Search
  • Follow NativePlanet
Share
» »மார்ச் 08 அன்று வருகின்ற சிவராத்திரியன்று சென்னையின் இந்த கோவில்களுக்கு செல்லுங்கள் – சிவன் அருள் கிட்டும்!

மார்ச் 08 அன்று வருகின்ற சிவராத்திரியன்று சென்னையின் இந்த கோவில்களுக்கு செல்லுங்கள் – சிவன் அருள் கிட்டும்!

சரியான வேலை கிடைக்கவில்லை, இன்னும் திருமணம் ஆகவில்லை, குழந்தை பேறு இல்லாமல் மிகவும் வாடி வதைகிறோம் என பலருக்கும் பல குறைகள் உண்டு. இப்படி நம் கேக்கும் எதையும் இந்த மகத்தான மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து சிவ பெருமான் ஆசி பெற்றால் வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் ஆலய வழிபாடு என்பது கூடுதல் நன்மைகளை கொடுக்கும். சென்னையில் உள்ள இந்த பழங்கால பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களுக்கு சென்று வாருங்களேன்! அடுத்த சிவராத்திரிக்குள் வாழ்வில் மாற்றம் என்பது நிச்சயம்!

மகா சிவராத்திரி 2024

300 வருடங்களுக்கு பிறகு வரக்கூடிய ஒரு அற்புதமான மகா சிவராத்திரி இது. சுக்ரவாத பிரதோஷமும் மகாசிவராத்திரியும் சேர்ந்து ஒன்றாக மார்ச் 08 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வருகிறது. நீங்கள் கண் விழிக்க வேண்டும் என்று நினைத்தால், இரவு 8.20 மணிக்கு மேல் பூஜையை ஆரம்பித்துவிட்டு, நீங்கள் கண் விழிக்கலாம். ஒரு சிலர் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். 08 ஆம் தேதி முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம். இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று ஓம் நமச்சிவாய என்ற மந்திரம் சொன்னால் போதும். நாம் செய்த பாவங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வுக்கு சிவ பெருமான் நமக்கு ஆசி வழங்குவார்!

சென்னையில் எந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும்

marundheesvarartemple1

மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்

காமதேனு என்ற பசுவானது வசிஷ்ட முனிவரின் சாபத்தைப் போக்க இங்கு சிவனை வழிபட்டது. தினமும் தன் பால் இறைவனுக்குப் படைத்து வந்தாள். ஒரு நாள் சில அரசரின் ஆட்கள் அவளைப் பிடிக்க முயன்றபோது, அவள் தப்பிக்க முயன்றபோது தவறுதலாகத் தன் குளம்புகளால் லிங்கத்தைத் தாக்கினாள். லிங்கம் இன்றும் குளம்பு அடையாளங்களுடன் உள்ளது, மேலும் இறைவன் பால்வண்ணநாதர் என்று அழைக்கப்படுகிறார். வால்மீகி முனிவரும், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்கு வழிப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.

கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்

சிவாலயங்கள் என்று வரும் போது சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயிலை யாரும் மறந்திட முடியாது. தேவி பார்வதியான கற்பகாம்பாள் மயில் வடிவில் இங்கு சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதனால் அந்த இடம் மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. திருஞான சம்பந்தர், சிவன் பக்தரான சிவநேச செட்டியாரின் மகளான பூம்பாவையை சாம்பலில் இருந்து (அவள் பாம்பு கடித்து இறந்த பிறகு) வாழ்க்கையை மீட்டெடுத்தார். மஹா சிவராத்திரி அன்று மயிலை ஜொலிக்கும். இங்கு சென்று வருவது மிகவும் விசேஷமாகும்.

sreeadipureeswaratemple1

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்

சென்னையில் உள்ள சிவாலயங்களிலேயே மிகவும் பழமையானது இந்த ஆதிபுரீஸ்வரர் மற்றும் வடிவுடை அம்மன் கோவில் தான். தியாகராஜ சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் வட சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் பாண்டவர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பாடல் பெற்ற ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணினால் ஆன ஆதிபுரீஸ்வரர் ஒரு வெள்ளி ஓடு போட்டு மூடப்பட்டிருப்பார். மஹா சிவராத்திரி தினத்தன்று மட்டுமே அந்த ஓட்டை எடுத்து தைல அபிஷேகம் செய்வார்கள். அபிஷேகம் செய்த தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சிவராத்திரியன்று இந்த கோவில் விழாக்கோலம் பூணுகிறது.

மாசிலாமணீஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்

சென்னை திருமுல்லைவாயலில் உள்ள புகழ்பெற்ற மாசிலாமணீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். ஒரு மன்னன் தன் யானையின் கால்களில் சிக்கிய படர்தாமரைகளை அகற்றிய போது முல்லைப் படர்களில் சிவலிங்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. மன்னன் சிவலிங்கத்தை நிறுவி, சிவனின் அருளால் போரில் வெற்றி பெற்றான். பகைவரிடம் இருந்து ஜெயிக்க, நினைத்த காரியங்களில் வெற்றி பெற இங்கு வருகை தருவது அவசியம்.

vedapureeswarartemple1

வேதபுரீஸ்வரர் கோயில், திருவேற்காடு

தமிழ்நாட்டின் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள திருவேற்காட்டில் உள்ள புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். சிவபெருமான் அகஸ்தியர் முனிவருக்கு இத்தலத்தில் பார்வதி தேவியுடன் திருமண தரிசனம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அகஸ்தியர் முனிவர் (வடக்கே இமயமலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த) திருமணத்தில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவர் தெற்கு நோக்கிச் சென்று பூமியின் சமநிலையைப் பராமரிக்க சிவபெருமானால் அனுப்பப்பட்டார். அகத்தியர் மனமுருகி வேண்டிக் கொண்டதன் பேரில் சிவபெருமானும் பார்வதி தாயாரும் திருமணக் கோலத்தில் அவருக்கு காட்சியளித்தனர்.

தேனுபுரீஸ்வரர் கோயில், மாதம்பாக்கம்

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலான தேனுபுரீஸ்வரர் கோயில் தென் சென்னை மாதம்பாக்கம் நகரில் உள்ளது. சமஸ்கிருதத்தில் தேனு எனப்படும் பசுவிற்கு இங்கு மோட்சம் வழங்கப்பட்டதால் இக்கோயிலுக்கு தேனுபரீஸ்வரர் என்று பெயர். பிரதான கோவிலில் 6 அங்குல நீளமுள்ள சிவலிங்கம் உள்ளது, தேனுபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அவரது மனைவி பார்வதி தெற்கு நோக்கியும் தனி சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சிவனின் லிங்க வடிவம் சுயம்பு லிங்கமாகும்.

மேற்கூறியவை மட்டுமின்றி, கீழே கொடுக்கப்பட்டுள்ள கோயில்களுக்கும் கூட நீங்கள் செல்லலாம்;

1. ஸ்ரீ மங்களேஸ்வரர் கோவில், அரும்பாக்கம்

2. ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயில், கோயம்பேடு

3. ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் கோயில், நெற்குன்றம்

4. ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில், நங்கநல்லூர்

5. ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில், அனகபுத்தூர்

6. ஸ்ரீ தண்டேஸ்வரர் கோயில், வேளச்சேரி

7. ஸ்ரீ வேர்கட்டீஸ்வரர் கோயில், திருவேற்காடு

8. ஸ்ரீ பரத்வாஜீஸ்வரர் கோயில், கோடம்பாக்கம்

9. ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோயில், பூந்தமல்லி

10. ஸ்ரீ வெங்கலீஸ்வரர் கோயில், வடபழனி

மஹா சிவராத்திரி அன்று சென்னையில் உள்ள ஏனைய கோவில்களும் விசேஷமாக இருக்கும். வீட்டில் பூஜை செய்து வழிப்பட்ட உடன், இந்த கோயில்களில் ஏதேனும் ஒன்றிற்கு சென்று மனமுருகி அய்யனை நினைத்து வழிபடுங்கள். உங்கள் வேண்டுதல்கள் எம்பெருமானின் செவிகளில் விழும், உங்களுக்கு தேவையானவற்றை அய்யன் கொடுப்பார்! ஓம் நமசிவாய!

More News

Read more about: chennai shiva temples
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+