Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் நண்பர்களுடன் ஜில்லுன்னு ஆட்டம் போட சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த இடங்களுக்கு போங்க!

உங்கள் நண்பர்களுடன் ஜில்லுன்னு ஆட்டம் போட சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த இடங்களுக்கு போங்க!

சென்னையை தவிர மற்ற எல்லா மாவட்டங்களும், ஏன் எல்லா மாநிலங்களும் கூட தென்மேற்கு பருவமழையினால் நனைய ஆரம்பித்து விட்டன. ஆந்திராவில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் சென்னைக்கு அருகாமையில் இருந்த நீர்வீழ்ச்சிகள் அனைத்திற்கும் நீர் வரத்து வர ஆரம்பித்துள்ளது. ஆனால் சென்னைவாசிகளாகிய நாம் இன்னமும் அனலையும், சூட்டையும் மட்டும் தான் அனுபவித்து கொண்டிருக்கிறோம். அதனால் இந்த வார இறுதியிலேயே, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் சென்னைக்கு பக்கத்தில இருக்கிற, ஜில்லுன்னு நம்ம முகத்தில நீரை வாரி இரைக்கிற, இந்த சூப்பரான நீர்வீழ்ச்சிகளுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமா?

மாமண்டூர் காடுகள்

எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். இந்த வசீகரமான காடுகள் ஆந்திர பிரதேச வனத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகிறது. சிறு சிறு ஓடைகள், குளங்கள், நீர்வீழ்ச்சி, இனிமையான வானிலை என இந்த இடம் மிகவும் குளுமையாக இருக்கிறது.

tadawaterfalls4

தடா நீர்வீழ்ச்சி

சென்னைவாசிகள் பலரும் தடா நீர்வீழ்ச்சி பற்றி அறிந்திருப்பார்கள், கேள்விப்பட்டிருந்தாலும் பலர் சென்றிருக்க மாட்டர்கள். தடா நீர்வீழ்ச்சி உப்பலமுடுகு நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரதையா மண்டேலில் அமைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு அடர்ந்த காட்டில் அமைந்துள்ளதால் இங்கு ட்ரெக்கிங் செய்வது மிகவும் பேமஸ். மொத்த மலையேற்றம் கிட்டத்தட்ட 10 கிமீ தூரம் ஆகும், வழியில் பல குளங்கள், சுற்றிலும் நல்ல பசுமை போர்வையுடன் அந்த காட்சிகள் யாவும் மனதிற்கு ஒரு வித இதமான உணர்வை தரும்.

ஆரே நீர்வீழ்ச்சி

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரே நீர்வீழ்ச்சி ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதா ஒரு ட்ரெக்கிங் பண்ணினா போதும், அந்த அழகான ஸ்பாட்களில் நாம என்ஜாய் பண்ணலாம். இந்த இடத்தில் இருக்கிற பசுமையும், சிறு சிறு ஓடைகளும், குளங்களும், அழகான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என அந்த இடம் முழுவதுமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. ஆரே நீர்வீழ்ச்சி சென்னையிலிருந்து 90 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

kailasakonawaterfalls2

கயிலாச கோணா நீர்வீழ்ச்சி

நகரி மலையின் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இது, சென்னைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற அருவிகளில் ஒன்றாகும். இது ஒரு சிறிய அடுக்காகும், இது ஒரு பாறையில் பிளவுபட்டு, தரையில் இருந்து 40 அடி உயரத்தில் இருந்து வெளியேறுகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது புத்துணர்ச்சியூட்டும் குளியலுக்குப் பெயர் பெற்றது, ஏனெனில் இங்குள்ள நீர் தூய்மையானது மற்றும் தெளிவானது மற்றும் எந்த நோயையும் குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது.

sadasivakonawaterfalls2

சதாசிவகோணா நீர்வீழ்ச்சி

அடர்ந்த மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுவே இருந்து விழும் குளிர்ந்த நீர் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சதாசிவ கோனா அதன் நீர்வீழ்ச்சிகளுக்கு மட்டும் பிரபலம் இல்லை, இது ஒரு புனித மத ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. தாசிவ பகவான் (சிவபெருமானின் அவதாரம்) அவரது மனைவி காமாக்ஷியுடன் அருவிகளுக்கு அருகில் அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கிறார். மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கார்த்திகை மாசத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தமிழகம் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+