» »மசின குடியில் வந்து குவியும் இளைஞர்கள் - அப்படி என்னதான் இருக்கு அங்க?

மசின குடியில் வந்து குவியும் இளைஞர்கள் - அப்படி என்னதான் இருக்கு அங்க?

Posted By: Udhaya

எங்கே பார்த்தாலும் மசினகுடி யாரைக்கேட்டாலும் மசினகுடி. இந்த பெயர் இளைஞர்கள் மத்தியில் அப்படி ஒரு டிரெண்ட் ஆகிருக்கு. அப்படின்னா என்னனு கேட்பவர்களுக்கு இந்த கட்டுரை.

சாகசங்களை விரும்புபவர்களா நீங்கள்? அதுவும் காடுகளில் பயணம் செய்வது என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.

காசியின் பல முகங்கள்!!!

உண்மையில் இது மாதிரி வேறு இடங்களே இல்லையா அப்படி என்ன பிரமாதம் என்று கேட்கலாம். இதுபோன்று பல இடங்கள் இருப்பினும் இன்று முடிவு செய்து நாளை கிளம்பலாம் என்றால் அது மசினகுடிதான்.

ஆம். தற்போது இளைஞர்கள் அதிகம் பேர் செல்வதும் செல்லவிரும்புவதும் இந்த இடத்துக்குதான். நமக்கு தெரிந்ததெல்லாம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி. ஆனால் இவ்வளவு அழகான இடத்தை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வாங்க அந்த சொர்க்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகு.

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகு.

ஊட்டியில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளார் இந்த பேரழகி. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரமே ஆகிறது. மாநில நெடுஞ்சாலை எண் 700 ஐ தொடர்ந்தால் எளிதில் அடைந்துவிடலாம்.

அல்லது பெங்களூருவிலிருந்தும் இந்த இடத்தை அடையலாம்.

நம்ம ஊரு பக்கத்திலேயே நமக்கு தெரியாம ஒரு அருவி இருக்கு போலாமா?

 சென்னை - பெங்களூரு - மைசூரு - மசினகுடி

சென்னை - பெங்களூரு - மைசூரு - மசினகுடி

ஆபிஸ் எப்பவேணா போய்க்கலாம் மச்சி. சீசன் கிடைக்குமா வா ஒரு வாட்டி போய்ட்டு வந்துடலாம். இப்படித்தான் பலர் தங்கள் நண்பர்களை அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துவிட்டு மசினகுடி அழைத்துச் செல்கின்றனர்.

அடடே. உங்களுக்கு தொந்தரவுலாம் இல்ல. நீங்க வாரவிடுமுறையில் நினைத்தால்கூட போதும். இங்கே வந்து மகிழ்ந்துவிட்டு செல்லலாம்.

சென்னைக்கு மிக அருகில் இப்படி ஒரு நீர்வீழ்ச்சியா? இதுதான் இந்த வீக்என்ட் பிளான்

 ஒரு நெடும் பயணம் உங்கள் வாழ்வை மாற்றும்

ஒரு நெடும் பயணம் உங்கள் வாழ்வை மாற்றும்


இது ஒரு நீண்ட பயணம். இந்த பயணத்தில் நீங்கள் பெங்களூருவிலிருந்து ஆரம்பிக்கலாம்.

பெங்களூருவிலிருந்து பார்க்கும்போது, முதலில் வரும் காடு பந்திப்பூர். இங்கு கோபாலசாமி மலையும் அதனுடன் கோயிலும் அமைந்துள்ளது. இந்த பயணத்தின்போது இங்கு செல்ல மறக்கவேண்டாம்.

கோயில் காலை 8 மணி முதல் மாலை 4மணி வரை திறந்திருக்கும்.

Philanthropist 1

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு போனா இத மட்டும் மறக்காதீங்க....

பந்திப்பூர் காடுகள்

பந்திப்பூர் காடுகள்


இந்த காடுகள் மிகவும் பயங்கரமானவை. நன்கு முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நல்ல காட்சிகளும், விலங்குகளும் இருக்கும். இதைக் கண்டுவிட்டு நம் பயணத்தை தொடர்வோம். முக்கியமாக பந்திப்பூர் காடுகளின் சவாரி பயணத்தை தவறவிடாதீர்கள்.

Yathin S Krishnappa

 தங்கும் விடுதிகள்

தங்கும் விடுதிகள்

இங்கு நன்கு தேர்ச்சி பெற்ற வழிகாட்டிகள் இருக்கின்றனர். அதோடு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவரும் விடுதிகளும் உள்ளன.

வகைவகையான உணவுகளுடன், உங்களை அவை வரவேற்கும்.

 காடு வழி பயணம்

காடு வழி பயணம்

நீங்கள் இந்த காட்டில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். உங்களுக்கு மிக அருமையான வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

 முதுமலை உங்களை வரவேற்கிறது

முதுமலை உங்களை வரவேற்கிறது

பந்திப்பூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது முதுமலை காடுகள். இங்கு சவாரி செய்யும்போது வங்கப் புலிகளையும் காணமுடியும்.

bandipur

கோவையிலிருந்து

கோவையிலிருந்து


மசினகுடி செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று - கோவா - ஊட்டி - குண்டல்பேட்டை நெடுஞ்சாலை. இது 36 கொண்டை ஊசிவளைவுகளைக் கொண்டது.

முதுமலையிலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மசினகுடி.

Chris Stevenson

 பறவை பிரியர்களே

பறவை பிரியர்களே

மசினகுடியும் முதுமலை காடுகளின் ஒருபகுதிதான். இந்த இடம் பறவை பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

மசினகுடி

மசினகுடி


நீங்கள் செல்லும் பயணத்தின் நேர அளவுகளைப் பொறுத்து, நீங்கள் சென்றடையும் நேரம் ஒருவேளை இரவாக அமைந்தால் கவலைப் படவேண்டாம். இங்கு அருகிலேயே தங்கும் விடுதிகள் தரமானதாக அமைந்துள்ளன.

இங்குள்ள விடுதிகளில் தங்கி, இங்கு வரும் பறவைகளின் அழகை ரசிக்கலாம். இரவில் விருந்துகள், கேங் பயர் நடத்தி பொழுதை இன்பமாக்கலாம்.

 அப்படி என்ன தான் இருக்குனு தெரிஞ்சிக்கணுமா

அப்படி என்ன தான் இருக்குனு தெரிஞ்சிக்கணுமா

காலை விடிந்ததும் முதல் வேளையாக மசினகுடியை சுற்றிப் பார்க்கலாம்.

மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை களித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

navaneethkn

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி

தொடர் ஆக்கிரமிப்பால் பசுமை மறைந்து கான்கிரீட் காடாக மாறி வரும் ஊட்டி வார இறுதி நாட்களிலும், கோடை காலத்திலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதால் மாசற்ற இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்கள் ஊட்டியில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த மசினகுடிக்கு செல்லவேண்டும்.

s i n h a

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி


மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோயில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

anuradhac

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி


மசினகுடியில் இருக்கும் வனப்பகுதியில் அதிகாலை 6:30 - 8.30 வரையும், மாலை 3 - 6 வரையும் சபாரி செய்யலாம். இந்த சபாரி பயணத்தின் போது புள்ளிமான்கள், சிங்கவால் குரங்குகள், பலவகையான பறவைகள் போன்றவற்றை கண்டு மகிழலாம். இங்கே ஜீப்,கார் போன்ற வாகனங்களில் செல்வதை காட்டிலும் யானையின் மீது அமர்ந்து வன உயிரினங்களை கண்டு மகிழலாம்.

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி

மசினகுடி - இயற்கையின் ஒட்டுமொத்த பேரழகி


1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

Rocky Barua

 எளிதில் எப்படி செல்லலாம்

எளிதில் எப்படி செல்லலாம்


மசினகுடியை விமானம் மூலமாக சென்றடைய நினைப்பவர்கள் கி.மீ 123 தொலைவில் இருக்கும் கோயம்பத்தூர் விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கார் மூலமாக சென்றடையலாம். சாலை முலமாக செல்ல நினைப்பவர்கள் கோயம்பத்தூரில் இருந்து ஊட்டியின் மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தை அடைந்து அங்கிருந்து 81கி.மீ தொலைவில் இருக்கும் மசினகுடியை அடையலாம்.

சென்னையிலிருந்து எப்படி செல்லலாம்

சென்னையிலிருந்து எப்படி செல்லலாம்


சென்னை உட்பட வடதமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக ஊட்டியை அடைந்து அங்கிருந்து மசினகுடிக்கு செல்லுங்கள். இந்த பயணத்துக்கு கோவைக்கு செல்லவேண்டியதில்லை.

மதுரையிலிருந்து எப்படி செல்லலாம்

மதுரையிலிருந்து எப்படி செல்லலாம்

மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல், திருப்பூர் வழியாக ஊட்டியை அடைந்து அங்கிருந்து மசினகுடியை அடையலாம். இந்த பயணத்துக்கு கோவைக்கு செல்லவேண்டியதில்லை.

19

19

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Basheer Olakara

20

20

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Ashwin Kumar

21

21

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Ashwin Kumar

22

22

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Shuba

23

23

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Joseph Jayanth

24

24

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Joseph Jayanth

 24

24

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Joseph Jayanth

26

26

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Bishu Naik

 27

27

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு


s i n h a

28

28

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

ojasdba

29

29

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Ashwin Kumar

30

30

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Navaneeth KN

31

31

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Navaneeth KN

32

32

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Bishu Naik

33

33

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு
Ashwin Kumar.

34

34

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Bishu Naik

35

35

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Ashwin Kumar

36

36

மசினகுடி - இயற்கையின் மொத்த அழகு

Ashwin Kumar