்தால் சரும வியாதிகள் குணமாகும் என்று கருதப்படுகிறது. அது தவிர பாவங்களை கழுவும் தெய்வீக சக்தியும் இதற்கு உள்ளதாக ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன.

Shruthi Sripada

 தலக்கோணா

தலக்கோணா

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மற்றொரு அருவி இதுவாகும். தலக்கோணா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருவி 270 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இதுதான் ஆந்திர பிரதேச மாநிலத்திலேயே மிக உயரமான அருவி ஆகும்.

சித்தேஸ்வரா சுவாமி கோயில்

ஆந்திர மாநிலத்தின் முக்கிய கோயில்களில் இந்த சித்தேஸ்வரா சுவாமி கோயிலும் ஒன்றாகும். இது தலக்கோணாவில் அமைந்துள்ளது.

சித்தூர் மாவட்டம், யாரவேரிபாலம் மண்டலில் நேரபைலு கிராமத்தில் அமைந்துள்ளது இந்த நீர்வீழச்சி. இது பிலேருவிலிருந்து 49கிமீ தூரத்திலும், திருப்பதியிலிருந்து 58 கிமீ தூரத்திலும், வேலூரிலிருந்து 127கிமீ தூரத்திலும், சென்னையிலிருந்து 220கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

எப்படி செல்வது

ஆந்திர மாநில பேருந்துகள் பல இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பதியிலிருந்து மதனப்பள்ளி அல்லது பிலேரு வழியாக செல்லும் பேருந்துகளில் நாம் பயணிக்கலாம். பாகர் பேட் எனும் இடத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை கார் அல்லது ஆட்டோக்களில் பயணிக்கமுடியும்.

K A UDAY

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X